COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Monday, February 07, 2011

கரைமேல் பிறந்து விட்டோம்!

மீனவர்களின் நிலை பற்றி நாளும் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கோம். நம்ம நண்பர்கள் ட்விட்டரிலும் பதிவுகளிலும் பதிவதையும் பார்க்கிறோம். தோழி சந்தனமுல்லை சோம்பேறியான‌ என்னையும் பதியச் சொல்லிக் கேட்டார், கொஞ்சம் லேட்டாப் பதிகிறேன். பதிவெழுதப் போதுமான‌ நேரமின்மை முதன்மைக் காரணம்; மற்றொன்று, என் முழுமுதற் ஆதரவு மீனவர்களுக்கு என்றாலும், பதியும் போது தவறில்லாமல் பதிய வேண்டுமே என்று கொஞ்சம் படித்துக் கொண்டேன். எனக்கு இன்றைய‌ இந்திய அரசிடம் நம்பிக்கை இல்லை. ஆனால், இந்திய இறையாண்மையில் முழுமுதல் நம்பிக்கை உண்டு. எங்கம்மாவின் இந்திய மடியில் 20வருஷம் வளர்ந்த நன்றியுணர்வு உண்டு. எனவே, அக்கறையோடு பதிகிறேன்,

அ. இந்திய ஸ்ரீலங்கா கரையிடையில் 1980இலிருந்து தமிழக மீனவர்கள் 800பேர வரை இறந்திருக்கிறார்கள். இதற்காக, இந்திய அரசு, நல்ல விசிறிக்கட்டையால இலங்கை அரசின் முதுகைச் சொறிந்து கேட்டிருக்கு. அதைத் தவிர என்னவும் செய்யலை. இது ஏன்?
  1. முதல்ல 2011 ஜனவரி 12ம் தேதி மீனவர் கொலை செய்யப்பட்ட போது, இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டனம் சொல்லியிருக்கு இந்திய அரசு. கழுத்துல கயிறு இட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கார் இந்திய மீனவர் கண்டனம் சொல்லியிருக்காங்க. வெறும் கண்டனம் மட்டுமே. எச்சரிக்கை அல்ல. இலங்கை என்னங்க தம்மாத்தூண்டு நாடு, அவங்க கிட்ட பயப்பட என்ன காரணம்? சீனா இலங்கைக்கு ஆயுதங்கள் சப்ளை செய்கிறது, அதுனால, ஜாக்கிரதையா செயல்படுகிறோம்னா, எப்ப தைரியமா செயல்படுவீங்க? தமிழக மீனவர்கள், அருணாசல பிரதேசத்தில நடக்குறாப் போல, பாஸ்போர்டு விசாவோட தான் தண்ணியில் இறங்கணும் என்கிற காலத்திலாவது எதுனாச்சும் அறிக்கை விடுவீங்களா?
  2. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முன் வந்த இந்திய அரசு, எட்டு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஐந்தாவது விதியான இந்த நிபந்தனையை (பாருங்க கீழே) மீறிய இலங்கை அரசுக்கு என்னாங்க புண்ணாக்கு மரியாதை? இலங்கை அரசுக்கு ஏன் கடுமையான எச்சரிக்கை விடுக்கலை?
    "இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இதுநாள் வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சத்தீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காகச் சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை.'
  3. கச்சத் தீவை இலங்கைக்குக் கொடுத்த காரணம், அணுகுண்டு வெடித்த போது, ஐ.நா. சபையில் நமக்குக் கைக் கொடுத்த இலங்கைக்கு நட்பாய்/நன்றியாய்க் கொடுத்ததுன்னு சொல்றாங்க. வங்க நாட்டுக்கு தீவைக் குத்தகையாகக் கொடுத்த போது போட்ட மாதிரி இங்கியும் செய்திருக்கலாம். செய்யலை. இன்றாவது, நிபந்தனை மீறியது என்று வாலாட்டிய சின்ன நாட்டு அரசிடம் அச்சம் ஏன்?த‌ன் குடிமகன் இன்னொரு நாட்டில் இறந்தார்னா, கோபம் கொள்ளும் வல்ல‌ரசுகள். இத்தனை பேரை இழந்திருக்கோமே, என்ன செய்தோம்? இனி இறப்பைத் தடுக்க நடுவண் அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?
  4. இலங்கை கடல் எல்லை அருகே மீன்வளம் நல்லா இருப்பதால் மீனவர்கள் அங்கே போகிறார்கள் என்று சொல்லும் அரசியல்வாதிகள், கடல் எல்லை தாண்டிப் போய் மீன் பிடிக்க அரசாங்கம் ஏன் ஒப்பந்தம் செய்து கொள்ள உதவவில்லை? கடல் எல்லை தாண்டிப் போகாமல் இருக்க ஏன் அரசாங்கம், மிதவை அல்லது உயர்நுட்ப ஏற்பாடுகள் என்போர்சே செய்வதில் என்ன பிரச்னை? 

      ஆ. கட்சிப் பதிவர்கள் ஏன் மீனவர்களுக்கு ஆதரவாக ஒன்றும் சொல்லவில்லை? (நான் இதை எழுதும் போது ஃபிப்ரவரி 7!) கடந்த 4ந்தேதி நேராய்ப் போய் ஆதரவு சொன்ன பிஜேபியின் சுஷ்மா சுவராஜை விட லேட்டாய் நான் பதிவு போட்டிருக்கேன். கட்சியைத் தூக்கிக் கொண்டாடும் சில பதிவர்கள் ஏன் இது பற்றிப் பதிவே போடலை? (இந்த வருத்தத்தை நான் பல நாட்கள் முன்னமேயே ட்விட்டிவிட்டேன்:-(.

