எப்போது பார்த்தாலும்
கூடத்தின் 12 அடி உயரக் கண்ணாடியை
வெளியிருந்து
கொத்திக் கொண்டே இருந்தது
அந்த சிட்டுக்குருவி.
அதை விரட்டுவதற்கென்றே,
உள்ளிருந்து துரத்த
தலையணைகளும் மென்பந்துகளும்.
எத்தனை முறை விரட்டினாலும்
அம்பெனக் கிளம்பி
திரும்பவும் கண்ணாடிக்கே வந்தது.
10 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட
எங்கள் கூடத்துக்குள் சிறைபட்ட
தன் குடும்ப நினைவுகளை
விடுதலை செய்யப் போராடியதோ?
இல்லை, இரு மாதங்களுக்கு முன்
செத்துக் கிடந்த மற்றொரு குருவியின்
சொந்தமோ?
இந்த முட்டாள் குருவி
செத்துத் தொலையாமல் இருக்க
கடவுளை வேண்டினேன்.
இப்போது எல்லாம் கண்ணாடி ஜன்னலில்
வான்முகம் தெரிவதில்லை.
இன்றோ,
குருவிக்கு ஒரு குட்டிக் குருவியும் துணை.
என் கருவிருந்த குட்டிக்குருவிகளோ
வெளியிலிருக்கும் குருவிகளின் கட்சியே -
எங்கள் கூடு அக்குருவிகளுக்குச் சொந்தமென.
எழுத்தாளர் மாதவராஜ் அவர்களின் படைப்பிலிருந்து (விட்டு விடுதலையாகாமல்...) என் “மட்டமான காப்பி”, மற்றும் என் வீட்டு நிசத்தின் பாதிப்பு.
4 comments:
நல்லா இருக்கு. கொஞ்சம் fine tune பண்ணா இன்னும் நல்லா ஆயிடும்.கடைசில் landingல கவனம் தேவை. “வான் முகம்” ?
நானும் ஒரு காக்கா ஸ்கூட்டர் கண்ணாடியை கொத்துவது பற்றி எழுதியுள்ளேன். கருத்துச் சொல்லவும்.
பித்ரு
//என் கருவிருந்த குட்டிக்குருவிகளோ
வெளியிலிருக்கும் குருவிகளின் கட்சியே -
எங்கள் கூடு அக்குருவிகளுக்குச் சொந்தமென.//
ரசித்தேன்..நல்லா வந்திருக்கு உங்க வெர்ஷன்..அதையேன் மட்டமான காப்பி ன்னு சொல்றீங்க..:-)
கே. ரவிஷங்கர், தாமதமான என் மறுமொழிக்கு மன்னிக்கவும். இன்னைக்கு என்னவோ உங்க பக்கம் திறக்கலை. கட்டாயம் பார்க்கிறேன்.
உங்க வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
சந்தனமுல்லை, உங்க வரவுக்கு நன்றிங்க! ஹிஹி, அடிப்படை கவிதையமைப்பை காப்பி அடிச்சேன் - அதனால அப்படி சொன்னேன். நல்லா வந்திருக்குன்னு சொன்னதுக்கு நன்றி!
இந்த பின்னூட்டம் அடிக்கும் போது கூட வந்து சன்னல் கண்ணாடில குருவி தட்டுதே! அது போதாதுனு, வெளிய கிடக்குற மரப்பட்டை, காஞ்ச தேன்கூடுன்னு ஏதாவது எங்க சிறுகுருவிங்க உள்ளே கொண்டாந்துடறாங்க. இளவேனில் வந்திட்டிருக்குல்ல:-)
Post a Comment