COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Wednesday, January 19, 2011

புதிய கட்சி தொடக்கம்

அகில உலக அளவில் தொடங்கப்பட்ட இந்த கட்சியைப் பத்தித் தெரிந்து கொள்ள ஆசையா வந்திருக்கீங்க.  வாங்க! வணக்கம். 

கொள்கை?
  • கேப்பையில் வடியும் நெய்யை விற்று பெரிய கோடீஸ்வரன் ஆவணும்.
  • நாட்டுக்கு நல்லது செஞ்சி, ஏழ்மையை ஒழிச்சி, பெண்ணடிமை... இப்படியெல்லாம் நடக்கும்னு நம்புறவங்களை கட்சி மெம்பராக்கிக் காசு பாக்கணும்.
கட்சியில மெம்பராவது எப்படி?
தமிழ்ச் செய்தி படிப்பீங்களா?  அப்ப நீங்க ஏற்கெனவே மெம்பர் தான்? என்ன, இனிமே ஒழுங்கா மெம்பர்ஃபீ (அடச்சே, உறுப்பினர் உரிமைக்கட்டணம்) ஸ்விஸ் அக்கவுன்டுக்கு அனுப்பிச்சிருங்க.

ஆங்?  கட்சி பெயர் என்ன?
தேசீய கேனையர் முன்னேற்றக் கட்சி.  (தே.கே.மு.க.)

எப்படிங்க இது? உலக அளவுன்றீங்க‌, தேசீய கட்சின்றீங்க?
உலக அளவில் தொடங்கப்பட்ட தேசீய கட்சி.

என்னாத்துக்கு இந்த கட்சி?
எம்புட்டு செய்தி பார்க்கிறோம்?  அரசியற்கலைஞர்கள் (அதாவது அரசியல் கலையுலகம்  ரெண்டு சேற்றுலயும் காலை வச்சு காசு பண்றவங்க) அறிக்கை கொடுக்கிறாங்க: 

ஒருத்தர் முந்தாநேத்தைக்கு: சாதி இல்லை; நேத்தைக்கு: என் சாதிக் கட்சியோட தான் சேருவேன்; இன்னைக்கு: இ.க.பொ.கட்சியில சேந்துட்டேன். நாளைக்கு: சாதி இருக்குங்கிறது இல்லை.

இன்னொருத்தர் நேத்தைக்கு: நானும் கட்சியும் ஒன்றுக்குள்ள ஒன்று.  இன்னைக்கு: நானே கட்சி. நாளைக்கு: நான் கட்சியிலிருந்து ராஜினாமா செஞ்சி 4 மாசமா ஆச்சே!

இவங்க மாதிரி நாமும் காசு பண்ண வேண்டாம்?  நாம என்ன ரெண்டு படம் எடுத்தோமா, திருட்டு ரயில் ஏறினோமா? கட்சியாவது தொடங்குவோமே!

எத்தனை தொகுதில ஜெயிப்பீங்க?
தோடா! இப்படி கேட்டீங்களே, நீங்களே ஒரு தொகுதிய எடுத்துக்கிடுங்க.  போஃபார்ஸ் பீரங்கிய அனுப்பிச்சி பிரசாரம் செய்திருவோம்.  தேர்தல் செலவு, அய்யாஆ ராசா செஞ்ச ஊழல்நிதியாமில்லே, அதுலேந்து கட்சிச் செலவுகளுக்குக் காசு எடுத்துக்கிடுங்க! உங்க கைக்காசை எங்க ஸ்விஸ் அக்கவுன்டுக்கு அனுப்பிருங்க. மறந்துர வேணாம்.


27 comments:

கும்மி said...

//கட்சியில மெம்பராவது எப்படி?//

முதல்ல மெம்பராதான் ஆகமுடியுமா? நேரடியா இந்த கொபசே இல்லன்னா பொது செயலாளர் அது மாதிரியெல்லாம் ஆக முடியாதா?

கெக்கே பிக்குணி said...

அய்யா, உங்கள மாதிரி சூதானமான ஆளுங்களை எதிர்பாத்து காத்துட்டிருந்தோமுங்க.

