சாயம் கலைந்திருக்கிறேன்.
என் கண் மை கலைந்து,
கைப்பையின் கண்ணாடிக்குள்
அடக்க முடியாத
மாற்றம்.
தெளித்துத் தரையில் விழுந்த
மழை நீராய்க் காணாமல்
போனது காலம்.
மேல் கிளையிலிருந்து விழுந்து
இனி காயப் போகும் சருகுக்கும்,
நேற்று வாங்கிய பூவிலிருந்து
தரையில் உதிரும் மகரந்தத்துக்கும்
என்னைத் தெரிந்திருக்கும்.
குடித்துப் போட்ட பாட்டிலையும்
வெந்த கிழங்கின் தோலையும் போல்
என்னைப் பார்த்துச்
சிரித்துக் கொண்டிருக்கிறது வாழ்க்கை.
1 comment:
நல்லாயிருக்கு!
Post a Comment