
வீட்டில் மல்லிகைப்பூப் போல் இட்லி செய்தாலும், காஞ்சீபுரம் இட்லி, கன்னட தட்டு இட்லி என்று பலவகையும் எனக்குப் பிடிக்கும். காஞ்சீபுரத்து இட்லியும் சரி, ஒப்பிலியப்பன் கோயிலில் கிடைக்கும் இட்லியும் சரி தனி டேஸ்டு தான். கர்நாடக தட்டு இட்லி (படம் காண்க) அளவில் பெரிது, ஆனால், மாவு அஃதே (என்று சொல்கிறார்கள்).
வடைக்கு உளுந்து வடை தான் எங்கள் வீட்டில் பிரியம். உழுந்து என்று சிலர் எழுதினாலும்:-( ஹோலி வடை என்று என் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆனால், இட்லி வடை எதுவானாலும், நாவு நீண்ட எம் குடும்பத்தினருக்கு சட்னி, சாம்பார், மிளகாய்ப்பொடி எல்லாம் வேணும்னு சொல்லுவாங்க.
இத்தனையும் சொல்லிட்டு, என் ஊகத்தைச் சொல்லாம எப்படிப் போவது? கிழக்குப் பதியாமல், பாராமல், பாலாய் இருக்கிறதே... இன்னும் பல இருந்தாலும், மாவு புளிப்பதை கண் பார்ப்பதில்லை. அப்படியே இருந்தால் நலமே!
11 comments:
இன்னும் பலன்னு சொன்னா எப்படி? விவரமாச் சொல்லுங்க. அப்போதானே!! நீங்க ட்விட்டரில் இருக்கீங்களா? அதுல ஒரு யூகம் ஓடிச்சே!! :))
மொத்தம் 11 வடைகள் :-))))
எல்லாம் எனக்கே எனக்கா?
வடைன்னு இருந்தால்போதும். மசால்வடைன்னா இன்னும் ரெண்டு கூட!
என்னோட இந்த பதிவின் தாக்கமா?
கொத்ஸ் அய்யா, கடைசிப் பத்தியையாவது படிக்கவும். ஊகம் தரப்பட்டுள்ளது. உங்க பெயர் விட்டுப் போச்சு, அதுக்கும் மன்னிக்க! :-)))))))))
ரீச்சர்ன்னா கொக்கா? வடை கணக்கு கரீக்டு! உங்களுக்கு இல்லாததா??
வருங்கால முதல்வர்: பதிவுனு எழுதியிருக்கீங்க அதுல லிங்க் கொடுக்கலியே! வாக்குறுதியும் அப்படித்தான் இருக்குமா?
//ட்விட்டரில் இருக்கீங்களா? அதுல ஒரு யூகம் ஓடிச்சே!! :)) // யாராவது உரல் கொடுத்தால் இடித்து மகிழ்வேன்.
இங்கே பாருங்க
குடுகுடுப்பை, உரலுக்கு நன்றி. நீங்க தான் வருங்கால முதல்வர் கூட்டணியில இருக்கீங்க போலிருக்கு. என்னுது புது மாவு:-) தாக்கம் அளவுக்கு உங்க பதிவை படிக்கலிங்க. ஆறுவித இட்லி ஃபோட்டோ போட்டிருக்கோம்ல!
ஹிஹி, ஊகம் வரிகளை மிகவும் ரசித்தேன்.
விடுங்க, இட்லியும் சரி, வடையும் சரி சூடா சாப்ட்டா தான் ருசி, ஒருத்தரும் கண்டுக்கலைனா ஊசி போயிடும். சரி தானே? :p
நான் ஊகிச்சவங்க எல்லாம் வரிசையா வந்து, அது நான் இல்லன்னு சொல்லிட்டிருக்காங்க பாத்தீங்களா? ஊசி போன பலூன் ஆயிடுச்சு!
இந்த பதிவு தான் என் பதிவுகளிலேயே நிறைய ஹிட்ஸ் வாங்கினது. சூடான இடுகையில் இருந்தது. (இதுக்கு அடுத்த ஹிட்ஸ் வாங்கினது ரித் தீஷ் பதிவு...ஹிஹி!)
அம்பி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment