இது தான் எனக்கு முதல் போஸ்ட்டு (போணி). ரொம்ப நாளா நனைச்சுட்டு இருந்தேன்... இப்ப தான் உலர்ந்தது....
நான் கொஞ்சம் பேஜார் பார்ட்டி - உங்களைப் போலவே!! அது தான் முதல் காரணம் ப்ளாக் செய்ய தொடங்கினதுக்கு. தமிழ் மேல் நிறைய காதல் உண்டு. கர்வம் உண்டு தமிழச்சியாக இருப்பதில். பொழுது தான் இருப்பதில்லை (வீட்டுக்காரர் - அதாங்க ராஜாமணி - சமைச்சு வச்சுட்டாலும், பேருக்கு ஏதோ வேலை செய்தோம்-னு காமிச்சுக்க வேண்டாமா?!) எனக்கு சின்ன புள்ளைங்க உண்டு (அவங்களுக்கு தொல்லை கொடுக்கறதே என் முக்கியமான வேலை .... ஹிஹி...ஹிஹ்ஹி...)
இவ்வளவு இன்ட்ரோ போதும். பெயருக்கேற்றாற் போல், உளற தொடங்குகிறேன். வாருங்க - அதாவது - வாழ்த்துங்க!
23 comments:
வாங்க வாங்க ..வெண்பா எல்லாம் ஆர்வமா எழுதறீங்க.. உங்களின் வலைப்பூ வருகைக்கு நன்றி
அன்புடன்
ஜீவா
யக்கோவ், தமிழச்சியா நீங்க?!!
வாங்க வாங்க.. நான் கூட யோசிக்கிறவரை வம்பு பண்ணினதைப் பார்த்து யாரோ புது தமிழ'ன்' வந்திருக்காருன்னு நினைச்சேன்.. சூப்பர்.. வாங்க..
1. ஜீவா வெண்பா சங்கம் ஒண்ணு வச்சிருக்காரு.. வந்தீங்கன்னா வெண்பா எழுதலாம்
2. நாங்க வ.வா.சங்கம்னு ஒண்ணு வச்சிருக்கோம்.. அதுல சேர்ந்தீங்கன்னா, யோசிக்கிறவரை ஓட்டினது மாதிரி இன்னும் நிறைய "சாகசங்கள்" செய்யலாம்..
வலை பதிவில் புதுப் பெண்பதிவாளரை யானை, அம்பாரி எல்லாம் எடுத்து வந்து வரவேற்கிறேன்.. அடிச்சு தூள் பண்ணுங்க :)
அப்படியே, இந்த ரங்கமணி, நமக்கு ப்ராண்டடு.. "வரப் போகும் ரங்கமணின்னு" நான் தான் இங்க சொல்லுவேன்.. வூட்டுக்காரருக்கு வேற பேர் வச்சீங்கன்னா குழப்பம் வராம நல்லா பேஜார் பண்ணலாம் :)
ஜீவா, வருக, வருக, தங்கள் வரவு நல்வரவு ஆகுக. (நீங்க வாராததினால் உங்களுக்கு மரியாதை, இதே பாருங்க எங்க குடும்பத்து ஆளு - தங்கச்சியை எப்படி கவனிக்கிறேன் பாருங்க).
பொன்ஸ், தங்கச்ச்ச்ச்ச்ச்ச்சீ........ இப்பிடி நீ என்னிய அக்கான்னு பாசமா கூப்பிட்ட அப்புறமும் சும்மா இருந்தா சரியா இருக்குமா? வ.வா.ச. த்தில் ஒரு கண் (இன்னொரு கண் என்னா செஞ்சிட்டு இருந்தது ன்னு எல்லாம் கேக்காத்தே, அழுதுடுவேன் ரெண்டு கண்ணாலயும்) வச்சிட்டு இருக்கேன்... இன்னும் சில நாட்களில், அகில உலக 0.003 ரசிகர்களையும் கூட்டிக்கிட்டு இன்னொரு தலைவலியாக ஐக்கியம் ஆயிடலாம். சூட்கேஸ் ரெடியாகட்டும்.
முதல் போஸ்ட்டுக்கே வந்துட்டாங்கய்யா, டீ-ரைட்டு எல்லாம் தூக்கிட்டு;-)))
அதனால், ரங்கமணி இனி பதவி உயர்ந்து ராஜாமணி ஆனார் (போஸ்டு கரகிட்டு செஞ்சிட்டேன் தங்கச்சி).
இதைப் பாக்கவேயில்லையே. இவ்வளவு நேரம். இப்போ பார்த்தாச்சு.
வாங்க வாங்க. வரேவேற்பும் குடுத்தாச்சு. இனி ஜமாய்ங்க.
வந்துட்டேய்யா! வந்துட்டேன்
அப்படின்னு இன்னொரு அக்கா!
வ.வா.சங்கத்தோட புதரக போர்வாள் ஆற்றலரிசி
பொன்ஸூக்கே அக்கான்னா இது பெரியக்கா.
கீதாக்கா இங்க பாருங்க கெக்கே பிக்கே ன்னு
உங்க கூட குரல் உடரதுக்கு இன்னோரு உடன் பிறவாக்கா.
நம்ம கூட வேகாத சோறு வடிக்கறதுக்கு இல்லை இல்லை
வெண்பா வடிக்க வந்த இந்தக்கா வாழ்க வாழ்க.
