ஜனவரி 31, 2011 அன்று வெளியான சொல்வனம் இதழில் வெளியான என் சிறுகதை:
தலைப்பு: பிஸ்கட்டு, பழம்! இணைப்பு: http://solvanam.com/?p=12746
அந்த கதையோட வெளியான படத்தில் இருக்கும் நாற்காலி பத்தியும் எனக்கு ஒண்ணியும் தெரியாது, சொல்லிட்டேன். நீங்க எனக்கு பிஸ்கட்டு பழம் கொடுக்கலைன்னாலும், ஒரு நாலு வார்த்தை (or more) கதை எப்படி இருந்ததுன்னு சொல்லிட்டுப் போனா, போகிற காரியம் நல்லபடியாகும்;-)
16 comments:
கதை நன்றாக இருந்தது..
ஆழமான கதை..வீட்டில் யார் இருப்பார்கள் எனத் தெரியாமல் ஒன்றும் வாங்கி வராமல் போன கதையின் நாயகனோடு படிக்கும் என் மனமும் வலித்தது.
முதற்கண்: என்னோடு கல்லூரியில் படித்தவர்களில் பாதிக்கும் மேல் வெளிநாடுகளில். அதைப் பற்றிய உரையாடலில் எழுந்த கருத்து இளைய சமுதாயம் கடமையிலிருந்து தப்பி ஓடுகிறதா, இல்லல்ல இந்தியாவில பணம் அனுப்பி நிறைய நல்லது செய்கிறேன்..னு தன்னைத் தானே சமாதானம் செய்கிறதா.... எனவே மேற்படி கதை.
சமுத்ரா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி:)
மாதவி, பணத்தைத் தவிர எதுவும் எடுத்துச் செல்லத் தோன்றவில்லை கதாநாயகனுக்கு. அக்காவுக்கு சேலையாவது வாங்கியிருக்கலாம். கடமையிலிருந்து தப்பிக்கும் மனப்பான்மை, ஊரோடும் உறவோடும் ஒட்டாத ஒருவன்.... வந்ததற்கும் கருத்துத் தந்ததற்கும் நன்றி.
கதை மிகவும் அருமை! பிஸ்கட் பழம்... தலைப்பு அதைவிட அருமை.. ;-) ;-) ஒரு உதவாக்கரை உருப்படியான கதை!!!
உங்கள் கதையை பிரசூரித்த சொல்வனத்திற்கு வாழ்த்துக்கள். ;-)
திருவானைக்கா, தஞ்சாவூர்.... சத்திரம்..... காவிரி பாயும் இடத்தில் தமிழ் பாய்ச்சியிருக்கிறீர்கள்!! நன்று..
;-) ;-) ;-)
கதையோட்டம் நல்லா இருந்துச்சி. சிறுகதைனா இவ்ளோதான் சொல்ல முடியும். ஆனால், அக்கா கணவனின் போக்குக்கு காரணத்தை கோடிட்டு காண்பித்து இருக்கலாம்
இந்த பாலோவேர் விட்ஜெட் வைக்கலியா ??
சுஜாதாவோட '' மாஞ்சு '' கதை படிச்சா வரும் உணர்வை இந்த பிஸ்கட்டும் பலமும் கதை கொண்டுவந்திருச்சு...
அவன் மேல் விழும் அடி ஒவ்வொன்னும் அவன மாதிரி இருக்கறவங்களுக்கு கிடைத்த மாதிரி இருந்துச்சு ...
தாய் சித்தம் கலங்கியதால் தான் அவளால் தூங்க முடிகிறது ...மகன் பற்றிய இவ்வளவு உணர்வுகளுக்கு வடிகால் கிடைக்காமல் மனம் கலங்கிவிட்டது.
குழந்தைகளுக்கே உரித்தான எதிர்பார்ப்பும் ... அன்பை காசில் ஈடு கட்டிவிடலாம் எனும் அவனின் எதிர்பார்ப்பும் கடைசி வரியில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது
கதை பலமாக இருப்பதால்...பழம் ....பலமாகிவிட்டது.. மாற்றிப் படிக்கவும்... பிஸ்கட்டும் பழமும்..
வித்தியாசமான கதை; தலைப்பு கதையின் ஆழத்தை making light என்று தோன்றுகிறது.
money can't buy love or happiness என்பார்கள்; எனக்கு நம்பிக்கையில்லை :)
இவ்வளவு பெரிய பெயர்கள் (பெரிய ஆள்கள் சொல்ல வந்துட்டு, டென்ஷன் ஆக்க வேணாமேன்னு மாத்தினேன்!) வந்து வாழ்த்து சொல்வதில் மிக்க மகிழ்ச்சி.
ஆர்விஎஸ், மிக்க நன்றி, நீங்க படிச்சதுக்கும், கதை உங்களுக்குப் பிடிச்சது என்றதுக்கும்!
எல் கே, ஏழை பிராமண குடும்பங்களில் இந்த அளவு தான் வயலென்ஸ் இருக்கும்:-) பத்து வருடங்களாக, இவர்கள் குடும்பத்தைப் பேணுவதிலும், மாமியாரின் மனச்சிதைவைத் தாங்கி வாழ்வதிலும், அவருக்கு என்ன போச்சு? காலையில் எழுந்து கூட்டுக் குடித்தனத்தில் கழிவறைக்கு வெயிட் செய்வது ரொம்ப கஷ்டம்! இல்லை, ஃபாலோயர் விட்ஜட் தனியாக வைக்கவில்லை. நீங்கள் ப்ளாகருக்கான இமெயிலில் லாகின் செய்திருந்தால், மேலே ப்ளாகர் டூல்பாரில் ""ஃபாலோ" வரும். நன்றி!!
பத்மநாபன், உங்கள் அன்பார்ந்த வரிகளுக்கு நன்றி.
அப்பாதுரை, பணத்தால் வாங்க முடியாதவர்கள் ஒரு சிலரை எனக்குத் தெரியும். ஆனால், பணத்தால் வாங்கப்பட நிறைய பேரு ரெடி! நன்றி.
கதையோட்டம் நல்லாருக்குங்க.
//யாருக்குமே எதுவும் வாங்கி வராமல், வெறும் பணத்தைப் பரிசாகக் கொடுத்து 10 வருடங்களைத் திரும்ப வாங்கி விடலாம் என்ற நினைப்போடு நான் வீட்டுக்கு வந்திருந்ததை அப்போதுதான் கவனித்தேன்.//
எங்கோ போகும் என நினைத்தேன். முடிவு அருமை.
நீங்களும் திருச்சி தானா??
இந்த மாதமும் Puzzles ரெடி.
http://balepandiya.blogspot.com/2011/02/puzzles-february-2011.html
பணத்தால் வாங்க முடியாதவர்கள் இன்னும் இருக்கிறார்களா?!
@கெக்கே பிக்குணி, இதெல்லாம் எப்போ நடந்தது? சொல்லவே இல்லை:-)
அருமையான கதையோட்டம்.
கெக்கபிக்குணி, இது சாமான்யத்தில் மறக்கும் பெயரில்லை அல்லவா?
உங்களை எனக்கு sysindia நாட்களில் இருந்தே தெரியும். நான் sysinida-வின் நாடோடி. :)
Post a Comment