COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Friday, February 26, 2010

நாலு பேர்

மோட்டு வளையில் ஒளிந்திருந்த‌
காலம்
நீண்டதொரு கரம் நீட்டி
வளைத்துத் தின்றது என்னை.

காணாமல் போன என்னை
நாலு பேர் திட்டினார்கள்.

மேகங்களில் மிதந்த என்னை
பட்டுப்பூச்சிகள் மகரந்தத்தில்
தெளித்துப் போயின.

மகரந்தத்தில் இருந்து
தேனீ என்னைக் கொட்டிப் போனது.

ஒரு ராணித் தேனீயின்
ராஜ்யத்தில் இருந்த போது
கல் விழுந்து கூடு கலைந்தது.

கூட்டைத் தின்ற சிறுவனின்
உதடுகளில் நின்ற போது
அவன் அம்மா கொடுத்த அடியில்
கரைந்து போனேன்.

 மிச்சம் இருந்த என்னை
எறும்பு தின்றது.

எறும்புப் புற்றை
எரித்துக் கொன்றார்கள்.

நாலு பேர்.

4 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓரு ராணி தேனியின் கூட்டில் தேனியா இருந்ததாகத்தெரிகிறது.. ஆனா அதுக்கு முன்னால் இருக்கற வரிகள் என்னைக்கொஞ்சம் குழப்புது.

நாலுபேருன்னாலே குழப்பம் தான்
நாலுபேராலே குழப்பம் தான் :)) என்ன சொல்றீங்க கெக்கே

Unknown said...

அது ஒண்ணுமில்லீங்க, மோட்டு வளையைப் பாத்திட்டிருந்தாலும் சரி, நாமளா ஒண்ணு செஞ்சாலும் சரி, காலத்தின் கோலத்தோடு காணாமப் போனாலும் சரி, எதுனாச்சும் சொல்ல நாலு பேரு இருக்காங்க... சரி தானே?

நாலுபேருன்னாலே குழப்பம் தான், நாலுபேராலே குழப்பம் தான். ஆமாங்க!

உங்க வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!

Vino said...

ஓய திஸ் கொலைவெறி ? :)

மல்லிகார்ஜுனன் said...

பத்து விரலை நீஈஈஈஈட்டி தலைய பிச்ச்ச்கிக் கிட்டேன்.. விளக்க உரை அடுத்த போஸ்டில் போடவும்.


--
கவிதை நல்லா இருந்துச்சு. ரசித்"தேன்"/