இந்த மாதிரி கேட்கிறதுனாலியே நீங்க ஏற்கெனவே தே.கேனையர்.மு.க. வில மெம்பர்னு தெரியுது (யாருபா, ஆட்டோ ரெடி பண்ணு).

கட்சிக்காக தீவிரமா உழைச்சு, எங்க ஸ்விஸ் அக்கவுன்டில முதல்ல யாரு மிலியன் டாலர் சேக்கிறாங்களோ, அவிங்களே கொ.ப.செ. இப்பப் பாருங்க, என் அண்ணன் மவன் இப்ப கொ.ப.செ.வா இருக்காரு; தம்பியோட மச்சான் செயலாளர். அதுனால என்ன, நீங்க முதல்ல மிலியன் டாலர் சேர்த்துருங்க, நாங்க உங்களுக்கு க.ச.மு.ச. பதவி கொடுத்திடுவோம்.

கும்மி said...

//எங்க ஸ்விஸ் அக்கவுன்டில முதல்ல யாரு மிலியன் டாலர் சேக்கிறாங்களோ, //

இப்பதான் ஸ்விஸ் அக்கவுன்ட் எல்லாம் மத்திய அரசு கேட்டா கொடுக்கணும்ன்னு ட்ரீட்டி சைன் பண்ணிட்டாங்களே. அதுவுமில்லா கொபசே எல்லாம் நெம்ப முக்கியமான ஆளுங்கல்லாம் இருக்காங்க. அதுனால, ஸ்விஸ் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பாம, எனக்கு நேரடியா அனுப்பச்சொல்லுங்க. நான் பொருளாளர் பதவியையும் பாத்துக்கிட்டு, பணத்தையும் பாத்துக்கிட்டு என்னையும் ஐ மீன் கட்சியையும் பாத்துக்கிறேன்.

கெக்கே பிக்குணி said...

எனக்கு ஏற்கெனவே ஸ்விஸ் வங்கியில அக்கவுன்டு இருக்கு. என் பேரு வெளிய வந்துதா? இல்லியே! போஃபார்ஸ் பீரங்கியையே பிரசாரத்துக்கு அனுப்புற என்கிட்டயே கும்மியா?

//இப்பதான் ஸ்விஸ் அக்கவுன்ட் எல்லாம் மத்திய அரசு கேட்டா கொடுக்கணும்ன்னு ட்ரீட்டி சைன் பண்ணிட்டாங்களே// கேனையர் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை தம்பிக்குத் தான். நம்புதே தங்கம்!

நீங்க என்ன பண்றீங்க‌, உங்க மெம்பர்ஷிப்புக்கு செக் முதல்ல சைன் பண்ணுங்க, ஒரு கோடி உறுப்பினர்களைக் கட்சியில் மெம்பர்ஷிப் பணதோடு சேருங்க; அப்புறம் பொருளாளர் பதவி பத்தி யோசிக்கலாம்.

கும்மி said...

//நம்புதே தங்கம்! //

கட்சில சேருரதுக்கு அடிப்படைத் தகுதியே அதானே. அது இல்லாமப் போயிட்டா, அப்புறம் கட்சில சேத்துக்க மாட்டீங்களே.

எனவே, இந்தப் பின்னூட்டத்தை கட்சியில் சேரும் விண்ணப்பமாகக் கருதி என்னையும் கட்சியில் சேர்த்துக் கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன். நடு நடுவுலே பணிவுடன், தாழ்மையுடன் இதெல்லாம் போட்டுக்கிங்க.

கட்சிப்பணி முன்னால் இருந்தாலும் பதவி ஏற்றபின்பு செய்யக்கூடிய தூக்கப்பணிக்கான ஒத்திகை அழைப்பதால் இத்துடன் விடைபெறுகின்றேன்.

பலே பிரபு said...

கட்சித்தலைவி கெக்கேபிக்குணி வாழ்க.

இது முன்னெச்சரிக்கையா சொல்லிக்கிறது.

நசரேயன் said...

ம்ம்ம்

நசரேயன் said...

கட்சிக்கு உங்க பேரையே வைத்து இருக்கலாம் ?

கெக்கே பிக்குணி said...

