COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Friday, April 08, 2011

மக்கள் சக்தி ஆளும் மன்னர்களுக்குத் தெரியட்டும்!

சின்ன வயசில இருந்து 'அரசியல்னா சாக்கடை, அரசியல்வாதி கிட்ட வம்பு வைக்காதே'ன்னு சொல்லி வளர்த்திருப்பாங்க, இல்ல 'தம்பி, ஓங்கினவன் கைய ஒடச்சிட்டு வந்தாத்தானே நாளைக்கு அரசியல்ல பெரிய ஆளா வர முடியும்'னு சொல்லி வளர்த்திருப்பாங்க. ஒரு பக்கம் அடிமாடுகளா வளர்கிறோம், இல்லையென்றால் அடியாள்களாக வளர்க்கப்படுகிறோம்!

எங்க பார்த்தாலும் ஊழல், லஞ்சம். எங்கள் திருமணம் நூற்றுக்கணக்கானவர்கள் முன்னால நடந்தது, அதுக்கு சர்டிஃபிகேட் வாங்க நடையா நடந்தார் என் கணவர். இந்த சான்றுப் பத்திரம் வாங்க லஞ்சம் கொடுக்க மாட்டேன்னு அவருக்கு ஒரு வீராப்பு. அஞ்சு நாள் அந்த ஆபிசர் முன்னால உட்கார்ந்திட்டு வந்ததால், ஆபீசர் வெறுத்துப் போய் லஞ்சம் வாங்காமல் அந்த பத்திரத்தைக் கொடுத்திட்டார். ஒரு பத்திரத்துல கையெழுத்துப் போடத் தானே அரசாங்கம் அவருக்குச் சம்பளம் கொடுக்குது? எதுக்கு நாம மேல போட்டுக் கொடுக்கணும்?

ரேஷன் கடையில நின்னு சாமான் வாங்கியிருக்கீங்களா? சின்ன வயசில நான் வாங்கியிருக்கேன். நான் பார்த்த போதெல்லாம், நடப்பது இது தான்: ரேஷன் கடை ஊழியருக்கு வேண்டிய ஆள்னா, க்யூவுல நிக்க வேண்டாம். நல்ல அரிசி வந்தா, வேண்டியவங்களுக்குத் தான் போகும். ஏன்?

நேத்தைக்கு ஒருத்தர் நொந்து போய் ட்விட்டர்ல எழுதுறாரு: 'லோ வோல்ட்டேஜ் கரன்ட்டா இருக்கு. யாரச் சொல்லி என்ன பிரயோசனம்? தெரிஞ்ச கவுன்சிலர் கிட்டச் சொல்லணும்' என்று! 'தெரிஞ்ச கவுன்சிலர்' கிட்ட சொன்னா, அவர் நமக்கு உதவி செய்ய அவருக்கு என்ன முகாந்திரம்? கரன்ட் சரியா வர வைக்க எல்லாரும் அவங்க-அவங்க கவுன்சிலர் கிட்ட போனா என்ன ஆவும்? 'யாரு நிறைய எனக்கு லஞ்சம் கொடுக்கிறாங்களோ, யாரு எனக்கு வேண்டப்பட்டவங்களோ அவங்களுக்குத் தான் நான் உதவுவேன்' அப்படின்னு சொல்லப் போகிறார்?

தெரிஞ்ச விஷயம் தானே? பூனைக்கு யார் மணி கட்டப் போறாங்க? படிச்சவங்களாச்சும் அரசியலைத் தூய்மைப் படுத்தி, 5 வருடம் இருந்து, பாலம் கட்டுறது; ரோடு பள்ளம் சரி செய்யிறது; பென்ஷன் வாங்கித் தரதுன்னு முயற்சி செய்து கொடுத்தால் தான், நம் கட்டமைப்பில் இருக்கும் பிரச்னைகள் என்னன்னு தெரியும்; கட்டமைப்பின் ஓட்டைகள் சரியாகும்!

படிச்சவங்க ஏற்படுத்தின அமைப்பு இந்த அரசாங்கம். இதுல ஏன் இத்தனை ஊழல்? அரசாங்கத்துக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் எப்படி வந்தது? 

ராசாவா இருக்க வேண்டிய ஒரு மந்திரி 'மக்களுக்காக அரசாங்கம் புதுக் கடையத் திறந்திருச்சு, ஆனா, அப்படித் திறந்திருச்சுன்னு ஒரு மாசம் கழிச்சுச் சொன்னா, எனக்கு வேண்டிய ஆளுங்க வந்து அந்த ஒரு மாசத்துக்குள்ள வேண்டிய சாமானை எடுத்திட்டுப் போவட்டும்'னு லட்சம் கோடின்னு மாய்மாலம் பண்றாரு. ஆனால், அவருக்குக் கையூட்டாக பணம் வந்ததுன்னு, 'மவனே'ன்னு அந்த சிவனே வந்து தீர்ப்பு சொன்னாலும், வந்த கையூட்டுப் பணத்தை மந்திரி திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை!

