COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Friday, August 18, 2006

பெயர்க் காரணம்...

ஒரே அமளி துமளி. ஐ.நா. சபையில இருந்து ஐய, நாற சபை வரைக்கும் ஒரே கூச்சல் குழப்பம்.

அது என்னா, என்னான்னு ஒரே பதட்டம்.

அவங்க இவங்களா, அவனான்னு ஒரே கேள்வி.

தலைப்புப் பாத்தவுடனேயே தெரிஞ்சுருக்கும், என்னா மேட்டருன்னு.

ஒண்ணும் இல்ல, இந்த பேரு பெத்த பேரு (கொல்ட்டுங்களுக்குப் புரியும்) ஆக இருக்கே. பெத்த பேரா (இயற்பெயர்) இல்ல, தத்தெடுத்த பேரா (காரணப் பெயர்) ன்னு எல்லாரும் கேட்டாங்க, கடுதாசி மேல கடுதாசி வேற (நீங்க வேற, ஒண்ணு கூட காணும்).

நான் பிறக்கும் போது சரியாகத்தான் 'வீல் வீல்' ன்னு அழுதேனாம். அப்புறம் டைம்_வீல் (காலச் சக்கரம்) சுத்தின சுத்துல நான் வாயத் தொறந்தா, ஒரே உளறல் தான். நட்பு, உறவுகள் னு சிலது இழந்திருக்கிறேன், என் கெக்கே-பிக்குத்தனத்தாலே.

என்ன, வயசாக, வயசாக, அறிவு தெளிஞ்சு உளறுவதில் உள்ள இன்பம் புரிந்து, நகைச்சுவைக்கு மட்டுமே என் உலறலைப் பயன்படுத்திக் கொண்டேன் (டிஸ்கி;-)

வயசாயிடுச்சு (ரொம்ப இல்ல:-) ஞானம் பொறந்தது. பிக்குணி ஆயிட்டேன்! (அவன் இல்லை கட்டாயமா!)

அதான் இந்தப் பெயர்.

இந்த மாபெரும் உண்மை தெரிஞ்சு நிம்மதிப்பெருமூச்சு விடற நண்பர்களே, அருமையான செய்தி: இது என்னோட இரண்டாவது பதிவு.

Friday, June 09, 2006

வா(ரு)ங்க! வா(ரு)ங்க!

இது தான் எனக்கு முதல் போஸ்ட்டு (போணி). ரொம்ப நாளா நனைச்சுட்டு இருந்தேன்... இப்ப தான் உலர்ந்தது....

நான் கொஞ்சம் பேஜார் பார்ட்டி - உங்களைப் போலவே!! அது தான் முதல் காரணம் ப்ளாக் செய்ய தொடங்கினதுக்கு. தமிழ் மேல் நிறைய காதல் உண்டு. கர்வம் உண்டு தமிழச்சியாக இருப்பதில். பொழுது தான் இருப்பதில்லை (வீட்டுக்காரர் - அதாங்க ராஜாமணி - சமைச்சு வச்சுட்டாலும், பேருக்கு ஏதோ வேலை செய்தோம்-னு காமிச்சுக்க வேண்டாமா?!) எனக்கு சின்ன புள்ளைங்க உண்டு (அவங்களுக்கு தொல்லை கொடுக்கறதே என் முக்கியமான வேலை .... ஹிஹி...ஹிஹ்ஹி...)

இவ்வளவு இன்ட்ரோ போதும். பெயருக்கேற்றாற் போல், உளற தொடங்குகிறேன். வாருங்க - அதாவது - வாழ்த்துங்க!