COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Saturday, October 02, 2010

எந்திரன்: சிறுகுறிப்பு

ரஜினி ரசிகர்கள், அல்லாதோர் இரண்டு வகையினருக்கும் விமர்சனம் இருக்கு இங்க!

ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டிய படம்.

தலைவருக்கு வில்லன் வேஷம் என்றால் அடித்து தூள் கிளப்பிடுவார். இந்தப் படத்தில் வெடிச் சிரிப்பென்ன, சுழன்று அடிக்கும் சண்டை சீன் என்ன, நடை என்ன, ஐஸ்வர்யாவிடம் கடைசி சீன்களில் அடிக்கிற ஸ்டைல் பேச்சென்ன, தலைவர் தலைவர் தான். ஷங்கரின் பிரமாண்டம் நன்றாகவே தெரிகிறது. பாடல்கள் சிலவற்றை, மக்கள் கூடவே பாடியதும், தாளம் போட்டதும், சூப்பர். ரசிகப் பெருமக்கள் அள்ளிப் போட்ட துண்டுக் காகிதங்களூம் பாப்கார்ன் தூளும் அமெரிக்கத் திரையரங்கத் துப்புரவாளர்களுக்குக் கொஞ்சம் அதிசயமாகவே இருந்திருக்கலாம்.

ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டிய படம்.

இதுவரைக்கும் படிச்ச ரஜினி ரசிகர்கள் நடையைக் கட்டுங்கப்பு:‍-)

யோவ், படமாய்யா இது? அவரு வயசு இப்படி மேக்கப்புப் பெயின்டையையும் மீறிட்டுத் தெரிது, க்ளோஸப்ல, அந்தம்மாவை விட இவரு லிப்ஸ்டிக்கு ஜாஸ்தியாப் போட்டிருக்காப்ல தெரிது. பேசாம, தலைவருக்கு ஐஸ் அஸிஸ்டென்டுன்னு கதாபாத்திரமாக்கிட்டு, எந்திரனா நடிக்கிறவரு கொஞ்சமாச்சும் இளந்தாரியாப் போட்டிருக்கலாம். அந்தம்மா நடிப்பு.... இன்னும் கொடுமை. எங்கிட்டு போய்ச் சொல்றது?

கம்ப்யூட்டர் ஜிகினா வேலை கொஞ்ச இடத்துல பல்லை இளிக்குது.

எப்பவோ படத்தை முடிச்சிருக்கணும்யா. இழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழழ்ழ்ழ்ழ்ழ்ழுத்துக்கிட்டுப் போவுது, எந்திரன் பாம்பு, தவளைன்னு அவதாரம் எடுத்துட்டு வரும்போது, கொட்டாவியா வந்திச்சு.  ஆமா, இம்புட்டுப் பெரிய விஞ்ஞானிக்கு வைரஸ் வைக்க முதல்லியே தோணலியா?

சின்னப் பசங்க கேட்ட கேள்விகள் அதுக்கு மேல: (அ) ஐஸ் ட்ரெயினில் ரவுடி மக்கள் கிட்ட மாட்டிகிட்டு, அவங்க கொடூரச் சிரிப்போட, ஃபோனை எடுத்துட்டு வரும்போது ஃபோட்டோ எதுக்குன்னு புள்ளைங்க கேட்டாங்க‌:-(( (ஆ) 'ஓஹோ, இப்படித் தான் குழந்தை பிறக்குமா'ன்னு கேட்டாங்க! (இ) எம் பசங்க "எப்ப அம்மா படம் முடியும்?"ன்னு இடைவேளைக்கு அப்புறம் ரொம்பவே கேட்டாங்க‌.

வந்தது வந்தீங்க, படத்தைப் பத்தி, உங்க கருத்தையும் சொல்லிட்டுப் போங்க!

4 comments:

அப்பாதுரை said...

ரஜினிகாந்த் வில்லனா நடிச்சாத் தான் படம் ஒடும்னு சமீப காலமா புரிஞ்சு போச்சு. அந்தாளுக்கும் வயசாயிடுச்சு, வந்த வரைக்கும் லாபம்னு லக லக மொட்டை சிட்டினு ஏதோ செஞ்சுட்டுப் போறாரு. ஜனங்க பாக்குறாங்களே?! அதான் ஆச்சரியம். இந்தப் படம் is equally a win for trend setting distribution in tamil probably indian filmdom

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ஃபோட்டோ எதுக்குன்னு புள்ளைங்க கேட்டாங்க‌:-(( //
இது வேறயா..? :(

Unknown said...

அப்பாதுரை, அண்ணவரு ராஜ்குமாரு மாதிரியே ரஜினிகாந்த் Marketing குரு. நான் பார்த்த / கேள்விப்பட்ட வரைக்கும் ரஜினியின் நடிப்புத் திறன் பேசப்படும் அளவுக்கு இருப்பதெல்லாம் அவர் வில்லன் போன்ற ரோலில் நடிப்பவையே (நான் ரஜினி படம் ரொம்பப் பார்த்ததில்லை).

முத்துலெட்சுமி, ஆமாம்பா. என் பிள்ளைங்கள்ல‌ இளையது தான் அந்தக் கேள்வி கேட்டது. மூத்தது ஒருமாதிரி முழிச்சிட்டு அப்புறம் பேசாம இருந்தது. இந்த பேசாம இருக்கறது, வயசாகற தோரணை!! ரெண்டுமே ஓரோரு மாதிரி கஷ்டம்!

ஹரிஸ் Harish said...

:)..