COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Sunday, March 21, 2010

நம்முள் நிறைந்தது ஏதிலியானது!

எல்லாமானது என்னுள்ளும் நிறைந்தது.
எதுவுமே இல்லாமல் என்னுள் கரைந்தது.
தீயினிடை நீண்ட‌
இருள் நாவுகளாய்,
இருட்டினிடை ஒளிர்ந்த
வண்ண நினைவுகளாய்,
அறியாமையினின்றும் வளர்ந்து தெளிந்த
என் ப்ரம்மம்.

ஆழ்ந்த உள்ளில்,
மறுமொழி இல்லா கேள்விக‌ளின்
ஊடாய்க் கிளர்ந்த‌ அறியாமை.
தாழ்வும் உயர்வுமாய்
ஒன்றாய் இரண்டாய் விரிந்ததுவும் அதுவே தான்.

வெறுமையில் விளைந்தது
முழுமையில் கரைந்தது.
அறியாமையின் சூலில்
பிறந்த அறிவின் முடிவில்
இருக்கும் ப்ரம்மம்.
அதை அறிந்தோர் ஊழும்
விட்டிலின் விதியே.

2 comments:

mohamedali jinnah said...

ப்ரம்மம்.?

Unknown said...

வாங்க நீடுர் அலி அய்யா,
//ஆழ்ந்த உள்ளில்,
மறுமொழி இல்லா கேள்விக‌ளின்
ஊடாய்க் கிளர்ந்த‌ அறியாமை.// என் அறியாமையை உங்கள் மறுமொழி இல்லா கேள்வியா கேக்கிறீங்களா? :-))

நான் ஒரு 'அகம் அறியா' (கடவுள் இருக்காரான்னு தெரியாதுன்னு சொல்லுற) நண்பரோடு, சூன்ய யோகம் பற்றி, பேசிய பின் தோன்றிய எண்ணங்களை இங்கே பதிந்திருக்கிறேன். அவருக்கு சூன்ய யோகத்தில் ஈடுபாடு வந்திருக்கு. எனக்கு fadகளில் நம்பிக்கை இல்லை...