COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Monday, June 02, 2008

யாசகம்

'அன்புள்ள பெரியம்மாவுக்கு, விலைவாசி ஏறியிருப்பதால், இந்தமாதத்திலிருந்து இன்னும் ரூ.75 கூட அனுப்பவும். இப்படிக்கு, அப்பாசொல்படி ....'
'அன்புள்ள சித்தப்பாவுக்கு, சிறுவயதில் சந்துரு அண்ணாவுக்கு அப்பா புதுடவுசர்கள் வாங்கிக் கொடுத்ததையும் படம்வரையும் வகுப்பிற்குக் காசுகட்டியதையும் நினைவு படுத்திக் கொள்ளச் சொல்கிறார். நான்கல்லூரிக்கு அணிந்து செல்ல உங்களிடம் கேட்டு அப்பா சொல்படி நான்எழுத, நீங்கள் புதிதாய் வாங்கியனுப்பியதாய்ச் சொன்ன‌ சேலைகள் ஏற்கெனவேஉபயோகப்படுத்தப்பட்டவை...'

இளமையில் கைநீட்டிக் கேட்ட‌ சிறுமை ...
இன்றைக்குக் கோயிலில் எங்கள் பெயரில்
அன்னதானம்...
இலைக்கு அந்தப் பக்கத்திலும் நான் தானோ?
என்றைக்கும் உன்னிடத்தில் என் யாசகம்.

5 comments:

Subbiah Veerappan said...

எந்தப் பக்கம் இருந்தாலென்ன?
இலையைப் பார்
சாப்பிடும் முன்பு வரைதான்
அதன்பெயர் இலை!
மனிதவாழ்க்கையும் அப்படித்தான்
முடிசூடும் மன்னனும் ஒரு நாள்
பிடி சாம்பலாகிப்போவான்!

Unknown said...

வாங்க வாத்தியாரய்யா! முதல் முதலா பின்னூட்டம், ரொம்ப சந்தோஷம்!

ஆமா, அந்த இலைக்கு யார் எந்த பக்கத்தில் இருந்தால் என்ன!

கடவுளிடம் யாசித்தே காலம் போகிறது. ஆனா, உங்க ஜோதிடப் பதிவுகளில் சொல்றாப் போல், எல்லாம் அளந்து தான்/அப்படித் தான்.

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

SP.VR. SUBBIAH said...

“நம்ம மாணவி பதிவு டோய்......!” என்று சொல்லிக்கொண்டேதான் உள்ள நுழைந்தேன்
அப்புறம் வகிக்கும் பதவியும் வயதும் நினைவிற்கு வந்து அடக்கமாகப் பின்னூட்டம் இட்டுவிட்டுத் திரும்பிவிட்டேன்!

Unknown said...

அதானே, நானும் நம்ம வாத்தியார் பின்னூட்டம் டோய்னு (அதுவும் பதிவிட்ட சில நிமிடங்களில்) படித்தேன்!
நன்றி!

துளசி கோபால் said...

வாழ்க்கை முழுசுமே எதுக்காவது யார்கிட்டேயாவது யாசிச்சிக்கிட்டுத்தானே இருக்கோம்!!!

கடவுள் கிட்டே யாசிப்பதில் ஒரு வசதி என்னன்னா..... அவர் கொடுக்காட்டியும் பரவாயில்லை...நாம் யாசிச்சோம் என்றதை வெளியில் தம்பட்டமடிக்க மாட்டார்:-)