தமிழோவியத்தில் வெளிவந்த என் அலம்பல்: “டேவிட் லெட்டர்மென்” என்கிற காமெடியரின் அடிதொற்றி
அமெரிக்காவில் எனக்குப் பிடித்த பத்து விஷயங்களை, “டேவிட் லெட்டர்மென்” பார்த்து வான்கோழி நான் ஆடியிருக்கிறேன். “நல்லாயிருக்கு” போன்ற கமெண்டுகள் தமிழோவியம் தளத்தில் போட்டு விடுங்கள்:) நல்லாயில்லை என்றால், இங்கேயே சொல்லிடுங்க! ஏன் என்றால் இந்தப் பதிவு இந்த காரணத்தாலேயே காலம் காலமாக மட்டுறுத்தப்படுகிறது ஹிஹி!!
13 comments:
அங்கே போய் ஒரு ஜே கோஷம் போட்ருக்கேன். ;-)
மக்கள் நல்லா இருந்து என்னா புண்ணியம். அங்க மகேசன் சரி இல்லையே(எப்பவுமே)
February Puzzles!!!
http://baleprabu.blogspot.com/2011/02/puzzles-february-2011.html
தமிழோவியம்னு ஒரு தளம் இருப்பது தெரிந்து கொண்டேன்.. உங்க தயவில்.
அடிதொற்றினா என்ன? மட்டுறுத்தலனா என்னனும் சொல்லிடுங்க. (சும்மா பேரை மட்டும் கெக்கே பிக்குணினு வச்சுகிட்டு என்ன ஆட்டம் ஆடுறீங்க..!)
RVS, ஆஹா, மிக்க நன்றி. உங்கள் வரவிலும், ஆதரவிலும், தன்யை ஆகி..இருந்திருப்பேன், ஆனால், அமவுண்ட் கேட்டு நீங்கள் அங்கே பின்னூட்டம் போட்டதில், எல்லாம் செலவழிந்து போச்சு:-)
பலே பிரபு, மக்களும் அப்படியே, மகேசனும் அப்படியே. அது தாங்க பாயிண்டு #2. என்னை அடிச்சிட்டு சும்மாப் போயிடுவியாங்கிற திமிர். பொதுவா அடிப்படையில் ஓரளவு நல்ல குணம் இருந்தாலும், நாட்டாமை சொம்பில்லாம இருக்க முடியுமா!? :-)
நான் வந்து உங்க புதிர்களை முழுசாப் பார்க்க இன்னும் ரெண்டு வாரமாவது ஆவும்.. கட்டாயம் வருவேன்!
அப்பாதுரை, தமிழோவியம் ந்யூஜெர்ஸியிலிருந்து வெளியாகிறது.
நீங்க இந்த மாதிரி சொல்லும்போதெல்லாம், வடிவேலு சொல்றது (”இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே”) நினைவுக்கு வருது:-) எனக்கு வடிவேலு டயலாக் எல்லாம் பதிவுலகம் வந்து தான் தெரியும்;-)
தமிழ் அகரமுதலியில் தொற்று: http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81&table=fabricius
மட்டுறுத்தல்=Moderation (of comments).
வடிவேலு எனக்கும் புரியாத புதிர். எரிச்சல் தான் வருகிறதே தவிர ரசிக்க முடியவில்லை. என் தங்கை மகன், 'உனக்கு போற வயசு மாமா அதான் வடிவேலு புரியலை' என்று சாதாரணமாகச் சொல்லிட்டுப் போயிட்டான்!
ஆஹா பேஷ் பெஷ்..:)
அப்பாதுரை, வடிவேலு is an acquired taste? ஒரு “அடிவாங்கி”யின் கதை, PhD பண்ற அளவுக்கு இந்தக் காலக்கட்டத்தின் தமிழ்க் கலாசாரத்தை நல்லா சொல்றாரு. அவர் சொல்றதெல்லாம் க்ளிஷே ஆகிற அளவுக்கு இருக்கு. ஆனா, அவர் பேச்சுக்கும் ஃபேசுக்கும் இப்ப சம்பந்தமும் இல்லை... யூட்யூப்ல போட்டுட்டு, வேற டாப்ல வேலையப் பார்க்கலாம்.
முத்து, வாங்க, வாங்க. பேஷ் தானே? பாஷ் (bash) இல்லியே? :-)
அமெரிக்காவில் இவ்வளவு நேர்மறையான விஷயங்களா...ஆச்சர்யமளிக்கின்றன...கோர்த்து சொன்ன விதம் அழகாக இருந்தது...
//வடிவேலு எனக்கும் புரியாத புதிர் // சிக்கிரம் புரிஞ்சு பழகிக்கங்க அப்பாதுரை...இல்லாட்டி அவுட்டேட்டட்.
புரிஞ்சுட்டா, வடிவேலு செட் சேர்ந்து செய்யற ரவுசுல நாமளும் பசங்களோட சேர்ந்து கொஞ்சம் மனசு விட்டு சிரிக்கலாம் ...
ச்சே... சப்போர்ட் பண்ணியும் கெடுத்துட்டேனா! ரொம்ப சாரி!
வடிவேலு ஜோக் நிறைய டாம் அண்ட் ஜெர்ரியில் சுட்டது.. உத்துப் பார்த்தால் புரியும். வயசானவங்களுக்கும்!!! ;-)
இரண்டாவது பாயிண்டை தவிர மிச்ச எல்லாம் அருமை..
அல்ல்லோ?
Post a Comment