      இ. இதர கேள்விகள்/எண்ணங்கள் (என் முக்கியத்துவப் படியே இவை எண்ணிடப் பட்டிருக்கின்றன):
      • தொகுதிப் பங்கீட்டுக்கே டெல்லி வரை சென்று வந்த பெருந்தகை, டாய்லட் பேப்பராய்த் துடைத்துத் தூக்கி போட்ட கடிதம் தாண்டி எந்த வகையில் ஆதரவு தெரிவித்திருக்கிறார்?
      • வங்க தேசம், பாகிஸ்தான் இங்கெல்லாம் இப்படி நடந்தால், வட இந்தியர் சும்மா இருப்பாங்களா?
      • இலங்கைப் பதிவர்களின் நிலைப்பாடுகள் வேறுபட்டு இருப்பதைக் காண்கிறேன். ஏன் என்று புரிகிறது, தவறென்று என்றும் சொல்ல மாட்டேன். அது அவர்களின் நாட்டுப் பற்று. அதை மீறி என்னால் எதுவும் சொல்ல முடியாது....

      ட்விட்டரில் நிறைய எழுதினேன், ஆதரவு தெரிவித்தேன். ஆனால், என் ஆதரவு சுண்டைக்காய் தான். மக்களின் உள்ளார்ந்த ஆதரவு வேணும். முக்கியமாக, மக்கள் தேர்தலின் போது வலிக்கிறமாதிரி கட்சிகளுக்குப் பாடம் கற்பிக்கணும்.

      பிற்சேர்க்கை: சட்ட நுணுக்கங்களோடு விரிவான பதிவு இட்டிருக்கிறார், வழக்கறிஞர் சுந்தரராஜன்: கடலில் கொல்லப்படும் தமிழக மீனவர்களும், காற்றில் கரையும் இந்திய இறையாண்மையும்!


      8 comments:

      மதுரை சரவணன் said...

      meenavar pirachchanikku kai koduppoom...

      அப்பாதுரை said...

      ம்ம்ம்..

      கொல்வது மிகையான கொடூரமான செயல், ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும், 'உன் வீட்டுக்குள்ளே வந்து உன் பொருளை எடுத்துட்டுப் போவேன், என்னை ஒண்ணும் சொல்லக்கூடாது' என்ற posture ரொம்ப weakனு தோணுது.

      இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண் முன்னாலயே இருக்குனும் தோணுது; ஏன் கண்ணை மூடிக்குறோம்னு தெரியலை.

      Unknown said...

      மதுரை சரவணன் சார், உங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      அப்பாதுரை சார், பதிவு மற்றும் செய்தியின் முழுமையும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளேயும் கொலை செய்யப்படுகிறார்கள். இதை இந்திய கமாண்டர் ஒப்புக் கொண்டுள்ளார். எனவே, தப்பு மெத்தனமாய் இருக்கும் அரசாங்கத்திடம் தான் நிறைய. அரசாங்கம் செய்ய வேண்டியது: (1) மீன் அங்கே தான் பிடிக்கணும்னா, ஒப்பந்தத்தை இலங்கை மேலே enforce செய்கிறோம், (2) எல்லை தாண்டாமல் இருக்க நுட்ப உதவி, (3) எல்லை பக்கத்திலே இந்திய கடல் படை இருப்பு என்று எவ்வளவோ இருக்கு. சோ, என் புரிதலின் படி "உன் வீட்டுக்குள்ளே" என்பதும் "உன் பொருள்" என்பதும் கேள்விக்குரியவை. ஒப்பந்த க்ஷரத்து பாருங்க! ஆமா, தீர்வு எளியது, செயல்படுத்துவதில் தான் கஷ்டம் போல இருக்கு.

      அது எப்படி, ப்ரோபைல் படம் மாத்திட்டே இருக்கீங்க:-)

      அப்பாதுரை said...

      இந்திய எல்லைக்குள்ளே நடந்தால் அக்கிரமம் தான். முழு விவரமும் தெரியாமல் எழுதிவிட்டேன்.

      தீர்வு நீங்கள் சொல்வது தான். எல்லையைத் தாண்டிச் செல்ல toll கட்டச்சொன்னால் மீனவர்கள் எல்லை தாண்ட மாட்டார்கள் என்று நம்புகிறேன். தொழில்நுட்பம் உதவும். ஒரு business idea இங்கே இருக்கிறது போல் படுகிறது.

      profile படம் - என்ன செய்யறது சொல்லுங்க.. (எனக்கு ஒரு ஆணியும் இல்லே.. :)

      Pranavam Ravikumar said...

      A relevant demand..Hope it will get resolved soon.

      RVS said...

      நிறைய கேள்வி கேக்குறீங்க... பாராளுமன்றத்துக்கு உங்களை செலெக்ட் பண்ணிடலாமா?
      ஆணியைவிட பலம் வாய்ந்தது திருகாணியாம்... ரகு எனக்கு பின்னூட்டத்தில சொல்லியிருக்கார்.

      Prabu Krishna said...

      நிச்சயமாக பாடம் கற்பிக்கப்படும்.

      பத்மநாபன் said...

      பொறுப்பான பதிவு... பொறுமையாக படித்து பதிவு இட்டுள்ளீர்கள்.

      சில விஷயங்களை காலாகாலத்தில் செய்து விட வேண்டும்..ஊறப்போட்டாலும் ஆறப்போட்டாலும் சிக்கல்தான்..

      சட்டங்கள் ஆராயட்டும் முடிவு எடுக்கட்டும்.. அதுவரை இலங்கை காரனிடம் துப்பாக்கியை பிடுங்கி வைக்கவேண்டும்...