COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Friday, April 15, 2011

பெண் பார்க்கும் நாடகத்தில், பிள்ளைக்கு இவ்வளவு கஷ்டமா? (இயற்கை உலகம்)

பதிவைப் படிக்க வந்தீங்களா, சௌக்கியமா? நல்லா குந்திக்குங்க! கம்பியூட்டர் மானிட்டரு பொட்டி நல்லா தெரியுதா? தெரியலயின்னா சரி பண்ணிக்குங்க. படம் காட்டப் போறேன். படத்தில், இந்திய டிவியில், நேஷனல் ஜியாக்ரஃபி சானலில்   காட்டாத எதுவும் இல்லை, என்றாலும், இந்தப் படத்தை, பெற்றோர் குழந்தைகளுக்குக் காட்ட விருப்பம் இல்லை என்றால் இனி பார்க்க வேண்டாம்.

"இந்த காலத்தில, பொண்ணுங்களுக்கு என்ன சுதந்திரம்பா? அவங்களே பிள்ளைய பாத்துக்குறாங்க,  இஷ்டம் இல்லைனு சொல்றாங்க, எங்க காலத்துல..."னு சொல்றவங்களுக்கான ஸ்பெஷல் படம் இது.

எங்க வீட்டுல, பெற்றோர் தெளிவா இருந்தாங்க, "பிள்ளையோட பேசு, புரிந்து கொள், உனக்குப் பிடிச்சா தான் கல்யாணம்"னு பக்காவா, ஒரு குடம் காவேரி மணலை.. அவ்வ்வ்... தண்ணியை தெளிச்சு விட்டாங்க. (நான் வளர்கிற காலத்தில, தண்ணி இல்லை, மணல் தான் இருந்தது, இப்ப மணலும் காணோம்னு சொல்றாங்க!)

என் மேல அவ்வளவு நம்பிக்கை இருந்தது வீட்டுல. (என்கிட்டே அவ்வளவு பயம்னு யாரங்கே சொல்றது?:-)

பறவை / விலங்கு  / பூச்சிகளின் வண்ண உலகத்தில், பெற்றோராவது ஒண்ணாவது! அதுங்களே பாத்துக்கிட்டு போயிட்டே இருப்பாங்க! இந்த வண்ண உலகத்தில் பொய், புரட்டு கிடையாது.

ஆஸ்திரேலிய "மயில் சிலந்தி"களின் "பொண்ணு பார்க்கிற" நாடகம் இங்கே.பொறுமையா ஒவ்வொரு ஆண் சிலந்தியும் பெண்ணைக் கவர "காலைத் தூக்கி" நர்த்தனம் ஆடி, தொகை விரித்து... நீங்களே பாருங்க!



படம் பார்த்தீங்களா? எப்படி இருந்தது? சொல்லிட்டுப் போங்க! நன்றி! (அப்புறம், புது டெம்ப்ளேட் எப்படி இருக்கு, "பதிவு அமர்க்களமா இருக்கு"ன்னு எல்லாம் சொல்லிடுங்க:-)


16 comments:

Prabu Krishna said...

புது டெம்ப்ளேட் ???????????

நல்லா இருங்குகோ. எப்புடி மாத்துனாலும் இன்னும் followers widget வைக்கவே இல்ல. திரட்டிகளில் இணைக்கவில்லை. ஏன்?

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....

Prabu Krishna said...

தமிழ்மணத்தில் ஓட்டு போட்டாச்சு ஆனா எனக்கு இன்னமும் பணம் வரவில்லை மை லார்ட். (ஹி ஹி பழக்கதோஷம் )

Prabu Krishna said...

ஆஹா வழக்கம் போலன்னு நினைச்சு Followers widget பத்தி போட்டுட்டேன். முதல்ல வாசன் ஐ கேர் போகணும் போல. (ஆனால் நான் படிக்கும் போது இந்த பதிவு திரட்டியில் இணைக்கப் படவில்லை.)

Unknown said...

பிரபு தம்பிக்கு பயந்தே விட்ஜட்டு வச்சிட்டேன்! தமிழ்மணத்தில் பதிவைச் சேர்த்திருந்தேன், மற்ற திரட்டிகளிலும் உங்க கமெண்ட்டுக்கு அப்புறம் சேர்த்தேன்... (யப்பா, இவரு இப்படி மிரட்டறாரே!:-)

பதிவைப்படிச்சீங்களா, இல்லியா? விடியோவில், சூர்யாவைப் பார்த்தீங்களா? :-))

Prabu Krishna said...

