
அண்ணன் ஜே. கே. ரித்தீஷ் வாழ்க வாழ்க!
அன்னார் புகழ் உலகெங்கும் பரவியது அவரது ரசிகர்களும் வெறியர்களும் அறிந்ததே! தன்னடக்கமற்ற அவர் இயல்பும், தற்புகழ்ச்சியுள்ள அவர் பேச்சும் (மாத்திச் சொல்லிட்டேனா?), அவர் நடையும் சடையும் படைகொல்லும் அவர் முகவெட்டும்... போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?
தினமலர்ல பார்த்தவுடனே கையும் ஓடல, காலும் ஓடல! அவருடைய அஃபிஷியல் ரசிகர்கள் மன்றத்தினர் போடுவதற்குள் பதிவு போடணும்னு ஒரு வெறி.. அவ்ளோ தான்.
விஷயம் வேற ஒண்ணுமில்ல. இதுக்குத் தான் பில்டப்:
"கோடம்பாக்கத்தில் குறுகிய காலத்தில் வள்ளலாக (?) வலம் வரும் ஹீரோ ஜே.கே.ரித்திஷ்க்கு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாம்.
இதனை நிருபர்களிடம் தெரிவிக்கும் ரித்திஷ், மணிரத்னம் சார் படங்களை ஒன்று விடாமல் பார்த்தவர்களில் நானும் ஒருவன், என்றார். மணிரத்னம் படத்தில் நடிக்க முடியாத படசத்தில் நாயகன், தளபதி என மணிரத்னத்தின் ஹிட் பட டைட்டில்களில் நடித்து வருகிறார் ரித்திஷ்."
அண்ணன் ஜே.கே. ரித்திஷ் ரசிகர் மன்றம், அமெரிக்கக் கிளை.
செய்தி நன்றி: தினமலர் ஆகஸ்டு 5, 2008, சினிமலர் பக்கம்.
தலை புகைப்படத்துக்கு நன்றி: தமிழ்ஃபிலிம்ரேட்டிங்ஸ்
6 comments:
முதல் பாராவுல நிறைய குடுத்திட்டனோ? :-)
அந்த சுட்டில கொடுத்திருக்கிற விளக்கம் தினமலர் வந்ததுல இருந்து கட்டி-பேஸ்டி. நாளைக்கு இதவிட முக்கியமான சினிநியூஸ்னு இத எடுத்துட்டு அவுங்க விஷயமில்லாத நியூஸ் போட்டுடப் போறாங்க... அப்படின்னு ஒரு உலகநலம் விரும்பி இங்க போட்டாச்சு.
ஹாஹா. கலக்கிட்டீங்க... சூப்பர் செய்தி!!!
நான் தினமலரும் பாக்கலே, உங்க பதிவும் பாக்கலே... அதுக்கெல்லாம் முன்னாடி என் பதிவ போட்டுட்டேன்.... :-)))))))
ஆனா, அவரு ஷங்கர் படத்திலே நடிச்சார்னா, ஷங்கர் எவ்ளோ செலவு செய்வார்னு சொல்லியிருக்கேன். அப்படித்தான், மணிரத்னமும் செய்வாருன்னு நம்புவோம்!!!!!
சூப்பர் ஃபாஸ்டாய் தலை பற்றிய பதிவுக்கு பின்னூட்டிய ச்சின்ன பையன் தலவெறியை பாராட்டுகிறோம்.
ச்சின்ன பையன், வருகைக்கு நன்றி.
கதை திருடன் மணிரத்னம் படத்தில் 'மூத்திர சந்து கட் அவுட் புகழ்" ரித்தீஷ் நடிக்க விருப்பம்.. நல்ல விருப்பம் தான்..
சூர்யா
butterflysurya@gmail.com
Post a Comment