பீடில்ஸ் பாடல் காணொலி:
தமிழாக்கம்:
நான் எல்லா தனியரையும் பார்க்கிறேன்.
நான் எல்லா தனியரையும் பார்க்கிறேன்.
எலினார் ரிக்பி
அவள் திருமணம் (என்றோ) நடந்த தேவாலயத்தில்
விழுந்து கிடக்கும் அரிசியைப் பொறுக்குகிறாள்...
ஏதோ ஒரு கனவில் அவள் வாழ்கிறாள்,
சன்னலோரம் காத்துக்கொண்டு!
கதவருகில் ஒரு குப்பியில் கிடக்கும் முகத்தை அவள் அணிவது வழக்கம்....
யாருக்காக?
இவ்வளவு தனியர்கள்! எங்கிருந்து இவர்கள் வருகிறார்கள்?
இவ்வளவு தனியர்கள்! எங்கே இவர்களின் வாழ்விடம்?
நான் எல்லா தனியரையும் பார்க்கிறேன்.
நான் எல்லா தனியரையும் பார்க்கிறேன்.
மறைத்தந்தை மக்கென்ஸி
தம் அருளுரையின் வார்த்தைகளைக் கோர்க்கிறார்;
யாருமே கேட்கப் போவதில்லை...
யாரும் அருகிலும் வருவதில்லை!
அவர் பணிபுரிவதைப் பாருங்கள்:
யாரும் இல்லாத இரவில் அவர் காலுறைகளிடம் தலையாட்டிக் கொண்டிருக்கிறார்?
அவருக்கு என்ன போச்சு?
இவ்வளவு தனியர்கள்! எங்கிருந்து இவர்கள் வருகிறார்கள்?
இவ்வளவு தனியர்கள்! எங்கே இவர்களின் வாழ்விடம்?
எலினார் ரிக்பி
தேவாலயத்திலேயே மரித்தாள்,
தனியளாய் அவள் பெயருடன் மட்டும் புதைக்கப்பட்டாள்.
யாருமே வரவில்லை.
மறைத்தந்தை மக்கென்ஸி
தம் கைகளில் இருந்த மண்ணைத் துடைத்தவாறே அவளுடைய கல்லறையிலிருந்து நடக்கிறார்...
யாருமே காப்பாற்றப்படவில்லை!
இவ்வளவு தனியர்கள்! எங்கிருந்து இவர்கள் வருகிறார்கள்?
இவ்வளவு தனியர்கள்! எங்கே இவர்களின் வாழ்விடம்?
கெ.பி.யின் பின்னூசி குறிப்பு: கவுஜ போட்டா மக்கள் காணாம போயிடறாங்களே, என்ன ஆவுதுன்னு பாக்கலாம்னு தான். மக்கென்ஸியாகவும், எலினார் ரிக்பியாகவும் நானேதான்! Scheduled post.
17 comments:
் அருமை மிகவும்ரசித்தேன் பாடலை. தமிழாக்கவரிகள் ரொம்ப
எளிமையா அதேசமயம் சிறப்பாவும் இருக்கு. நான் தான் முதல்பின்னூட்டமா!
ஒன்னும் பிரச்சனை இல்லை! பின்னூட்டம் எப்படி வாங்குவது என நான் பதிவு போடுறேன். அப்ப பிச்சுக்கும் யாவாரம்:-))
வாங்க ஷைலஜா! இப்படியாவது பின்னூட்டம் வரட்டுமேன்னு தான்!!!
ஆமா, ஆமா, நீங்க தான் முதல் பின்னூட்டம்!
அபி அப்பா, வாங்க! நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும். யாவாரம் நடந்ததுன்னா கட்டாயம் கமிஷன் கொடுக்கறேன் - போணி செய்த ஷைலஜா நினைவில் மை.பா. ?
:-)
:) ))
பின்னூட்டம் போட்டுட்டேங்க.. என்னை விட்டுடுங்க ப்ளீஸ்...
பின்னூட்டம் வரலைன்னா,முள்ளை முள்ளால் எடுப்பது மாதிரி, பின்னூட்டம் பிரச்னையை பின்னூட்டத்தால் சால்வ் செய்ய வேண்டும். எப்படி?
கண்டமேனிக்கு எல்லா வலைக்கும் சென்று ஏதாவது அசட்டுதன பின்னூட்டம் இட்டு காட்டிக்கொள்ள வேண்டும். உதாரணம்: 1. hi..me first.. 2.கலக்கல் 3....): 4.??????5.ஏன் இந்த கொலைவெறி 6.உங்கள் கவிதை மனதைத்தொட்டுவிட்டது.6.வ்ழிமொழிகிறேன் 7.உள்ளேன் அய்யா 8.எப்படி
உங்களால? சே..9.நல்ல பதிவு 10.சூப்பர் தல 11.கடைசி இரண்டு வரி “நச்”
பதிவுப் பற்றிய விமர்சனம் இருக்கக் கூடாது.
நம்ம வலைக்கு வாங்க. கவிதை/கட்டுரை/சிறுகதை/இசை எல்லாம் இருக்கு. லேட்டஸ்ட் “நான் கடவுள்”
மு.க.: (அபி அப்பா, இது முத்துலட்சுமி-கயலுக்கு சுருக்கம், நீங்க வேற ஏதாவது நினைச்சிடாதீங்க!), அப்பிடி சிரிக்கிறா மாதிரி ஆகிருச்சிருங்க நிலைமை!
:-)
பரிசல்காரன், வாங்க, வாங்க. பின்னூட்டம் வாங்கத் தானே இத்தனையும்:-)
கே.ரவிஷங்கர், வாங்க. என்னைய கிண்டல் செய்தது போதாதுன்னு, சந்தடிசாக்கில....! உங்க பின்னூட்டத்தில ‘கடைசி இரண்டு வரி “நச்”!’
அது எப்படிங்க ‘பதிவுப் பற்றிய விமர்சனம் இருக்கக் கூடாது.’ன்னு நீங்க சொன்னதை நீங்களே ஃபாலோ செய்யறீங்க?
:-)))))) உங்க பதிவுக்குக் கட்டாயம் வந்து பின்னூட்டுகிறேன்!
//பதிவுப் பற்றிய விமர்சனம் இருக்கக் கூடாது.’//
மன்னிக்க.என்னுடைய கடைசி வரிகள்
பின்னூட்டத்தில் பப்ளிஷ்ஆகவில்லை.
பாட்டைக்கேட்டேன்.தனிமையின் சோகம் பற்றியது.நல்லா இருக்கு
நம்ம ஊர் “கண்ணன் பாடும் பாடல் கேட்க” SPB/SJயின் அல்லது “ஓராயிரம் பார்வையிலே உன்”TMS போன்ற லோக்கல் சோகம் தாக்கிய
அளவுக்குஅவருடைய சோகம்
தாக்குமா?alien feeling?
மொழி பெயர்ப்பு இல்லாவிட்டால் புரிந்திருக்காது.lonely
people என்பது lovely people ஆகத்தான் விழுகிறது.good singing.
என் வலையில் சிறு கதை லேபிளின்
கிழ்1. “சாந்தி சலூனுக்கு வந்த மகேஸ்வரி”மற்றும்2. “சாவுக்கு வராத கங்கை ஜல சொம்பு” “3.வைஷ்ணவியின் அம்மா ஒரு ஹோம் மேக்கர்” எழுதியுள்ளேன்.
தயவு செய்து நேர்மையாக விமர்சனம்
செய்யவும். சாத்தலாம் அல்லது வாழ்த்தலாம்.
இது ஒரு ஜூஜூபி மேட்டர், இதுக்கு எல்லாம் கவிதை எழுதி டார்ச்சர் கொடுப்பது நல்லா இல்லே :-)
மொதல்ல உங்க பிளாக்குக்கு கொஞ்ச நாள் ரெஸ்ட் கொடுங்க. அப்பால, நம்ம ரவிசங்கர் தான்
அழகா எடுத்துக் கொடுத்துட்டாரு இல்லே,
//உதாரணம்: 1. hi..me first.. 2.கலக்கல் 3....): 4.??????5.ஏன் இந்த கொலைவெறி 6.உங்கள் கவிதை மனதைத்தொட்டுவிட்டது.6.வ்ழிமொழிகிறேன் 7.உள்ளேன் அய்யா 8.எப்படி
உங்களால? சே..9.நல்ல பதிவு 10.சூப்பர் தல 11.கடைசி இரண்டு வரி “நச்”//
அப்புறம் என்ன நூத்து கணக்குல அள்ளலாம். எனக்கு எல்லாம் இருபது பின்னுட்டம் பார்த்தாலே,
கண்ணு இருட்டிக்கிட்டு வரும் .
கொஞ்சம் சீரியசாய், பின்னுட்டத்தை எதிர்ப்பார்க்காம எழுதுங்க, கொஞ்சம் டெடிகேஷனுடன்,சொல்ல வந்ததை, சரியாய் சொல்லுங்க. நீங்க தவறுகிற இடம் இதுதான் என்று எனக்கு
தோன்றுகிறது. நல்ல புத்தக அறிமுகங்கள், சினிமா, வாழ்க்கை அனுபவங்கள் என்று எழுதுங்கள். வாசகர்கள் நல்லவர்கள்., நல்லது எங்கு கண்ணில் பட்டாலும் ஓடோடி சென்று பாராட்ட தயங்க மாட்டார்கள் (இது நான் சொன்னது இல்லை) அதே போல, நல்ல எழுத்து எங்கு கண்டாலும் ஓடி சென்று பாராட்டுகள், ஆக்கப்பூர்வமாய் விமர்சனம் ரெண்டு வரி எழுதுங்கள் இது எழுத்துக்கு தரும் மரியாதை (இது நான் கடைப்பிடிப்பது)
வாழ்த்துக்கள்
\\கெக்கே பிக்குணி said...சொல்றாங்க:
மு.க.: (அபி அப்பா, இது முத்துலட்சுமி-கயலுக்கு சுருக்கம், நீங்க வேற ஏதாவது நினைச்சிடாதீங்க!), அப்பிடி சிரிக்கிறா மாதிரி ஆகிருச்சிருங்க நிலைமை!
