அப்பவும் இப்பவும்
கண்மை வளர்க்கவும், அடையாளங்கள் தொடுக்கவும்,
என் கைப்பையில் பலவும் உண்டு.
எப்போதோ காதல் தருணத்தில்,
அழகின் சின்னமான கைப்பை.
"என்ன ரகசியம் வச்சிருக்கே
இந்த கைப்பையில்?"
இன்றைக்கு
குழந்தைக்குப் பிடித்த தின்பண்டம் மட்டுமல்ல,
அவன் தின்று போட்ட இனிப்பும்
ஒட்டிக் கொண்டு....
"அம்மா பையில வச்சிடு"
நாளைக்கு, கைப்பையில்
அவருக்கும் எனக்குமாய்
மருந்தும் இருக்கலாம்;
கண்மை கைப்பையில் இருந்து
காணாமல் போகலாம்.
வெவ்வேறு நிறங்களில், விதங்களில்
கைப்பை மட்டும் வரும்
அப்பவும் இப்பவும்.
5 comments:
உண்மையான உண்மை..
இப்பவும் என் கைப்பையில் பிடிக்கலன்னு திருப்பிக் கொடுத்த மிட்டாய் பிசு பிசுன்னு :))
அய்யய்யோ நான் அப்படி இல்லை. பிடிக்கலைன்னு எப்ப சொல்லும் அந்த குட்டி பிசாசுகள்ன்னு வாங்கி வாய்ல போட்டுப்பேன்!
ஆனா பாவம் கிருஷ்ணா! அதன் கைப்பை பிசு பிசு தான்:-))
முத்து கயல், நம்ம கட்சி சின்னம் கைப்பைன்னு வச்சுக்கலாமா?
:-))
அபி அப்பா, நம்பிட்டோம். பின்ன எப்படி கிருஷ்ணவேணி கைப்பையில பிசுபிசுப்பு? பசங்க போடலைன்னா, நீங்க தானே அவங்க கைப்பையில கைவைக்கிறீங்க?
:-)
இதனால் சகலமானவருக்கும் ராஜாமணி அறிவிப்பது என்னவென்றால்:
"நன்றி அபி அப்பா, ஒரு வழியா எனக்கு சப்போர்ட் செஞ்சதுக்கு. கையில ஒரு கம்ப்யூட்டர் கிடச்சா என்ன வேணா சொல்லுவாங்க தங்கமணிகள்.
சுமா, சும்மா சொல்லலாமா? முத்து கயல் பின்னூட்டத்தைப் படிச்சியே, என்ன அர்த்தம்? வீட்டுக்கு வீடு வாசப்படி. Deal with it!"இனி நான், சுமா: ராஜாமணிக்கு ஏதோ ஒரு சான்ஸ் கொடுக்கறதுனால, போல்டுல கொடுத்திருக்கேன்.
Post a Comment