COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Friday, August 13, 2010

மயங்கி விழுந்த நடிகர் கர்ப்பமா?

ஹீரோ நடிகரோடு 10 ஸ்டண்ட் நடிகர்கள் கலந்துகொண்டார்கள். ஸ்டண்ட் நடிகர்களுடன் ஹீரோ மோதுவது போன்ற சண்டை காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று ஹீரோ மயங்கி விழுந்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. ஹீரோ முகத்தில் தண்ணீர் தெளித்து, குடிப்பதற்கு குளுக்கோஸ் கொடுத்தார்கள். அதன்பிறகு அவரை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள்.

சிகிச்சைக்குப் பின்னர் உடல் தேறிய ஹீரோ கூறுகையில், "உடல் எடையை குறைப்பதற்காக, நான் கடந்த ஒரு வாரமாக உணவில் மிகவும் கட்டுப்பாடாக இருந்து வருகிறேன். தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடுகிறேன். நேற்று காலையில் எதுவும் சாப்பிடாமல் படப்பிடிப்புக்குச் சென்றேன்.

அது, ஒரு பெரிய, ரிஸ்க்கான சண்டை காட்சி. திடீரென்று தலை சுற்றுவது போல் இருந்தது. மயங்கி விழுந்து விட்டேன். சிகிச்சைக்குப்பின் நன்றாக இருக்கிறேன்...", என்றார்.

வளர்ந்து வரும் நடிகர் என்பதால், 'ஜாக்கிரதை'யாக இருக்க வேண்டாமா?

நகைச்சுவைக்கு மட்டுமே! சமூக அவலம், பெண்ணீயம் எதுவும் இல்லை.

16 comments:

a said...

இதென்ன புது டைப்பா இருக்கு....

Unknown said...

ஹிஹி, இப்படி ஒரு பூதத்தை கிளப்பி விடலாமேன்னு நல்லெண்ணம் தான்:-)

'போகுற வழி'யில இந்த பதிவுக்கு வந்ததுக்கு நன்றி யோகேஷ்!

பின்னோக்கி said...

ரொம்ப பதை பதைப்போட ஓடி வந்தேன். நல்லவேளை.

Unknown said...

பின்னோக்கி,

ஹிஹி! என் பதிவு பேரு பாத்தப்புறமுமா?

:-)

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

படிப்பவனை சுண்டி இழுப்பதற்கு சற்று விறுவிறுப்பான தலைப்பு கொடுக்க வேண்டியது தான்..அதற்காக இப்படியா?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாசகனை தலைப்பு தான் சொடக்குப் போட்டு படிக்க இழுக்குது..அதுக்காக இப்படியா?

mohamedali jinnah said...

நான் குறும்புக்கு எழுதவில்லை உண்மையாக கமெண்ட் அருமை

Unknown said...

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சார், //நகைச்சுவைக்கு மட்டுமே! சமூக அவலம், பெண்ணீயம் எதுவும் இல்லை.// அப்படின்னு சொல்லியிருக்கேனே (toungue in cheek)? பெண் நடிகர்னால் என்ன வேண்ணா எழுதலாம்னு தானே ஊடகங்கள் நினைக்குது?

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

என் மற்ற பதிவுகளும் படிச்சுப் பாருங்க. இந்த இடுகை ஒரு சமூக எள்ளல், அவ்வளவே.

Unknown said...

நீடூர் அலி ஐயா, வருகைக்கு நன்றி!

எல்லாரும் இதை ஜோக்காகவே படிப்பாங்கன்ஞு நினைச்சேன்...

ambi said...

////நகைச்சுவைக்கு மட்டுமே! சமூக லம், பெண்ணீயம் எதுவும் இல்லை.//

:))))

//எல்லாரும் இதை ஜோக்காகவே படிப்பாங்கன்ஞு நினைச்சேன்//

aasai Dosai :))

அரசூரான் said...

இது இத்தோட நிக்குமா? இல்லை மயங்கி விழுந்த பதிவர் காயம்-ன்னு தொடருமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

அம்பி, அப்பளம் வடை கேசரி யாருக்கு? :-)

அரசூரான், நல்ல ஐடியா கொடுக்கிறீங்களே? "பெரும் காயம்!" னு தலைப்புப் போட்டுடலாமா?

RVS said...

கெக்கே பிக்குணி , இதுபோலவே வருங்காலங்களிலும் ஆஹா ஓஹோ என்று எழுதி தமிழ்த்தொண்டாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

நன்றி

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Unknown said...

ஆர்விஎஸ், ஆஹா, தமிழ்த் தொண்டு தானே, செய்துட்டா போச்சு.

வருகைக்கும் (கிளம்பிட்டாய்ங்கய்யா... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!) கருத்துக்கும் நன்றி.

:-)

நசரேயன் said...

//
சமூக அவலம், பெண்ணீயம் எதுவும் இல்லை.
//

அப்படின்னா ?

Unknown said...

நசரேயன், //சமூக அவலம், பெண்ணீயம் எதுவும் இல்லை. -- அப்படின்னா ? //

த்ரிஷா, அமலா, ப்ரியா மணின்னு ஏதாவது இருந்திருக்கணும். எப்படியோ ஸ்பெல்லிங் தப்பிப்போச்சு;-)