காத்துக் கிடக்கிறது மனசு,
சாலைகளை வெள்ளையடித்து
எலும்பை உருக்கும் வெயிலுக்கு...
தண்ணீரில் விழுந்திருந்தாலும்
நனையாத உயிரைக் கரைக்கும் கொதிப்புக்கு...
அணியில்லாப் பாதம் பாண்டியாடிப் போகும்.
வேர்த்துக் கொட்டும் ஏ.சி. அணிந்த கார்கள் பவனி.
கதிர் நோக்கக் குழைந்த பூவும் நாவுமாய்
விருந்து கிளம்பக் காத்திருக்கும் மரங்களும் மாக்களும்.
கண் குத்தி, நா வறண்டு, தோல் கருத்து
'இன்னுமா' என்று கைமறைத்த கண்ணோடு மக்கள்.
எப்போ வரும் எனக்கு மட்டும் பிடித்த வெயில்?
6 comments:
கவுஜ நல்லாத்தான் இருக்கு.:)
//அணியில்லாப் //
ஆணியில்லாப் பாதம்??
ராதா,
//கவுஜ நல்லாத்தான் இருக்கு.:)// கவுஜருன்னு ஒத்துகினத்துக்கு நன்னிபா!
கால்+அணி இல்லாப் பாதம் வெயில்ல பாண்டி தானே ஆடும்?
நல்லா இருக்கு கெ பிக்குணி.
//கதிர் நோக்கக் குழைந்த பூவும் நாவுமாய்
விருந்து கிளம்பக் காத்திருக்கும் மரங்களும் மாக்களும்//
பூ...மாம்பூ?
நாவுக்கு மக்கள்,
மாக்களுக்கு எது?மரங்கள் கனிகளுக்காகக் காத்து இருக்கின்றனவா?
அர்த்தம் ப்ளீஸ்:0)
நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு மிக்க நன்றி!
//கதிர் நோக்கக் குழைந்த பூவும் நாவுமாய்
விருந்து கிளம்பக் காத்திருக்கும் மரங்களும் மாக்களும்//
அருஞ்சொற்பொருள்: முகந் திரிந்து நோக்குகிறானோ கதிரவன்னு பூ (/இலை) வாடிப் போய் நிக்குது மரங்களெல்லாம். அதே மாதிரி நா வாடி வறண்டு போயின மிருகங்கள் - மாக்கள் (respectively)! விருந்துக்கு வந்து தினம் கிளம்பிப் போகும் கதிரவன் இன்னும் கிளம்பலையேன்னு நிக்குறாங்க, மாக்கள், மக்கள் எல்லா(ரு)மே - என்னைத் தவிர! (Reference to நோக்கக் குழையும் அனிச்சம்)
//பூவும் நாவுமாய் .... காத்திருக்கும் மரங்களும் மாக்களும்// பூ - மரம்; நா - மா அது தான் respecitvelyன்னு சொல்ல வந்தேன். உணர்ச்சிப் பெருக்குல போன பின்னூட்டத்தில டைப்பிட விட்டுப் போச்சு;) கண்டுக்காதீங்க!
உணர்ச்சிப் பெருக்கா:)
அப்ப சரி.
அம்மா நீங்க கவிதர் தான்:)
எங்கியோ போயிட்டீங்க.
அருஞ்சொற்பொருள் சொன்னப்புறம்தான் நமக்குத் தமிழ்ப்பாடமே புரியும்.
இவ்வளவு ஆழக் கவிதைன்னா.ம்ம் ரொம்ப யோசிப்பீங்களோ.
வெக்கை தாக்கும் நேரத்தில் ஊட்டிக் கவிதை கொடுத்ததற்கு,மாவும்,நானும் நன்றி உரைக்கிறோம் தாயே:)
நாமா ம்ம் இதுவும் நல்லாத்தான் இருக்கு.உங்களுக்கு கதிரவன் மிகவும் பிடிக்குமோ:)
Post a Comment