//எனவே, இந்தப் பின்னூட்டத்தை கட்சியில் சேரும் விண்ணப்பமாகக் கருதி என்னையும் கட்சியில் சேர்த்துக் கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன். நடு நடுவுலே பணிவுடன், தாழ்மையுடன் இதெல்லாம் போட்டுக்கிங்க. //

கும்மி எப்பா, எம்புட்டு பணிவு, தாழ்மை? மெம்பராக வரும்போதே காலைவாரும் பணிவு. மெச்சினோம்! இனி நீவிர் தே.கே.மு.க.வின் கசமுச அங்கத்தினர் (சத்தம் தான் பெருசா வருதுன்றதால!) என அழைக்கப்படுவீர்.

பலேபிரபு, வாங்க வாங்க, சும்மா என்னை வாழ்த்தினா போதுமா? கட்சிக்காக என்ன, எவ்வளவு இயலும்?

கெக்கே பிக்குணி said...

நசரேயன், உங்க‌ உள்குத்து எல்லாம் எங்களுக்கும் புரியாமலா? தேசீய கட்சி இது, தன்மானக் கட்சி இது, கேப்பையிலே வடிகிற நெய்நிறைந்த "கேனை" எடுத்துச் சென்று களப்பணி செய்யப் போகும் கட்சி இது. போற்றுவார் பணம் போடட்டும், தூற்றுவாரிடமிருந்து பணம் பிடுங்க எங்களுக்குத் தெரியும். காலம் பதில் சொல்லும் (வந்திட்டாய்ய்ய்ங்கப்பா!)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா உங்க பேரோ வேற பேரோ வச்சிருக்கலாம்..:)

கட்சியில் சேரமுன்ன பெசாம உங்க குடும்பத்துல எதாச்சும் பொன்ணு பையன் எடுத்து , குடுத்து உறவாகிட்டா தான் சேஃப் போல..பதவிக்கு..

கெக்கே பிக்குணி said...

வாங்க முத்து. அறிஞர் அண்ணா நமக்கு அறிவைத் தந்த அண்ணல். அவர் தம் பெயரைக் கட்சிக்கு வைத்தாரா? காந்தி, இந்திராவைப் பெற்று நம் நாட்டுக்கே தந்தையாரானார் (இருமிக்கிறேன்;-). அவர் தம் பெயரைக் கட்சிக்கு வைத்தாரா?

கெக்கெபிக்கே கட்சி என்றால் எங்கள் கொள்கைப்பிடிப்பு கேள்விக்குரியதாகி விடுமே? கட்சி உறுப்பினரின் ஓயாத உழைப்பு கேலிக்குரியதாகி விடுமே?

இந்த அளவு தொலைநோக்கு உடையவள் நான். என்னை இன்று மக்கள் புரிந்து கொள்ளாவிடினும், நாளை காலம் பதில் சொல்லும்... (யோவ், ஒருத்தங்களாவது கட்சி அங்கத்தினர் ஆவறாங்களா பாரு, வரவங்க எல்லாம் பதவி பத்தி தான் பேச்சு!)

middleclassmadhavi said...

ஸ்விஸ் அக்கவுண்ட் நம்பரை உடனடியாகத் தெரியப்படுத்தவும்.

கெக்கே பிக்குணி said...

மாதவி, ஸ்விஸ் அக்கவுன்ட் நம்பர் உங்களுக்குச் சொல்லாமயா? சொல்லிட்டாப் போச்சு. உங்க செக் கைக்கு வரட்டும் முதல்ல.

கெக்கே பிக்குணி said...

யப்பா, வடிவேலு படம் பாத்து மக்கள் சூதானமாத் தான் இருக்காங்க!

middleclassmadhavi said...

என்னங்க கட்சித் தலைவி சரியில்லையே? என்னவோ இப்பவே நான் கணக்கு கேட்டதா நினைச்சுட்டாங்களோ?

ஏங்க தானைத் தலைவி கெ.பி., செக் எல்லாம் எல்லாரும் தர முடியுமா? உங்க அகவுண்ட் நம்பர் இருந்தால் நேரே டிபாஸிட் பண்ணிடலாம்!! மரியாதையா(?) என்னை உங்க financial adviser ஆகப் போட்டுட்டீங்கன்னா கட்சி பிழைக்கும்!

