COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Friday, July 30, 2010

இன்றைத் திங்கள் நாளைக்கும் பூக்குமென்று...

கடல் வழிக் கப்பலுக்கு தெரியுமா
எந்த அலை தன்னைத் தொடும் என்று?
எது கிழக்கு, எது மேற்கு என்று?

கடல் வழிக் கப்பலுக்கு தெரியுமா
நேற்றைய போலாரிஸும் இன்றைய தென் துருவமும்?

கால அலைகளின் ஆட்டங்களில்
மானுடர்களின் வாழ்க்கைக் கனவுகள்.
எந்த அலை அடிக்கும்,
எந்த அலை தாலாட்டும்?

இன்றைக்கு முளைக்கிற வெள்ளி
நாளைக்கும் என்று
கைக்கெட்டா விண்மீனாய் ஒளிரும் நம்பிக்கைகள்.

5 comments:

mohamedali jinnah said...

அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.


மிக அருமையான பயனுள்ள நல்ல கட்டுரை அதிகம் உள்ளது. அனுமதி தேவை

Unknown said...

உங்க அன்புக்கும் ஆர்வத்துக்கும் நன்றி நீடூர் அலி ஐயா. உங்களுக்கு இதைப் பயன்படுத்த என் அனுமதி உண்டு, நீங்கள் பயன்படுத்தும் இடத்தில் என் பதிவின் பெயரையும், என் பெயரையும் பதிந்து விடுங்கள். எங்கே பதிந்தீர்கள் என்று எனக்குச் சொன்னால் இன்னும் மகிழ்வேன். மீண்டும் நன்றி!

அப்பாதுரை said...

ரொம்ப நல்லாருக்குங்க!

Unknown said...

அப்பாதுரை சார், நன்றி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முளைக்கின்ற வெள்ளி நாளைக்கும் சரி உங்க புதிய பதிவுகள் எப்ப முளைக்கும் :)