என் வீட்டில் இணையத்தின் அதிபயங்கர வேகம் காரணமாக வீடியோ பார்க்க இயலவில்லை. அதைப் பற்றி பின்னர் சொல்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீங்க வேற ஆடுங்கன்னு சொன்னா.. எந்த பயபுள்ளைக்கு என்னைக்கு கல்யாணமாகிறது..

என்னமா தோகை விரிச்சு ஆடுது கலக்கல் போங்க..:)

மங்கை said...

நல்லா இருக்கு...:)

ஆனந்தி.. said...

நிஜமாய் அமர்க்களம்...

Unknown said...

பிரபு, பார்த்திட்டு, சொல்லுங்க!

முத்து, வாங்க வாங்க! கலக்கல் நடனம், பிரபு தேவாவால் ரெண்டு காலையும் தூக்கி ஆட முடியுமா? ஹிஹி! "மயில் சிலந்தி"இடம் பிரபு தேவா, மைக்கல் ஜாக்சன் தோற்றனர் என்று தலைப்புச் செய்தி போட்டிடலாம்:-) பொண்ணுங்க கிட்ட பசங்களுக்கு இந்த பயம் இருந்தால் தான், எல்லாம் சரியாகும்! :-)))

பத்மநாபன் said...

கேரளத்து கதகளி மாதிரி தோகையும் அதை விரிக்கும் விதமும் அமர்க்களமாக இருக்கு...அதை கேமாரவில் பிடித்த விதமும் அதை ஒரு பதிவாக பதித்தமும் அமர்க்களமாகத்தாங்க இருக்கு....

இராஜராஜேஸ்வரி said...

கலக்கல் நடனம்,
அமர்க்களம்! :-)))

Unknown said...

பத்மநாபன், வாங்க! வரவு நல்வரவாகுக... 2G / 3G ஊழல் பற்றி நாடே பேசும் வேளையில், ஊழலே அற்ற 10G (நீங்க தான் பத்துஜி!) வந்து பதிவுக்கு கருத்து சொன்னதுக்கு வந்தனம்:-)

இராஜராஜேஸ்வரி, நடனம் நல்லா இருந்ததா? இனிமே பெண் பார்க்கும் நாடகத்தில், நம்மூர்ல ஆண்களையும் இப்படி ஆட சொன்னா:-) ஹிஹி.

middleclassmadhavi said...

லேட்டா வந்ததுக்கு மன்னிக்க; சிலந்தி ஆட்டம் பிரமாதம்.

//என் மேல அவ்வளவு நம்பிக்கை இருந்தது வீட்டுல. (என்கிட்டே அவ்வளவு பயம்னு யாரங்கே சொல்றது?:-)//உண்மைய சொல்லிட்டீங்களோ?! :-))
"பதிவு அமர்க்களமா இருக்கு"!

Yaathoramani.blogspot.com said...

மிக அருமை
மிகச் சிறிய ஜந்து ஆயினும் கவர்தலுக்காக அது செய்யும்
அசுர முயற்சி ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது
சூப்பர் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

மங்கை /ஆனந்தி, இமெயில் மூலமாக கமெண்டுகளை மட்டுறுத்துவேன், என்னவோ இன்னைக்கு பிளாக்கர் மூலமாக செய்யப் போனால், உங்க கமெண்டுகளைப் பார்த்தேன். எப்படின்னே புரியலை, இமெயிலுக்கு உங்க கமெண்டுகள் வரவேயில்லை. இப்போ பப்ளிஷ் செய்து விட்டேன். தாமதத்துக்கு மன்னிக்கவும்!

மங்கை, வாங்க வாங்க, பாத்து நாளாச்சு! கருத்துக்கு நன்றி!

ஆனந்தி, மதுரைக்காரவுங்க, பாசக்காரங்க. முதல் வரவு நல்வரவாகுக! நன்றி.

Unknown said...

மாதவி வாங்க, தாமதமா வந்ததுக்கு ஒரு நடனமாடும் சிலந்தியப் பிடிச்சிட்டு வாங்க....ன்னெல்லாம் சொல்லிட மாட்டேன்:-) கருத்துக்கு நன்றி!

ரமணி, உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் வந்தனம் + நன்றி!! நான், 'கழுதை கேட்டா டிவிட்டிச்சுவரு'ன்ற மூதுரைக்கு தலை வணங்கி, டிவிட்டர்ல இருப்பேன். இங்கயும் வந்து நான் பார்க்கும் சுவையான செய்திகளை பகிர முயற்சி செய்கிறேன். நன்றி!