கெக்கே பிக்குணி said...

கட்சிக்குக் கட்டணம் கட்டும் முன்னே கணக்குக் கேட்பவர்களைக் கட்டம் கட்டிவைத்துவிடுவேன், ஜாக்கிரதை!

//மரியாதையா(?) என்னை உங்க financial adviser ஆகப் போட்டுட்டீங்கன்னா கட்சி பிழைக்கும்!// அம்மா தாயி, கட்சியை பிழைக்க வைக்கிறதில இருக்கிற உங்க அக்கறையும், உங்க கேள்வியில இருக்கிற மரியாதைத் தொனியிலையுமே புல்லா அரிக்கிது தாயி! :-‍))))

கிளம்ப்பிட்டாய்ங்கப்பா!

அரசூரான் said...

தே.கே.மு.க-வா? அ.உ.தே.கே.மு.க...ஹி..ஹி.. அகில உலக(ந்தேன்)தே.கே.மு.க கட்சியில் உருப்பிடி(கட்சியில் சேர்ந்துதான் நான் உருப்படியா நால் காசு தேத்தனும்)-யாக சேர இத்துடன் பிளாங்க் செக் (வெத்து பேப்பருங்கோ) இணைத்துள்ளேன்.

அப்பாவி தங்கமணி said...

//உறுப்பினர் உரிமைக்கட்டணம்) ஸ்விஸ் அக்கவுன்டுக்கு அனுப்பிச்சிருங்க//
இதெல்லாம் அநியாயம்...காசு குடுத்து ஆள் சேக்கற கட்சினு நெனச்சு வந்தா எங்ககிட்ட காசு கேக்கறீங்களே... நீங்க முன் ஜென்மத்துல finance கம்பெனி owner ஆ இருந்தீங்களோ...

// போஃபார்ஸ் பீரங்கிய அனுப்பிச்சி பிரசாரம் செய்திருவோம்//
ச்சே ச்சே... அதெலாம் வேண்டாங்க...ஜெயிக்கறதுக்கு நான் ஒரு நல்ல ஐடியா சொல்றேன்... வோட்டு போடாதவங்க தினமும் நூறு ப்ளாக் படிச்சு நோட்ஸ் எடுக்கணும்னு ஆர்டர் போடுங்க....பயபுள்ளைக தெறிச்சு போய்ற மாட்டாங்க... அப்புறம் மொத்த வோட்டும் நமக்கு தான்... ஒகே ஒகே... இந்த ஐடியாவுக்கு consulting பீஸ் எல்லாம் வேண்டாம்... என்னது? குடுத்தே ஆகணுமா? சரி உங்க ஆசைய ஏன் கெடுக்கணும்... கட்சி வளர்ச்சி நிதில ஒரு 75% இங்க வெட்டிடுங்க... அப்புறம் அங்க இங்க வர்ற சம்திங் சம்திங்ல ரெம்ப எல்லாம் வேண்டாம்... அதே 75% போதும்...நான் ரெம்ப ஆசைப்படறதில்ல you see... ரைட்ஓ? ஹா ஹா ஹா... மீ எஸ்கேப்...

கெக்கே பிக்குணி said...

அரசூரான், வாங்க வாங்க. நலமா? (பலமா கேட்டுக்கணும், முதல் உருப்படி வரவு) வெத்துப் பேப்பர் தானே, கையெழுத்துப் போட்டே கொடுங்க. உங்களைப் போன்ற தொண்டரின் சேவை தான் நம் கட்சிக்குத் தேவை.

அப்பாவி மேடம், கட்சி உங்களுக்காக என்ன செய்ததுன்னு கேட்காம நீங்க கட்சிக்காக என்ன செய்தீங்கன்னு கேளுங்கன்னு ஒரு பெரிய அரசியல் அறிஞர் சொல்லியிருக்காரு (தன்னடக்கத்தினால், நான் தான் அந்த அரசியல் அறிஞர்னு சொல்லிக்கலை).

