COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Friday, October 17, 2008

சினிமாய ஜாலம்

என்னுடைய இருபத்தைந்தாவது பதிவு. வெள்ளிவிழா கொண்டாட அவுக வாரேன், இவுக வாரேன்னு சொன்னதுக்கெல்லாம் வேண்டாம்னுட்டோம்ல!! வருசத்துக்கு ரெண்டு பதிவு, மூணு பதிவுன்னு ரெண்டு வருசமா ஒப்பேத்திட்டிருக்கேன் (எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு தெனைக்கும் போறாரு... கான்டீன் காபி குடிக்க).

இப்ப செமத்தியா மாட்டினேன். ராதா ஸ்ரீராம் என்னை திரைப்பட இடியாப்பத்தில் சிக்கிவிட்டு விட்டார்கள். என் பதினைந்து வயதுக்குள் மொத்தமே ஆறேழு படங்கள் பார்த்திருப்பேன். அவ்வளவு தான். என் அம்மா வழிச் சொந்தத்தில் ஒருவர் வீட்டுக்கு விடுமுறைக்குப் போனபோது, இரவுக் காட்சி ("கி"ந்திப் படம்) அவர்கள் கூட்டிச் சென்ற போது பார்த்ததுக்கே, "தே.#.யா பொண்ணுங்க தான் இரவுக் காட்சி பாக்கும்"னு அப்பாவிடமிருந்து வசவு விழுந்ததாக அம்மா சொன்னார் (ஏம்மா சொன்னீங்க?) அப்பாவைக் கேட்க வேண்டிய கேள்விகள் கேட்டாச்சு. அதுக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமில்லை. அதே போல், "முளை விட்டாச்சு. என்னை காப்பாத்திக்க எனக்குத் தெரியும்"னு படி தாண்டி தனியாவே (கையில் அரை ப்ளேடு வச்சுகிட்டு) நிறைய படங்கள் அப்புறம் பார்த்துருக்கேன் (அர்த் சத்யா, தெ மேன் ஹூ ந்யூ டூ மச்... லாரல் ஹார்டி - இதுக்கு ப்ளேடு தேவையில்லை:-). இது தான் என் சினிமா பில்டப்.

1). எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எப்பப் பார்த்தேன்னு தெரியாது. நாலு வயதில், "அந்த ஹீரோவும் ஹீரோயினும் லவ் பண்றாங்க" என்று அவர்கள் மரத்தைச் சுற்றி பாடியதற்காக, பறைசாற்றியிருக்கிறேன். என் ஜீனியஸ் புத்தியை:-) புரிந்து கொள்ளாத நம் ஊரார் கேலி செய்திருக்கிறார்கள். நாலு வயதுக்குள் ஓரிரண்டு படம் பார்த்திருக்கலாம். எங்கம்மாவுக்கு என்ன படம் பாத்தோம்னு நினைவில்லை.
நினைவு தெரிந்து பார்த்த முதல் படம்: என் க்ளாஸ்ல, பாக்கறதுக்கே செவப்பா, நல்லா படிக்கிற பொண்ணு, அவளை மாதிரி நானும் நல்லா படிக்கணும்கற முடிவுல் இருந்த காலம். அவள் எம்ஜியார் பக்தை. அது சொல்லிச் சொல்லி நானும் ஒரு எம்ஜியார் படம் பார்க்கணும்னு முடிவு செய்து, அப்பாவை கன்வின்ஸ் செய்து, "நாளை நமதே" போனது நினைவில் இருக்கிறது. ஓரளவுக்கு மூணு வேடம்னு புரிந்தாலும், நமக்குக் குடும்பப் பாட்டு இல்லியேன்னு கவலை படும் அளவுக்கு நான் சின்னவள் இல்லை அப்ப. ஏன், எதுக்குன்னு நிறைய கேள்வி கேட்டேன்னு சொல்லுவாங்க. கட்டாயம் மூட்டைப் பூச்சிகளை உணர்ந்தேன். எம்ஜியார் படத்தில் ஒன்றும் இல்லை என்றும். அதுக்கப்புறம் ஒரு எம்ஜியார் படமும் (துட்டு கொடுத்து) பார்த்ததில்லை.

2) கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
குசேலன்:( பசுபதியோட ரசிகை நான். அது வரைக்கும் படம் ஓக்கே. டாலர் கொடுத்து ரஜினியோட வெத்து பிட் படம் பாக்குற அளவு நான் ரஜினி சார் ரசிகை இல்லை.

3) கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தசாவதாரம் - முழுசா பார்க்கலை. தொண்டையில், கோலி சோடாவின் கோலி சிக்கியதாய். மீன் சாப்பிட்டுப் பழக்கம் இல்லாததால். எனக்கு உள்ள பெரிய கஷ்டம், எனக்குப் பிடித்தவர்கள் முட்டாள்தனமான வேலை செய்தால் ஒக்காந்து பாக்க முடியாது. நானும்
இரைந்து திட்டி எங்கூட ஒக்காந்திருக்கவங்கள் எல்லாம் ஓட வைச்சிடுவேன். கமல் சார் கோட்டையை விட்டுட்டார், இனிமே ரூட் மாத்த மாட்டார்னு இந்த படம் பார்த்து புரிந்தது (நான் ஒரு ட்யூப் லைட் :-(

4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
குணா. (அய்! அய்யனார் ஆயிட்டோம்லா!)
மகாநதி, மில்லியன் டாலர் கொடுத்தாலும் அந்த படம் திரும்பிப் பாக்க மாட்டேன் (நீங்க யாரச்சும் கொடுங்க, அப்ப திரும்பி யோசிக்கிறேன்). “அந்த நாள்” விமர்சனம் படித்ததிலிருந்து பாக்கணும்னு தோணுது.

5a) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?
ஆட்டோ ஹோல்ஸேல் கம்பெனி நடத்தறீங்களா?

அரசியல் உணர்வு அதிகமாக உணர்ந்திருக்கிறேன். கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா என்று நம் தலைமுறை முதலமைச்சர்கள் எல்லாரும் திரை/நாடகப் பின்புலத்திலிருந்து வந்தவர்கள். ஏன் கலைஞர்/ அண்ணா பெரியாரிடமிருந்து பிரிந்தார், எம்ஜியார்/ஜெ. அரசியல் நாடகங்களுக்கு அர்த்தங்கள் புரிந்தே வளர்ந்தேன். இப்ப சத்யராஜ், ரஜினிக்கு முன்னால் நடிகர் சங்க நாடகத்தில், பேசுவதையும் பார்க்கிறோம். அவிங்க எல்லாரும் நம்மள என்னான்னு நினைச்சிட்டிருக்காங்க?

5b) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
ஹ்ம், எனக்கு எடிட்டிங்ல ஈடுபாடு உண்டு. அதுக்காக தமிழ்ல படங்கள் ஊன்றிப் பார்ப்பேன்... ஆனா பொதுவா இன்னிக்கு(ம்) தொழில்நுட்பம் மேல்நாடு சார்ந்து இருப்பதாக தோன்றுகிறது...
எனக்கு இன்னிக்கும் பிடித்தது (கடோத்கஜன் ஸ்டைலில் வாயப் பொளந்துகிட்டுல்லா பார்ப்போம், அவர் வாய்ல லட்டு எப்படிப் போவுதுன்னு. அவரு உடல் பெரிசாக பெரிசாக, பாத்திரங்கள் சிறிசாத் "தோணும்". அந்த ஷாட்களுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க! அப்படி கஷ்டப்பட்ட "சின்ன மனுஷங்களுக்கு" இந்த் பதிவு சமர்ப்பணம்):


6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
உண்டு & இல்லை. எல்லா கிசுகிசு படித்தாலும், இப்ப விகடன்ல மக்கள் பின்னூட்டத்தோடு படிப்பது தான் படு சுவாரசியம். எல்லாத்தையும் பொளந்து வச்சிடுறாங்க.

குமுதத்தில் நம்மூர் ஹாலிவுட்டார் தொடராய் எழுதியதை விரும்பிப் படித்தேன்.

