COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Saturday, June 21, 2008

சிந்தனை மாய்த்து விடு!

வானம் பார்த்திருப்பதில் அயர்வே இல்லை.
பசி இல்லை, தாகமும் இல்லை.
மேகம் தாண்டிப் போகும்;
கூடிப் போகும்,பிரிந்தும் போகும்.
மேகம் காணா நேரங்களில்,
கண் மயக்கும் தாரகைகள்.
'என்ன தான் பார்க்கிறாய்?'
எனக்கே தெரியாது.
மொழி தாண்டிய மௌனம்;
எண்ணங்களில் சிறைப்படாமல்
யோகத்தில் இறுத்தி வைக்கும்
யுகாந்திர ரகசியங்கள்.

என்னை வந்து மோதிப்பாரேன்
என்று ஊன்றி நின்ற கால்களை
ஆர்ப்பரித்து மோதிப் போகும் கடலலைகள்....
சுட்டுத்தான் பாரேன் என்று
நீட்டிய ஊனைச் சிதைக்கும் தீநுனிகள்....
இவை எதிலும் இல்லாமல்,
நீலவானில் மட்டும் மோகம்.

8 comments:

SP.VR. SUBBIAH said...

நீலவானி்ன் மீது் மோகம்.
நாற்பது வரை
நிலத்தின் மீது மோகம்
அதற்குப் பிறகு!

Unknown said...

பார்க்கலாம், நீலவானின் மீதைய மோகம் நாற்பதுக்குப் பிறகு மாறுகிறதா என்று!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

jeevagv said...

எல்லாவற்றையும் யாரோ இயக்கிக்கொண்டிருக்கும், எல்லாமும் தன்விதிப்படி இயங்கிக்கொண்டிருப்பதையும் உணர்த்துகிறது, நன்றி!

Unknown said...

ஜீவா, என் பதிவிற்கு உங்கள் முதல் வருகை நல்வரவாகுக! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Vijay said...

\\வானம் பார்த்திருப்பதில் அயர்வே இல்லை.
பசி இல்லை, தாகமும் இல்லை.
மேகம் தாண்டிப் போகும்;
கூடிப் போகும்,பிரிந்தும் போகும்.
மேகம் காணா நேரங்களில்,
கண் மயக்கும் தாரகைகள்.//

இதுல ஒண்ணு கவனிச்சிங்களா? திரும்ப திரும்ப அசைவுகள் அல்லது ஒளிதான் உங்களை கவருது. இந்த அசையும் மேகம், மின்னும் தாரகை இவை எல்லாவற்றையும் விட பேக்ட்ராப்ல இருக்கு பாருங்க அசைவில்லா அளவில்லா முடிவில்லா நீல வானம் அதுதாங்க நிஜ அமைதி.

Unknown said...

விஜய்,

நீங்கள் சொல்வதும் சரிதான். அசையும் தீ நாக்குகளும், அலையோடும் கடலும் தாம் அசைகின்றன. ஆனா //அசைவில்லா அளவில்லா முடிவில்லா நீல வானம் அதுதாங்க நிஜ அமைதி// அது!

உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

நானானி said...

நீல வானமும் மோதும் அலைகளும்
பார்க்கப்பார்க்க சலிக்காது.
கவித...கவித...நல்லாருக்கு.
நீங்களா கெக்கேபிக்கேன்னு எழுதுரது?
நம்பமுடியவில்லை.

Unknown said...

நானானி, முதல் வருகைக்கு நன்றி. இயற்கையின் நடனங்கள் சலிக்காது! //நல்லாருக்கு.//ன்னு சொன்னதுக்கும் நன்றி. கெக்கேபிக்கே சுயசம்பாத்தியம். கவித அம்மா/அப்பா பிச்சை...ஹிஹி. வெட்கப்பட வைச்சிட்டீங்க.