பிரசார பீரங்கி இல்லாமல் கட்சி பிரசாரம் நடக்கிறது இல்லீங்க. பீரங்கி மக்களை அச்சுறுத்த அன்று, மக்களை அறிவுறுத்த. மத்தபடி உங்க ஐடியா நல்லா இருக்கு, முதல்வேலையா, உங்க ஜில்லுனுகதையை கரைச்சுக் குடிக்கச் சொல்லி 1000பேரை வோட்டுப் போட வச்சுருங்க, உங்க கமிஷன் பத்தி பேசுவோம், சரியா?

பலே பிரபு said...

என்னால் முடிஞ்ச நாலு அடிமைகளை கூட்டிட்டு வரேன். அப்புடியே கூட்டம் நடத்த ஆளுக்கு 100 கொடுத்தா நிறைய வருவாங்க. (இங்க அப்புடிதான்). என்ன ரெடியா?

கெக்கே பிக்குணி said...

பலேபிரபு, தம்பி உடையோன் படைக்கு அஞ்சோன். எனவே, இந்த மாதிரி தம்பி இருந்தால் ஹிஹி, சொறிசிரங்குபடை வராது.... (ஓகே, இனிம அடிக்கடி இந்த கடிசொறி ஜோக் அடிக்காமல் இருக்க முயற்சி செய்கிறேன்)

தம்பி, உங்க ஊக்கத்தைப் பார்த்து வியந்து போனேன். முசிறித் தொகுதி உங்களுக்குத் தான். இப்ப உங்க கைக்காசைப் போட்டு கூட்டத்தைக் கூட்டிடுங்க. தேர்தல் வெற்றிக்கு அப்புறம், கவர்மென்டு காசு நம்ம காசு தானே?

பலே பிரபு said...

அவ்வ் நான்தான் அந்த அடிமையா?

சரி,

தனியாவா? கூட்டணியா?

இதனைப் பொறுத்து தேர்தலில் நிற்கிறேன்.
தனியாதான்னா, நான் எங்க வீட்டுக்குள்ளயே நின்னுக்கிறேன், இதுக்கு எதுக்கு செலவு பண்ணி முசிறில நிக்கணும்.

மனம் திறந்து... (மதி) said...

கட்சி ஆரம்பிக்கற லெவலுக்கு வந்துட்டீங்க? நீங்க எங்கயோ போயிட்டீங்க அம்மணீ! அடிச்சு ஆடுங்க...பட்டையைக் கிளப்புங்க!

நம்ம கடைப் பக்கம் ஒரு விசிட்டு குடுங்கோ! டுபுக்கு தல, கேடியக்கா, பாவை இவங்கல்லாம் வந்து வாழ்த்திட்டு போயிட்டாகளே!

கடை விலாசம் (என் முதல் பதிவு) இதோ: http://thirandhamanam.blogspot.com/2011/01/blog-post_27.html

இன்னைக்கே வந்தா எல்லாருக்கும் வடை உண்டு...உண்டு...உண்டு!

கெக்கே பிக்குணி said...

பலே பிரபு, கூட்டணி தான் ஐயா, தம்பி தான் நம்ம கட்சியின் பலமே. (இதுக்காவாச்சும் கூட்டம் சேர்க்கிறாரானு பார்க்கலாம்;-))

ம.தி., வாங்க! உங்க பின்னூட்டத்துக்குக் கொஞ்சம் லேட்டாக பதில் சொல்லுறதுக்கு மன்னிக்கவும். உங்க பதிவுக்கு வரேங்க, கொஞ்சம் ஆணி பெரிய ஆப்பு ஆயிருச்சு!

ஆனந்த் ராஜ்.P said...

யக்கோவ் பேரு புதுசு.. கட்சி புதுசு.. அக்கௌன்ட் புதுசு..! ஜமாய்க்கலாம்..! புதுசு புதுசா கட்சி பதவி கொடுக்குரீக..! இந்த "உடன் பிறவா சகோதரன்" நான் இருக்கேன்'க்கா.. மறந்திடாதே..!

ஆனந்த் ராஜ்.P said...

யக்கோவ் பேரு புதுசு.. கட்சி புதுசு.. அக்கௌன்ட் புதுசு..! ஜமாய்க்கலாம்..! புதுசு புதுசா கட்சி பதவி கொடுக்குரீக..! இந்த "உடன் பிறவா சகோதரன்" நான் இருக்கேன்'க்கா.. மறந்திடாதே..!