7) தமிழ்ச்சினிமா இசை?
கேட்பேன். ரங்கு, நண்டு, சுண்டு எல்லாம் பீட்டரு பாட்டு தான்:-( நான் வாணி ஜெயராம் குரலின் அடிமை. ஹிந்தி, தமிழ்னு எல்லாம் கேட்பேன். யாரையும் குறிப்பா தமிழ் இசையமைப்பாளர் பிடிக்கும்னு இல்லை.
எனக்குக் கடந்த இரு வருடங்களாகப் பிடித்த்த்த்த்த்த்த்த்த பாடல், தேன் குரலழகி மும்பை ஜெயஸ்ரீயின் குரலில் (இதுக்கு மேல பொம்பளங்க காதலை அழகாச் சொல்ல முடியுமா?)

8) தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?
உண்டு. இந்தியாவில் இருந்த போது தூர்தர்ஷன் டிவில மதியம் வரும் வேற்று மொழிப் படங்களில் தொடங்கியது (ரே, மற்றும் இந்திய கிழக்கத்தியப் படங்கள் பொதுவாகப் பிடித்தன) என் அறிவுத் தாகம் (ஹய்யோ!)

தமிழ்ப்பதிவர்களில் எத்தனை பேர் பெண்கள், சிறு குழந்தைகளின் தாயாய், வேலை பார்க்கிற பெண்ணாய் இருப்பவர்கள் அவர்களுக்கு மட்டுமே இது புரியும்: நேரம் இல்லை:-( "சென்ட் ஆஃப் அ உமன்" பார்த்து சிக்னலில் நிற்காமல் போய் போலிஸிடம் மாட்டியிருக்கிறேன். ஒஸாமா பார்த்திருக்கிறேன். இன்னும் பல படங்கள் உண்டு என்றாலும், ஹிஹி, "மை கஸின் வின்னி" வசனம் வரிவரியாக ஒப்பிப்பேன். (நம்ம காரக்டர் ஃப்ளா அது).

9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
துட்டு கொடுத்து படம் பார்த்துட்றோம் இல்ல? அது தான் தொடர்பு. என் தந்தை வழி உறவினர் இருவர்(!) அந்த/இந்த கால படங்களில் கதை/வசன கர்த்தாக்கள். அவர்களுக்கு என்னைத் தெரியாது என்பதால், வுட்டுடறேன்.

10a) தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
என்னிக்குமே, சுஜாதா, ஜெயகாந்தன், ராஜேஷ்குமார்/சாரு, ஜெமோ, பொ. கருணாகரமூர்த்தின்னு பலதரத்தையும் படிக்கிற மாதிரி, தமிழ்ல சினிமால எல்லாரும் இருக்காங்க. வளர்ச்சி இருக்கும்னு கண்டிப்பா நம்புகிறேன். கார்ப்பரேட் தயாரிப்பாளர்களை சினிமா ஜீரணிச்சப்புறம் ஸீ! சேஞ்! (பன் இன்டென்டட்).

10b) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
தயவு செய்து இதை நடைமுறைக்குள்ளாக்கினால், நம் குழந்தைகளின் நன்றிக்குரியவர்களாவீர்கள். இந்த டிவி சனியனையும்.

27 comments:

Unknown said...

தாக்கம் அது இதுன்னு இன்னாவோ, ஒரு படா மனுஷன் ஸ்டைல்ல கேள்விக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. அப்படின்னு சொல்லிட்டே, பெரிய பதிவு எழுதிட்டோம்!!!

இந்த கேள்விகள் கேட்டது (ப்ரகாஷ்னு நினைக்கிறேன்)க்கும் உண்மைத் தமிழனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ?

வல்லிசிம்ஹன் said...

கெ.பிக்குணீ,
அதிரடி!

