எனக்கு இரண்டு வாண்டுகள் வீட்டில். என் வாழ்க்கையின் மாறா வசந்தங்கள். இந்த பூக்களின் காலடியில் நான். அதனாலேயே அப்பப்ப இவர்கள் செய்யும் லூட்டியை எழுதி வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
பெரிசு சொல்வது:
“அம்மா, தொண்டைக்குள்ள என்னவோ வலிக்கிறது!”
“ஏம்பா என்ன செய்யிறது?”
“தெரியலியே, தலையை தொண்டைக்குள்ளியா விட்டுப் பாக்க முடியும்?”
சின்னது:
“அம்மா, நீ வீ (நிண்டண்டோ விளையாட்டு) விளையாட்டு நல்லா விளையாடத் தெரியலயேன்னு வருத்தப்படாதே. நீ ப்ராக்டிஸ் பண்ணலையே அதனால் தான். நீ ரொம்ப ஸ்மார்ட் கேர்ல். சீக்கிரம் இதெல்லாம் கத்துக்கலாம்”.
பெரிசு: பெரிசு தன் ஆசிரியை பற்றிச் சொன்ன ரகசியத்தை நான் குழந்தைகளின் அப்பாகிட்ட சொல்லிட்டேன். அதுக்கு ”ஒரு ரகசியத்தைக் கூட தலையில ரகசியமா வச்சுக்கத் தெரியல! மண்டு! நான் சொன்னது எல்லாம் மண்டையிலிருந்து அழிச்சுடு”
சின்னது செய்ததைப் பார்த்து பெரிசுக்கு ஏதோ பொறாமை. அதனால் பெரிசு கிட்ட, உணர்வுகளை ஆற்றுப் படுத்தும் வகையில் ஏதோ பேசினேன். பிறகு என்னிடம் சின்னது வந்து “அம்மா, நான் க்டைசியா இருக்கறதைப் பத்தி கவலைப்படலை. ஏனெனில், ‘பெரிசு’இன் உணர்வுகளை நான் மதிக்கிறேன். பல விஷயங்களில், சிலசமயம், நான் முதலாவது சிலசமயம் 2வது ஏன் கடைசியாக் கூட நான் இருக்கலாம். அதனால் என்ன? எனக்கு ‘பெரிசு’ மேல இருக்கும் அன்பு தான் முக்கியம்” இதைச் சொன்னபோது சின்னதுக்கு வயது 4.
பெரிசு:
”அம்மா, இந்த லிப்ஸ்டிக்கெல்லாம் எப்படி தான் போட்டுக்கிறியோ? ஒண்ணுமே டேஸ்ட் நல்லாயில்ல்... (என் முறைப்பைப் பார்த்து விட்டு) நெவர் மைண்ட். அப்பா தான் அப்படி சொல்லச் சொன்னார்.............!"
3 comments:
என்னங்க என் நிலைமையே தேவலாம் போலயே.. :))
http://simulationpadaippugal.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D
நல்லா இருந்தது
Post a Comment