COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Friday, July 30, 2010

தாய் வழித் தோன்றல்

என் பட்டங்களை நீ
சுவரில் மாட்டியதில்லை.
என் தோல்விகளால் என்னைத்
துவள விட்டதில்லை.
என் பசியும் ருசியும்
என்னை விட உனக்கே தெரியும்.
என்றாலும்,
என் வாழ்க்கை அமைய
நீ வழியே சொன்னதில்லை.
உன் மக்களுக்கு
ஒவ்வொரு நொடியும்
ஈன்ற பொழுதினும் பெரிதே
செய்தாய்.

என் மக்களின் பட்டங்கள்
சுவர்களில் சட்டங்களில்.
ஆனாலும் தோல்விகளால்
அவர்களைத் துவள விட்டதில்லை.
என் மகள்களின் பசியும் ருசியும்
அவர்களை விட எனக்கே தெரியும்.
என்றாலும்
அவர்கள் வாழ்க்கை அமைய
நான் வழியைச் சொல்ல மாட்டேன்.
என் மக்களுக்கு
ஒவ்வொரு நொடியும்
ஈன்ற பொழுதினும் பெரிதாய்ச்
செய்வதை விட
வேறென்ன இருக்கிறது?

7 comments:

ரசிகன் said...

//என் மகள்களின் பசியும் ருசியும்
அவர்களை விட எனக்கே தெரியும்.
என்றாலும்
அவர்கள் வாழ்க்கை அமைய
நான் வழியைச் சொல்ல மாட்டேன்.//

வித்தியாசமா இருக்கு :)

நல்லா இருக்குங்க சிந்தனை.

mohamedali jinnah said...

உங்கலுக்கு நல்லா சமைக்வும் தெரியும். நல்லா எழுதவும் தெரியும் அதனை இந்த கட்டுரை காட்டுகின்றது .
மனதினை தொடுகின்றது .அருமை .

Unknown said...

ஸ்வேதா, சுவாசிச்சிட்டு இருக்கேங்க. வந்ததுக்கும், கருத்து தந்ததுக்கும் நன்றி.

ரசிகன், நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு நன்றிங்கோ. 'இப்படி செய்', 'அப்படி செய்'னு நாம சொன்னா புள்ளைங்க கேக்கவா போறாங்க? மரியாதையா இப்படி சொல்லிட்டு ஒதுங்கிக்கிறேன்:-)

நீடூர் அலி அய்யா, ரொம்ப சந்தோஷம். சமையல் பற்றி எழுதும் அளவு எனக்கு ஆர்வம் இல்லை. இதை கட்டுரைன்னு சொல்லிட்டீங்க:-) சரி, பரவாயில்ல, சைட் காப்ல விட்டுடறேன்:-) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அரசூரான் said...

கவிதையில் தாய்மையின்
இறந்த காலம் கண்டேன்,
நிகழ் காலம் கண்டேன்,
எதிர் காலம் காணமல் தவித்தேன்.
ஓ...
இந்த நிகழ்காலம்தான் இறந்தகாலமாய் மாறும்
எதிர்காலமோ?

Unknown said...

அரசூரான், க க க போங்க! தாய்வழித் தோன்றல்களாய் என் மக்களும் வாழவே விருப்பம்.

அப்பாதுரை said...

கண்ணாடிக்கு இந்தப் பக்கமும் அந்த பக்கமும் ... nice.

Unknown said...

வித்தியாசமான‌ ரசவாதம் தான் வாழ்க்கையும்! நன்றி அப்பாதுரை சார்.