உங்களுக்கும் கசின் வின்னி பிடிக்குமா. என்னமா அந்தப் பொண்ணு டோஒம்மி,செவர்லே டயராப் பத்திச் சொல்லும்!!மாயாஜார் எத்தன தடவை வேணாலும் பார்ர்ப்பேன். கடோத்கஜன் மேல் அவ்வளவு காதல்:))

அருமையச் சொல்லிட்டீங்க.
ஐம்பதாவது ப்பதீவு எப்ப்போ????

Sridhar Narayanan said...

//ஓரளவுக்கு மூணு வேடம்னு புரிந்தாலும்,//

நாளை நமதே-வில் மூணு வேடமா? நல்லாப் படம் பாத்திருக்கீங்கப் போல :p

//தொண்டையில், கோலி சோடாவின் கோலி சிக்கியதாய். மீன் சாப்பிட்டுப் பழக்கம் இல்லாததால். எனக்கு உள்ள பெரிய கஷ்டம், எனக்குப் பிடித்தவர்கள் முட்டாள்தனமான வேலை செய்தால் ஒக்காந்து பாக்க முடியாது.//

கமல் மாதிரியே பேசறீங்களே... இன்னமும் நிறைய எதிர்பாக்குறோம் உங்ககிட்டேர்ந்து :-)

//மகாநதி, மில்லியன் டாலர் கொடுத்தாலும் அந்த படம் திரும்பிப் பாக்க மாட்டேன்//

இப்படிச் சேலஞ்ச் பண்ணினாலாவது யாராவது மில்லியன் டால்ர் குடுப்பாங்களான்னு பாக்குறீங்களா?

ராகி ரங்கராஜனின் எளிமையான வசனத்திற்காக அந்த படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். :-)

நல்லா எழுதியிருக்கீங்க. கலக்குங்க :-)

இலவசக்கொத்தனார் said...

25க்கு வாழ்த்துகள்!! :)

Radha Sriram said...

அட இவ்வளவு சீக்கரமா பதிவ போட்டுடீங்களே??! அடிச்சு தூள் கிளப்பிட்டீங்க போங்க....வீடியோ என்ன? பாட்டென்ன??.ஹ்ம்ம்.
இந்த "மை கசின் வின்னி" ய பாக்கணும்னு ரொம்ப நாள் ப்ளான்.:):)

Radha Sriram said...

//கமல் மாதிரியே பேசறீங்களே... இன்னமும் நிறைய எதிர்பாக்குறோம் உங்ககிட்டேர்ந்து :-)//

ஸ்ரீதருக்கு குசும்பு சாஸ்தி......:)

Unknown said...

வல்லிம்மா, வாங்க, வாங்க. வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி.

கஸின் வின்னியில், மரிஸா டோமிய் கழுத்தையும் தலையையும் சுழட்டிச் சுழட்டிப் பேசும் போது ரசிக்கும் படியாயிருக்கும். இதுக்கு அவுங்களுக்கு துணை நடிகை ஆஸ்கர் வேறு (இன்னிக்கும் பெரிய விவாதம் அதைப் பத்தி)! படத்தில, அமெரிக்காவின் தெற்கு/வடக்கு வித்தியாசங்களை மிக நுண்ணியமாக சீன் பை சீன் அழகாகக் காட்டியிருப்பார்கள். மொத்தத்தில் ஜனரஞ்சகம்.

அம்பதாவது பதிவு அனேகமா, 2011? ஹிஹி. எனக்கெல்லாம் என் பலம் தெரியும்ல!

Unknown said...

//கடோத்கஜன் மேல் அவ்வளவு காதல்:)) //
வல்லிம்மா, சிங்கத்துக்குக் கோபம் வந்துடப் போகுது!! பாத்து!

Unknown said...

//கமல் மாதிரியே பேசறீங்களே... இன்னமும் நிறைய எதிர்பாக்குறோம் உங்ககிட்டேர்ந்து :-)//
அப்ப கமலை விட "என்னால் முடியும்"னு சொல்லும் ஸ்ரீதர் தம்பி, தன்யையானேன்.

ராதாவோட பின்னூட்டம் பாருங்க. குசும்புன்னு சொல்றாங்க. எனக்கு நீங்க சொல்றதெல்லாம் உறைக்காது:-)

வரவுக்கும் கருத்துக்களுக்கும் "பாராட்டுக்கும்" நன்றி.