(வாழ்க வாழ்க எல்லாம் போடறது சத்தியமா சங்கத்துக்கு
ஆள் புடிக்கறதுக்கு இல்லீங்க்கா.)
அப்புறமா ஆப்பு வெக்கலாங்கறீங்களா.
(எத்தன அக்காடா சாமி )
//ரங்கமணி இனி பதவி உயர்ந்து ராஜாமணி ஆனார் (போஸ்டு கரகிட்டு செஞ்சிட்டேன் தங்கச்சி). //
ஐயோ ஐயோ... உங்க பாசத்துக்கு முன்னாடி அவ்வ்வ்வ்வ்வ்வ் :)))
வருகிறோம். வாருகிறோம். நீங்க கேட்டதுதான்.
பொன்ஸ் அக்காவுக்கே இனொரு அக்காவா வாங்கக்கோவ்.....
பிக்குணி,
ஆரம்பமே அடிச்சி தூள் கிளப்பறிங்களே
ம்ம்.
வாழ்த்தறதுக்கு நான் ரெடி. வாருவது நம்ம வேலையில்லை அதுக்குன்னு தனியா ஒரு சங்கமே இருக்கு.
அன்புடன்
தம்பி
வாருங்கள் !!! வாழ்த்துக்கள்!!!
என்னடா பெயரு ஒரு மாதிரி இருக்கேனு வந்தேன். ஆளே ஒரு மார்க்கமாக தான் இருக்கீங்க. அதுக்குள்ள நம்ம மக்கள் எல்லாம் வந்துட்டு போயிட்டாங்களா.
வாங்க வாங்க
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
இது வரை வந்தவருக்கும், வாழ்த்தியவருக்கும், நன்றி.
என் பெயருக்கேற்றார் போல் சீக்கிரமே பதிவிட முயற்சிக்கிறேன் - நேரமின்மை தான் காரணம். பின்னூட்டம் இட்டு விட்டு போய்கினே இருக்கலாம். பதிவுக்கு கொஞ்சம் நேரம் வேணும்.
வாங்க வாங்க
வருக...வருக..
வருக...வருக..
வாங்க! வாங்க! வாழ்த்துக்கள் :)
//
இது வரை வந்தவருக்கும், வாழ்த்தியவருக்கும், நன்றி.
//
இதை சொன்னதுக்கப்புறம் வற்றவங்க , வாழ்த்தறவங்களுக்கெல்லாம் நன்றி இல்லியா?
என்ன அநியாயம்
//
சொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி கெக்கேபிக்குணி
//
இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல??
வாங்க சிவா, வாங்க! வா(ரு)ரதுன்னு முடிவோடு தான் வந்தீங்க போல!
//இதை சொன்னதுக்கப்புறம் வற்றவங்க , வாழ்த்தறவங்களுக்கெல்லாம் நன்றி இல்லியா?//
சரி பிழைச்சுப் போங்க, இப்போ வற்றினவங்களுக்கும் , அதாவது வந்தவங்களுக்கும் நன்றி. (தோடா!) வர வர, வற்றாமல் நன்றி கிடைக்கும்னு போர்டு போட்டு விடுகிறேன்.
//
சொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி கெக்கேபிக்குணி //இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல??//
தொண்டர் படையின் அன்பான விருப்பத்துக்கேற்ப கொடுத்த பட்டங்களிலேயே மிக எளிமையான பட்டம் இது. அரசியலில் இதெல்லாம் ஜகஜம்பா!
யானைகள் & பூனைகளோடு வரவேற்கின்றோம்.
வாழ்த்து(க்))கள்.
வந்தது தான் வந்தீங்க, ஒரு வார்த்தை சொல்-"இட்டு" போங்க!
வாங்க வாங்க, குட்டீஸ்ன் வாழ்த்துக்கள்
மங்களூர் சிவா said...
//
இது வரை வந்தவருக்கும், வாழ்த்தியவருக்கும், நன்றி.
//
இதை சொன்னதுக்கப்புறம் வற்றவங்க , வாழ்த்தறவங்களுக்கெல்லாம் நன்றி இல்லியா?
என்ன அநியாயம்
//
சொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி கெக்கேபிக்குணி
//
இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல??
9/25/2007 2:24 AM
ரிப்பிட்டேய்
அது எப்படி அக்கா ஒரு வருசமா ஒரெ போஸ்ட் கலக்கறிங்க போங்க
//Baby Pavan said... //
குட்டி பாப்பா,
வர வர, வற்றாமல் நன்றி கிடைக்கும்னு - பாக்கலியா?
//அது எப்படி அக்கா ஒரு வருசமா ஒரெ போஸ்ட் கலக்கறிங்க போங்க// ஹிஹி, ஒன்னிய மாதிரியே ரெண்டு வாலுபா எங்க வூட்டுல. என்னைய பாத்தா பாவமா தெரியல? அடுத்த தபா ஒங்க வூட்டுக்கு வரும் போது, சாகலேட் வாங்கிட்டு வரேன்;-)
இப்பொ தான் ரெண்டு மாசமா நிறைய பதிவு போட்டுருக்கேன் - படிச்சு சொல்லு எப்பிடி இருக்குதுன்னு (சாகலேட் ப்ராமிஸ்!)!
Post a Comment