\\
என் 200 வது பதிவை கொஞ்சம் மனசு கஷ்டமா போட்டுட்டு இதை பார்த்தேன்! அப்படியே சிரிச்சுகிட்டே இந்த பின்னூடம் போடுறேன்! ரொம்ப சந்தோஷம்! மனசு லேசா ஆகிடுச்சு! இப்ப தெரியுது நகைச்சுவையின் அற்புதம்!
கே. ரவிஷங்கர், மறுவரவுக்கும், விரிவான கருத்துக்கும் நன்றி. பீடில்ஸ் (Beatles) நான் பிறப்பதற்கு முன்னேயே உலகை உலுக்கிய ராக் பாடற்குழுவினர். இந்த பாட்டு பால் மக்கார்ட்னி (McCartney)யும் ஜான் லெனன் (Lennon)உம் எழுதினது - கவித்துவம்னு எனக்கும், மெலடிக்காக என் குடும்பத்தினருக்கும் பிடிக்கும்.
மேலும் விவரங்களுக்கு.
வாங்க உஷா, பாருங்க, இந்த கவுஜ பதிவுக்கு 14 அள்ளிட்டேன்ல (பாதி என்னுதுன்னாலும்;-)! (கவுஜகளுக்கு பின்னூட்டம் வரலைன்னு தான் இந்த பதிவே!)
கடந்த இரண்டு மாதங்களாக, தமிழ் வாசகப் பெருமக்களுக்கு கெட்ட நேரம் - எனக்கு ஒரு வழியா நேரம் கிடைச்சு, பதிவாப் போட்டுத் தாக்கிட்டிருக்கேன். தற்செயலா, இரண்டு வாரங்களுக்கு முன்னே, புத்தக விமர்சனம், “புரியாத பெண்கள்”னு நான் சந்தித்த பெண்கள் பற்றி என்றெல்லாம் - Scheduled posts ஆக எழுதத் தொடங்கினேன்; எழுதிட்டு, பதிவு வரதுக்குள்ள 2/3 மறுபார்வை பாத்திடுவேன், சரியா இருந்த அப்பவே பப்ளிஷ் பண்ணிடறேன். அதுனால, எழுதுவது கொஞ்சம் முன்னைவிடத் தெளிவாக இருந்திருக்கலாம். இன்னும் தெளிவாக்க முயற்சி செய்கிறேன். என் குறைகளில் சிலவற்றை பப்ளிக்கா ஒப்புக்குவேன்;-)
என்னால, என் சொந்த வாழ்க்கைக் குறிப்புகளை / அனுபவங்களை நேரடியாகத் தரமுடியாது - முடிந்த வரை பொய்யாகவும் இல்லாமல், உண்மையாகவும் இல்லாமல் எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் பார்த்த வரையில், வலை வாசகர்களுக்குச் சொந்த அனுபவங்கள் முக்கியம்.
அஞ்ஞாதவாசம் மாதிரி 14வருடம் கழித்துப் புத்தகங்களைத் தீவிரமாகப் படிக்கத் தொடங்கியிருக்கேன். இனிம தான் போய் நல்ல பதிவுகளை வாழ்த்தணும்...
டெடிகேஷன் இருக்கு. ஆனா, எழுத்து எனக்கு இப்போ முக்கியமில்லை:-((( எங்க தோட்டத்து ரெண்டு பூவும் பூக்கட்டும். அப்புறம்.
நெகிழ்ச்சியா இருக்கு, உங்க நேர்மையான விமர்சனம். மிக்க நன்றி. (என் பின்னூட்டம் நீளம், மன்னிக்க).
மற்றபடி உங்க பின்னூட்டம் கலக்கல்.
ஒண்ணூம் கவலை படாதீங்கபா. வாழ்க்கை பூராவும் வரதும் போறதும்தான். ஒவ்வொரு நேர்த்துல ஒவ்வொரு விருப்பம். ஜஸ்ட், விருப்பமானாதை செய்யுங்க. லிவ் தட் செகன்ட். அவ்ளோதான். சாரி, ரோம்ப அட்வைஸா போயிடுச்சில..பாட்ட கேட்டதும் சொல்லணும்னு தோணுச்சி. சொல்லிட்டேன். :)
அபி அப்பா, மறு வரவுக்கு நன்றி. சிரிங்க, சிரிங்க! உடம்புக்கு நல்லது!
விஜய், வாங்க. பாட்டை கேட்டீங்களா? வெரி குட்!
லேபிள் / குறிச்சொற்களைப் பாத்தீங்களா? நகைச்சுவை, உப்புமா, மொக்கைன்னு வித விதமா போட்டிருக்கேன்:-)))
Post a Comment