Unknown said...

உண்மையில், மகாநதி ரொம்ப பாதித்த படம். என்னால் அதை இன்னொரு முறை பார்க்க முடியாது. ஒருமுறை பார்த்த‌துக்கே, பல சீன்கள் நினைவில் இருக்கின்றன:-( அந்த உணர்வை சரியா பதிவில் காட்டியிருக்கேனான்னு தெரியல.. நான் படம் பிடிச்சிருந்தா, ஒன்றிப் போகிறவள். அழுவேன்..; Scent of a woman பாத்துட்டு Whoa! சொல்லிட்டிருந்தேன். தனியா இருந்தா (ரங்கமணி படிக்க மாட்டார்ங்கற தைரியத்துல சொல்றேன்), பிடிச்ச சீன் டயலாக் சொல்லிக்குவேன்! இப்படி மனசைப் பாதிக்கும்னா, திரும்பிப் பாக்கவே முடியாது!

Unknown said...

இ.கொ. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. பதிவு பத்தி ஒன்றுமே சொல்லலையே?!! குறுக்கெழுத்துல பிஸி போலிருக்கு.

ராதா, ஆமா, ஏற்கெனவே பல பதிவுகள்ல படிச்சிருந்ததால, ரெடியாயிருந்த கொசுவத்தியை ஏத்தி விட்டுட்டீங்க! சனி/ஞாயிறு வெளியூர் செல்ல திட்டம் போட்டிருந்தோம். அதனால், வெள்ளிக்கிழமையே போட்டுடலாம்னு ஒரு மதிய இடைவெளியில் பதிவெழுதினேன். தூள் கிளப்ப வைச்சதுக்கு நன்றி!

Sridhar Narayanan said...

////ஓரளவுக்கு மூணு வேடம்னு புரிந்தாலும்,//

நாளை நமதே-வில் மூணு வேடமா? நல்லாப் படம் பாத்திருக்கீங்கப் போல :p//

நாளை நமதே-வில் வாத்தியார் ரெண்டு வேசம்தாங்க. மூனாவது பிள்ளை சந்திரமோகன்னு ஒரு தெலுங்கு ஆக்டர்.

ஹிந்தியில் - தர்மேந்திரா, விஜய் அரோரா இரண்டு பேர் பண்ணிய ரோலை வாத்தியார் தனியாளா கலக்கிட்டிருப்பாரு :-)

Unknown said...

ஸ்ரீதர், உங்க பின்னூட்டம் பாத்துட்டு, அட்லீஸ்டு கூகிள்லயாவது தேடி பாக்கணும்னு நினைச்சேன். ஞாபகமா வந்து சொன்னதுக்கு நன்றி. ரெண்டு எம்ஜியார், அதுவும் அந்த வயசில அவரைப் பாத்ததுக்கே எவ்ளோ பயந்துருப்பேன்:) (ஆட்டோ வரப் போகுது!)

அப்புறம், அறிபுனைப் போட்டி வெற்றிக்கு வாழ்த்துகள்.

துளசி கோபால் said...

//இந்த டிவி சனியனையும்.//


ஹாஹாஹாஹா

இது:-)))))))

Unknown said...

வாங்க ரீச்சர், வாய் விட்டு சிரிச்சா நல்லது தானே!

ஊருக்குப் போனா, இந்த டிவி முன்னால் தான் பெரியவர்கள், சிறியவர்கள் எல்லாரும். இதுல, ஊர்ல இருந்து இங்க வந்தாலும், அந்த சீரியல், இந்த சீரியல்னு தான் அதைப் பத்தியே பேச்சு. எம் புள்ளங்க கேக்கும் (அதிசயமா ஏதாவது தமிழ் சினிமா பாட்டு அசைபடம் பாத்தா), "ஏன் பொம்பளங்க மட்டும் குறைவா சட்டை போட்டுக்குறாங்க"ன்னு. என்னை இந்த டாபிக்ல ஆரம்பிச்சு விட்டிங்களா;-)

butterfly Surya said...

