வேப்ப முத்து

மீனாவுக்கு எட்டு வயது வரை, பெற்றோர் வீட்டில் இருந்த போது மீன் குழம்பு சாப்பிட வழி இருக்கவில்லை. ஆனாலும், இங்கே வந்து இரண்டு வருடங்களில் நல்ல சாப்பாட்டு ருசி கண்டாயிற்று. வசந்தாக்கா தன் இரட்டைக் குழந்தைகளை கவனிக்க, தன் உறவுக்கார வள்ளியின் மகளான மீனாவைக் கொண்டு வந்து வைத்திருந்தார். எட்டு வயதுத் தன்னம்பிக்கையோடு மீனா தன் தம்பி மணியை கவனிப்பது போலவே இரட்டைக்குழந்தைகள் ராஜேஷ், ராஜஸ்ரீ இருவரையும் கவனித்துக் கொண்டாள். அந்த பாசத்துக்காக, வசந்தாக்காவும் மீனாவிடம் அன்போடு இருப்பாள். யாரும் கவனிக்காத போது எப்போதேனும் மீனாவுக்கு மிட்டாய் வாங்க காசு கிடைக்கும். மாமியாரும் குழந்தைகளும் தூங்கி, வசந்தாக்காவின் கணவர் சுரேஷ் மாமா கடையை கவனிக்கப் போன மதியப் பொழுதுகளில், வசந்தாக்கா மீனாவுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பாள்.
ஆனாலும், விழித்துக் கொண்டிருந்த போதெல்லாம் வசந்தாக்காவின் மாமியாரின் கண்கள் மீனாவையே கவனித்துக் கொண்டிருக்கும். மாமியார் நடக்க முடியாதென்றாலும், உட்கார்ந்த இடத்திலிருந்தே அதிகாரம் செய்து கொண்டிருப்பார். அது தான், மீனாவுக்குக் கொள்ளைப்பசியாய் இருந்தாலும், சின்ன தேங்காய்க்கீற்றை ரகசியமாய் எடுத்துக் கொண்டு கொல்லைப் பக்கத்தில் மீனா சாப்பிட்டுக் கொண்டிருந்ததன் காரணம்.
தேங்காய்க் கீற்றை கையில் மறைத்துச் சாப்பிட்டுக் கொண்டு கொல்லைப் பக்கம் இருந்தவளை, வசந்தாக்கா கூப்பிட்டாள். குழந்தைகள் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தனர். வசந்தாக்காவுக்குக் கூட மாட மீனா உதவி செய்து விட்டு, மாமியாருக்கும் சுரேஷ் மாமாவுக்கும் பரிமாறி, வசந்தாக்கா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, தனக்கும் உணவைத் தட்டில் இட்டுக் கொண்டாள் மீனா. சாப்பிட்டுக் கொண்டே இருந்த போது, புரை ஏறியது. “அம்மா நினைக்கிறா அக்கா ” என்றாள் மீனா. புரை எறினதற்காக மீனாவின் தலையைத் தடவிக் கொடுத்த வசந்தாக்கா, “உங்க அம்மா வந்து போயி ஒரு மாசமாச்சில்ல, உன்னைப் பாக்க வருவாளாயிருக்கும்!” என்றாள்.
.......................மேலும் படிக்க: http://www.tamiloviam.com/site/?p=1920
11 comments:
நல்லாயிருக்கு கதை! வசந்தாக்கா காரக்டர் அருமை!
வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_28.html - உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். முடிந்த போது பார்க்கவும்.
மிக வலிக்கிறது. இத்தகைய நிஜமான பெண்கள் கதைகளில் பார்ப்பது ஆச்சரியம். முடிவிலும் லேசாய் நம்பிக்கை துளிர்க்கிற மாதிரி (அங்கே ஒரு வசந்தா அக்கா இருந்தால் ..) எழுதியிருப்பது அருமை
ரொம்ப காலத்துக்கு முன் "புழுதிவாக்கம் பள்ளிக்கு உதவி " குறித்த என் பதிவில் நீங்கள் கமென்ட் இட்டிருந்தீர்கள். பின் அதை முக நூலிலும் பகிர்ந்ததை கமென்ட் மூலம் தெரிய படுத்தியிருந்தீர்கள். அப்போது தங்கள் ப்ளாக் பக்கம் வரவில்லை. இப்போது தான் வருகிறேன். தமிழ் ஓவியத்தில் அவ்வப்போது எழுதி வருகிறீர்கள் என அறிகிறேன். சிறுகதை நன்றாக வருகிறது. தொடருங்கள்
நல்லா இருக்குப்பா.. ஒரு அக்கா கிடைக்கட்டும்
கதை ரொம்ப நல்லாயிருக்கு. இதுபோல் இன்னும் கஷ்ட ஜீவனம் நடத்தும் குழந்தைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இனிய கவிதைபோன்ற கதை. வசந்தாக்கா காரெக்டரைசேசன் இனிமை.
மாதவி, உங்க பாராட்டுக்கு நன்றி. வலைச்சரத்தில் என்னைப் பற்றிச் சொன்னதற்கும் உளமார்ந்த நன்றி!
மோகன் குமார், உங்க கருத்துகளுக்கும் வருகைக்கும் நன்றி! இதில் வரும் மீனாவை நான் அறிவேன்;-( .... உங்க ஊக்கத்துக்கும் நன்றி, தொடர்ந்து எழுதப் பார்க்கிறேன்.
முத்து, நீங்க சொன்னது போல மீனா போன்ற எல்லாக் குழந்தைகளுக்கும் நல்லதே நடக்கணும். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
சே.குமார், மிக்க உண்மை. குழந்தையா இருக்கறப்போ அவங்க விரும்புவது எல்லாம் நடந்தால் நல்லா இருக்கும்! அதுவே என் விருப்பமும்!
சி.பி.செந்தில்குமார், உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கடந்த ஜுன் மாதம் எழுதிய கதை, கடப்பில்! போட்டிருந்தேன், 4நாள் முன் நினைவு வந்து தமிழோவியத்துக்கு அனுப்பினேன். பிரசுரித்த அவர்களுக்கும் நன்றி.
@Prabu Krishna
அதை பார்த்து தான் இங்கே வந்தேன்..
@கெக்கே பிக்குணி
கதை அருமை சகோதரியரே, ஆனால் பாவம் வசந்தக்கா வீட்டுக்காரார், அவரு அவங்க சித்தி, ஏன் அம்மா கிட்ட கூட எதுவுமே பேசல போலிருக்கு.......
தமிழ்கிழம் ஐயா, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//வசந்தாக்காவுக்குக் கூட மாட மீனா உதவி செய்து விட்டு, மாமியாருக்கும் சுரேஷ் மாமாவுக்கும் பரிமாறி, வசந்தாக்கா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, தனக்கும் உணவைத் தட்டில் இட்டுக் கொண்டாள் மீனா. // இந்த ஒரு வாக்கியத்தில் அனைவரின் மதிய உணவுக் கதையையும் - ரொம்ப நீண்டு விடுமோ என்பதால் - சுருங்கச் சொல்ல முன்றிருக்கிறேன். ஒரு சில சமயங்களில் பாத்திர / வசனங்களைக் குறைக்கும் தேவை நேர்ந்து விடுகிறது:-)
Post a Comment