COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Monday, January 10, 2011

பதிவர் சீமாச்சுவுக்கு பதில்: ராசா! இந்தியாவுக்கு என்னாபா நட்டம்?

சுடச்சுட பதிவர் சீமாச்சு "110. முன்னாள் அமைச்சர் ராசாவால் நமக்கு நஷ்டமா?" பதிவுக்கு  பதில் கொடுக்கணும்னு இங்கே:

இரண்டு துப்பு இருக்கிறது. ஒவ்வொரு விடியோவையும் முழுக்கப் பார்த்து விடுங்கள்.  ஒவ்வொன்றிலும் துப்பு ஒளிந்திருக்கிறது.

முதல்ல:

இரண்டாவது:

 நான் பதிவர் சீமாச்சு கிட்ட கேட்டது முன்னாள் அமைச்சர் ராசா மட்டுமே நஷ்டம் ஏற்படுத்தலை, உங்க படிப்புக்கு ஏற்றாற்போல் விரிவாக விளக்கமா பதிவு போடக் கூடாதான்னு. அவர் அப்படிப் போட்டேன்னு சொல்லி எழுதிய பதிவுல ஏகப்பட்ட பெண் ஃபோட்டோக்கள்.

பொம்பளங்க படம் போட்டு பதிவு ஹிட்ஸ் வளர்க்கிற யாரும் விஷால் மாதிரியோ, சூர்யா மாதிரியோ படம் போடறது இல்லீல்ல, அப்புறம் என்ன?  சரி ஒரு பதிவு முழுக்க இவங்க ரெண்டு பேர் விடியோ போட்டுட்டு போறேன்.

"இந்தியா முன்னேறி விடும், ஊழல் ஒழிய வேண்டும் என்ற சராசரிக்கு மேற்பட்ட குடிமகனின் தாகம், உழைக்காமல் அனைவரும் அறிந்த தகவல் கொடுத்து,  நடிகை படம் போட்டதில் ஈடேறும்".

சரி, சரி, இந்த விளையாட்டை இன்னும் வளர்த்த விருப்பமில்ல‌, வீட்டுல பிழைப்பைப் பாக்கணும், பிள்ளங்களைப் படிக்க வைக்கணும். அப்புறம் பார்க்கலாம்.

எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!

6 comments:

அரசூரான் said...

கெபீஈஈஈஈஈஈஈஈஈ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்ஜாகனும். சீஈஈஈஈஈஈஈஈமாச்சு அண்ணாகூட இவ்வளுவு ஸீஈஈஈஈஈஈஈஈரியஸா ஒரு சண்டையா?
இவிங்க காமிச்ச ஓவ்வொரு பேக்-கும் எத்தனை கோடி? சும்மா ஒரு டவிட்டுதான்

middleclassmadhavi said...

??????

Seemachu said...

என்ன கெக்கேபிக்குனி அக்கா, எதிர்ப்பதிவெல்லாம் போட்டு என்னைப் பிரபலமாக்குறீங்களே.. நானெல்லாம் பதிவுலகத்துல அவ்வளவு வொர்த் கிடையாதுங்க..

உங்களோட 2 வீடியோவையும் பார்த்தேன்.. நான் போட்ட எந்த பெண்ணின் படமும் காம உணட்ர்வைத் தூண்டுவது மாதிரி போட்டதில்லை.. என் இடுகைகளை என் குடும்பத்தாரும் பார்ப்பதுண்டு (படிப்பதில்லை)... சினேகா படம் போட்டால் புடவையில் கையெடுத்துக் கும்பிடும் மாதிரி இருக்கும்..

உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்.. அவசியம் பேசுவோம்...

குடுகுடுப்பை said...

வழக்கமா சினேகா படம் போடுவார், ஒரு பதிவில் பின்னூட்டமிடும்போது, ஓவியா படம் போட்டாத்தான் வருவேன் என்று சொன்னேன். நீங்க காமிடிதான் பண்றீங்கன்னு நினைக்கிறேன்.

கெக்கே பிக்குணி said...

அரசூரான், மாதவி: கூல்!!!!!!!!! பதிவுக்கான குறிச்சொற்கள் பாத்தீங்களா: செய்திவிமர்சனம், ஜோதி, நகைச்சுவை/நையாண்டி, படங்காட்டறது, மொக்கையோ மொக்கை

சீமாச்சு சார், உங்களைப் பற்றிய என் எதிர்பார்ப்பு அதிகம் அவ்வளவே. //சினேகா படம் போட்டால் புடவையில் கையெடுத்துக் கும்பிடும் மாதிரி இருக்கும்..// உண்மையில, மாரியம்மன் படம் போட்டாலும்! உங்களைப் புண்படுத்தும் நோக்கம் இல்லைனு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும்னு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும்னு... பாயின்டு புரிஞ்சிகிட்டீங்க. நன்றி!

குடுகுடுப்பை: ஓ, நீங்க தான் காரணமா?:-) முதல்முறை என் பதிவுக்கு வர்றீங்கன்னு நினைக்கிறேன். இனி அடிக்கடி வாங்க, இல்லையின்னா, திரும்பி பதிவில இந்த மாதிரி நடிகர்கள் படங்கள் வரும்:-)

அபி அப்பா said...

இத்தனை நடந்துகிட்டு இருக்குதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அக்கா! நீங்க அடிச்சது ஒரு புள்ள பூச்சிய. அதனால கப்பு எனக்குத்தான்:-))