விஷயம் நிறைய இருக்கு.. இன்னும் நன்றாக எழுதலாம்.. பரஸ்பரம் பாராட்ட நிறைய பேர் இருக்காங்க போல...

வாழ்த்துக்கள்

சூர்யா
butterflysurya@gmail.com

Unknown said...

சூர்யா,
நன்றி; இன்னும் நன்றாக எழுத முயற்சி செய்கிறேன். //பரஸ்பரம்...// ஏன்? என் பதிவுகளில் இது ஒரு பதிவு தான் பின்னூட்டத்தோட விரிச்சிருக்கீங்க - உங்கள் ஐபி போக்குவரத்து தகவல் (<6min.) சொல்லுது.

உங்கள் ப்ரொஃபைல் மற்றவரும் படிக்குமாறு வாசல் திறக்கலாமே. பரஸ்பரம் உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் போட்டுடுவேன்னு சத்தியம் பண்ண முடியாது; ஆனாலும், உங்கள் நட்பு வட்டம் பெருகுமே! வாழ்த்துகள் உங்களுக்கும்.

வருகைக்கும் கருத்துகளுக்கும் மீண்டும் நன்றி!

butterfly Surya said...

நன்றி. என் profile திறக்க அதுல ஒண்ணும் இல்ல.. நல்லா எழுத வந்த பிறகு திறக்கலாம்னு இருக்கேன்.. சில பல குழுமங்களில் எழுதி வருகிறேன்..

நட்பு வட்டம் உண்டு.. தங்கள் நட்புக்கும் நன்றி..


வாழ்த்துக்கள்

அன்புடன்

சூர்யா
butterflysurya@gmail.com

Unknown said...

சூர்யா, //நல்லா எழுத வந்த பிறகு திறக்கலாம்னு இருக்கேன்.. சில பல குழுமங்களில் எழுதி வருகிறேன்// அப்படியா, கவனிச்சதில்லை. எழுத எழுதத் தான் எழுத்து, இல்லையா? எனக்கு நீங்க வந்து ஊக்கம் சொல்கிற மாதிரி வேறு யாரேனும் உங்களுக்கும் சொல்லலாம். இன்னும் எழுதுங்க.

butterfly Surya said...

ஊக்கத்திற்கு நன்றி..

விரைவில் ரிலீஸ் ஆகும்..

வாழ்த்துக்கள்

அன்புடன்
சூர்யா
butterflysurya@gmail.com

உண்மைத்தமிழன் said...

//இந்த கேள்விகள் கேட்டது (ப்ரகாஷ்னு நினைக்கிறேன்)க்கும் உண்மைத்தமிழனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ?//

சத்தியமா எந்தத தொடர்பும் இல்லம்மா.. என்னையவும் குசும்பன்தான் பிடிச்சு இழுத்தான்.. நானும் பதிவு போட்டுட்டேன்.. ஆனாலும் நல்ல ஐடியாதானே.. பிரகாஷ்தான் ஆரம்பித்தவர் எனில் அவருக்கு எனது பாராட்டுக்கள்..

பெரிய பதிவு எழுதிட்டோம்னு பெருமூச்சு வேற விடறாப்புல தெரியுது.. எது.. இதுவா பெரிய பதிவு.. என்னம்மா காமெடி பண்றே.. நீ எழுதியிருக்கிறது ஒரு பாராம்மா.. அம்புட்டுத்தான்..

ஒரு விஷயத்தில் உன்னுடன் ஒத்துப் போகிறேன்.

மகாநதி படத்தை நானும் 2-வது முறையாக பார்க்க விரும்பாமல் தவிர்த்தே வருகிறேன்.. முதல் முறையே தாங்க முடியவில்லை..

வாழ்க வளமுடன்..

Unknown said...

உண்மைத் தமிழன்(15270788164745573644),
ஹிஹி, நீங்க எங்க இதப் படிக்கப் போறீங்கங்கற தைரியத்துல போட்டுட்டேன்... அதைத் தவறா எடுத்துக்காததுக்கு நன்றி.

