COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Wednesday, April 01, 2009

ஏப்ரல் 1ம் தேதி கலக்கல்ஸ்! (யூட்யூப் Flip ரகசியமும்:-)

ஷைலஜா, பினாத்தல்ஸ்னு நிறைய பேரு இன்னிக்கு ஏப்ரல் 1ம்தேதிக்காக‌ பதிவு போட்டுருக்காங்க. அவங்களைப் பாராட்டிட்டு, எப்பவும் போல நல்ல நாலு பாட்டு (சாருலதா அம்மிணி) பாக்கலாம்னு யூட்யூப்ல இன்னிக்கு 'Upside Down Show!'.

எல்லாம் தலைகீழ். அவங்க இந்த தலைகீழ் எஃபக்ட் மாத்தறதுக்கு முன்னே ரெண்டே ரெண்டு உங்களுக்காக எடுத்த ஸ்க்ரீன் காப்சர் (ரப்சரு!)


விஜயகாந்து படம் (வாழ்நாள்ல இதுவரை அவர் திரைப்படம் ஒண்ணு முழுக்க முடிய சத்தியமா பாத்ததில்லை) ஏதாச்சும் தலைகீழா பாத்து "ரசிக்கலாம்!"னு உங்களுக்கு தோணிச்சுனா, இத காப்பி/பேஸ்ட் செய்யுங்க‌: http://www.youtube.com/watch?v=9FFDKlHczqM&flip=1

யூட்யூப் விடியோவின் சுட்டி (எந்த சுட்டியானாலும்) அந்த "&flip=1" ஐ (without quotes) கடைசில சேத்தீங்கன்னா, ஐஸ்வர்யா ராய்கூட தலைகீழா ஆடலாம்.


ஜிமெயில் திறந்தா, "என்ன கொடுமை இது ஜிமெயில்?"
ரூம் இல்ல, பங்களாவே போட்டு யோசிச்சிருக்காய்ங்க.



குசும்பன் சாரை நட்சத்திரப் பதிவரா நாள் நட்சத்திரம் பாத்து தான்யா போட்டுருக்காங்க!

2 comments:

கெக்கே பிக்குணி said...

குறிச்சொல் இல்லாம பதிவை வெளியிட்டு தமிழ்மணத்துல தற்செயலா காணாமல் போன‌ பாவத்துக்காக, பி.க.

வல்லிசிம்ஹன் said...

உங்களுக்கும் தலைகீழா வந்ததுதா. கெ.பி.!!
அப்புறமா அவங்களே மெயிண்டினன்ஸ் போட்டாங்களே. கூகிள் இப்ப என் ப்ளாக்ல மொனிடைஸ் அப்படீன்னு ஒரு வார்த்தை சேர்த்திருக்காங்க.
இவங்களொ தமிழை ஆதரிக்கற மாதிரி இல்லை. அப்புறம் ஆட்சென்ஸ் எதுக்காக ஆசை காட்டறாங்க.