வார்த்தைகளில் சிக்கியே
காணாமல் போகின்றன...
வார்த்தைகள்.
காரின் வேகத்தில் பின்வாங்கும்
சாலையோரச் செடிகளின் பூக்களில்,
நில்லாமல் தாவிச் செல்லும்
பட்டாம்பூச்சியோடு
பின்தங்கி நின்றுவிட்டது மனம்.
தொட்டாற்சுருங்கி என்று தெரிந்ததும்,
மிதித்துச் சுருங்குவதைச்
சரிபார்க்கும் கோழைமனம்.
இருந்த சுவடு தெரியாமல்,
கட்டிய கோலம் காணாமல்,
இன்றைய இருப்புக்கு மட்டுமே அடையாளமாய்.
மேகங்களைப் போலாகி விட்டது
வாழ்க்கை.
2 comments:
வரிகள் மனதோடு தங்கி விட்டன!!
//இன்றைய இருப்புக்கு மட்டுமே அடையாளமாய்.// Yesterday is a cancelled cheque; tomorrow is a promissory note. Today is ready cash - use it! சரிதானே?!! மாறிக் கொண்டே இருப்பது தானே வாழ்க்கை!!
நன்றி மாதவி, வருகைக்கும் கருத்துக்கும். நீங்களும் சமீபத்தில எதுவும் பதிவு எழுதலை போலிருக்கு? எழுதுங்க, எழுதுங்க!
Post a Comment