முதல் வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி. படத்துல லயிச்சுப் போய்ப் பார்த்துடறதாலியோ என்னவோ, மகாநதி ரொம்ப டிஸ்டர்பிங்.

அப்புறம், இந்த ப்ரொஃபைல் எண்ணை பெயரோடு வைத்திருக்கும் மிகச் சிலரில், நீங்கள் எனக்கு சீனியர். உங்கள் காரணம் தான் எனக்கும். விபத்து மாதிரி ஒரு பதிவுல போனேன், என் பெயரில் ("அதர் ஆப்ஷன்") பின்னூட்டம் இட்டிருந்தது... தமிழ்மணத்துக்கு புகாரிட்டு விட்டு உடனடியா மாற்றிக் கொண்டேன்...

மீண்டும், நன்றி.

உண்மைத்தமிழன் said...

//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
நீங்க எங்க இதப் படிக்கப் போறீங்கங்கற தைரியத்துல போட்டுட்டேன்... அதைத் தவறா எடுத்துக்காததுக்கு நன்றி.//

நானும் தற்செயலாத்தான் பார்த்தேன்.. என்னையும் மறக்காமல் இருப்பதற்காக நான்தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.. சொல்லியும் விடுகிறேன்.. நன்றி..

//முதல் வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி.//

முதல் வருகையா.. இருக்காதே.. எதுக்கும் கொஞ்சம் செக் பண்ணி பாரும்மா. எனக்கு வந்து சென்றதைப் போல ஞாபகம்..

//படத்துல லயிச்சுப் போய்ப் பார்த்துடறதாலியோ என்னவோ, மகாநதி ரொம்ப டிஸ்டர்பிங்.//

அதேதான் எனக்கும்.. தாங்க முடியல..

//அப்புறம், இந்த ப்ரொஃபைல் எண்ணை பெயரோடு வைத்திருக்கும் மிகச் சிலரில், நீங்கள் எனக்கு சீனியர். உங்கள் காரணம்தான் எனக்கும். விபத்து மாதிரி ஒரு பதிவுல போனேன். என் பெயரில் ("அதர் ஆப்ஷன்") பின்னூட்டம் இட்டிருந்தது... தமிழ்மணத்துக்கு புகாரிட்டு விட்டு உடனடியா மாற்றிக் கொண்டேன்...//

இப்பொழுது இது தேவையில்லம்மா.. உடனே எடுத்து விடு.. அந்த அரக்கத்தனம் முற்றிலுமாக தடுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுவிட்டது..

எனக்கு சில கடமைகள் உள்ளன. அதையும் விரைவில் முடித்துவிட்டு ஒரு பதிவைப் போட்டு எடுத்து விடுவேன்..

நீ இப்பொழுதே எடுத்துவிடலாம். அதனால் எந்தப் பாதிப்பும் வராது..

மீண்டும், நன்றி.

Unknown said...

உனா தனா சார், இது உங்கள் முதல் பின்னூட்டம். உறுதிப்படுத்திட்டேன். நன்றி!

butterfly Surya said...

"உங்கள் ப்ரொஃபைல் மற்றவரும் படிக்குமாறு வாசல் திறக்கலாமே. பரஸ்பரம் உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் போட்டுடுவேன்னு சத்தியம் பண்ண முடியாது; ஆனாலும், உங்கள் நட்பு வட்டம் பெருகுமே "


வணக்கம். தங்கள் ஊக்கத்தினால் வாசலும் திறக்க பட்டது. எனது முதல் திரைவிமர்சனமும் அதிகாலை.காம்
www.adhikaalai.com
வலைபதிவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

நன்றி.

Unknown said...

வண்ணத்து பூச்சி (சூரி)யார்,

//NOT BEST BUT NOT LIKE THE REST.....// நாங்களும் அப்படித்தாங்க. இன்னும் பதிவுகள் போட்டு சிறக்க (தாக்க!) வாழ்த்துகள்.

butterfly Surya said...

நன்றி.. கண்டிப்பாக போட்டு தாக்குறேன்..