குழந்தைகளைப் பள்ளியிலிருந்து கொணர
(ஓர் அமெரிக்க) ஹைவேயில் நான் அவசரத்தில்!
முன்னே டப்பா-காரில் ஒர் இந்திய இளைஞன்
புதிதாய் ஓட்டும் அச்சத்தில் மெதுமெதுமெதுமெதுவாய்....
எட்டிப்பார்த்தால், கோடம்பாக்கம் ஹைரோட்டில்
என் இருசக்கரவண்டியை
இடித்து எக்களித்தவன் நினைவு வர...
அவசரமாய் என் உயருந்தால் இடிப்பதுபோல் போய்
ஓவர்டேக்!
கடைசி இரண்டு வரிகள் மட்டும் "நிஜம்-போல்":-)
உயருந்து = SUV
9 comments:
சேச்சே, நான் ரொம்ப நல்லவளாக்கும்:-)
உண்மையா அந்த மனுசன் பயந்தாரா?
நல்லவன்னு நம்பிட்டேன்.
ஆமா..... இது என்ன புரியலையே....
புதசெவி
//அவசரமாய் என் உயருந்தால் //
உயர் + உந்து
அல்லது உயிர் + உந்து
இளா, வாங்க, வாங்க! நல்வரவாகுக!
பயந்தாரா, பின்ன?!! பயங்கரமா ஒரு பிரேக் போட்டுகிட்டார். (இன்னும் ரெண்டு வாரங் கழிச்சு என் வண்டி பாத்தாருன்னா, ஒரு ஸ்பீடு எடுப்பாரு பாருங்க:-)
இந்த அலப்பறையெல்லாம் நான் வண்டியோட்டும் போது தானே செய்ய முடியும்:-)
துளசி, வாங்க வாங்க. “நல்லவ”ளின் கால் “நல்லவ”ங்களுக்கு தெரியாதா என்ன!
உயரமான உந்து:-) என்னுது ஸ்போர்ட்ஸ் யுடிலிடி வெஹிகிள். அவர் காம்பாக்டு காரை விட உயரமாக இருப்பதால்:-)
சென்னையில் நான் ஒரு ஜுஜுபி மோபட் வச்சிருந்தேன். அப்ப எல்லா வண்டியுமே என்னைவிட உயரமாயிருக்கும்! அது ஒரு கனாக்காலம்:-)
ஏம்பா, "பெண்ணீயம்" என்றுக் குறிச்சொல் தந்திருக்கலாம் இல்லே
:-)
பாத்து...பாத்தூ.... நாங்களும் இதெல்லாம் நெறய.... பண்ணிட்டு இப்போ வண்டி எடுக்கணும்னாலே வெறுப்பா திரியறோம். எல்லாம் ஒரு ஜில்பான்ஸ்தான் இல்ல... என்சாய்......
உஷா, வாங்க!! பெண் ஈயும்..ங்கறதெல்லாம் எனக்கு சான்ஸே இல்லை. பழிவாங்கல் மட்டுமே:-)
விஜய், வாங்க!! உஷாக்கு சொன்னது தான் உங்களுக்கும்:-)
இந்த SUV 9 வருஷமா எங்ககிட்ட இருக்கு; நான் பொதுவா இந்த விளையாட்டு விளையாடறதில்லை. ஆனா, குறிப்பிட்ட ரோட்ல (”மாமா” இருக்கமாட்டாரு) இந்தியப் புதுவருகைகள் அதிகமாயிருக்கு; ரொம்ப ஸ்லோ பண்ணிடறாங்க. அதுல விளைஞ்சது இந்த கவுஜ/கொடும.
இதனால் அறியப்படுவது என்னவென்றால், நான் எவ்வளவு ஸ்லோவா இருந்தேன்னு சௌகரியமா மறந்து போச்சு:-)
Post a Comment