இந்தியாவில் மாற்றம் ஏற்படணும்னு, லஞ்சம் ஊழலை எதிர்த்து நல்ல மனுசங்க சேர்ந்து தோற்றுவித்த இயக்கம் இந்த மக்கள் சக்தி இயக்கம்!!  இந்த இயக்கம், நம்மால மாற்றம் ஏற்படுத்த முடியும்னு படிச்ச / படிக்காத நல்லவர்களை வேட்பாளர்களா நிறுத்தியிருக்கு. வேட்பாளர்கள் விவரம் இங்கே இருக்கு. வோட்டுப் போடுங்க! மாற்றத்தை ஏற்படுத்துங்க!

தமிழ்நாட்டில், 15 மாவட்டங்களில் 35 தொகுதிகளில் மக்கள் சக்தி இயக்கம் போட்டியிடுகிறது. லோக்சத்தாவோடு கையிணைத்து மறுமலர்ச்சி ஏற்படுத்த முடியும்னு நம்புகிறது. ஏற்கெனவே ஆட்சியில் இருந்தவங்க, சட்டசபைக்குப் போயிட்டு வந்தவங்க, நம்ம கட்டமைப்புல இருக்கிற‌ பிரச்னைகளை எடுத்துச் சொல்ல மாட்டேன்றாங்க. மக்கள் சக்தி இயக்கம் சொல்லட்டும். மாற்றம் ஏற்படட்டும்.

மக்கள் சக்தி இயக்கம் போட்டியிடும் இடங்களில் நீங்களோ, உங்கள் உறவினர்களோ வசித்தால், என் மனமார்ந்த பணிவான வேண்டுகோள் இது! நீங்க என்னை விட வயசிலே பெரியவங்கன்னா, உண்மையான பணிவோட, வணங்கிக் கேட்டுக்கிறேன், வயசில் சின்னவங்க - ஓட்டுப் போடும் வயசா இருந்தால், காலரைப் பிடித்துக் கேட்கிறேன் - வோட்டுப் போடுங்க! மக்கள் சக்தி இயக்கத்துக்கு வோட்டுப் போடுங்க!

வோட்டுப் போடும் வயசு வரலைன்னா, முத வேலையா உங்க வீட்டுப் பெரியவங்களை வணங்கி, அதட்டி, கெஞ்சி, மிரட்டி எப்படியாவது வோட்டுப் போட வைங்க. எதிர்காலம் உங்களுதுன்னா, உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய‌ணும்னா, லஞ்ச ஊழலற்ற பெரிய நாடா இந்தியா வரணும்னா, மக்கள் சக்தி இயக்கத்துக்கு வோட்டுப் போடச் சொல்லுங்க.

மாற்றத்துக்கு வோட்டுப் போடுங்க! 
மறுமலர்ச்சிக்கு வோட்டுப் போடுங்க!
மக்கள் சக்தி இயக்கத்துக்கு வோட்டுப் போடுங்க!

PhD படித்த, கோவை பல்கலை முன்னாள் துணைவேந்தர், RECT/NITT முன்னாள் முதல்வர் திரு. இளங்கோ, இந்தத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில நிற்கிறார்.

விஜய் ஆனந்த், அமெரிக்க வாழ்க்கையைத் துறந்து, 5th Pillar என்கிற இயக்கத்தைத் தொடங்கிட்டு, இப்ப மக்களுக்காகப் பயனுள்ளதா செய்யணும்னு கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் இந்தத் தேர்தலில் மக்கள் சக்தி இயக்கத்துக்காகப் போட்டியிடுகிறார்.

மக்கள் சக்தி இயக்கத்துக்காக, ஐந்தாம் வகுப்புப் படிச்சவங்களும் தேர்தல்ல நிக்கிறாங்க, MBA/LLB படிச்சவங்களும் தேர்தல்ல நிக்கிறாங்க, மாற்றம் ஏற்படுத்தச் சொல்லி வோட்டுப் போடுங்க!

13 comments:

middleclassmadhavi said...

Welcome back!

இந்தியாவில் இப்போது அன்னா ஹசாரேவின் போராட்டத்தையும் மக்கள் ஆதரவையும் வெற்றியையும் பார்த்திருப்பீர்கள். உங்கள் கோரிக்கையும் சரியானதே.

புது டெம்ப்லேட், ஃபாலோயர் விட்ஜ்ட்- கலக்கறீங்க!

நசரேயன் said...

பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி கெக்கே பிக்குணி

நசரேயன் said...

வாழ்க போட மறந்துட்டேன்

கெக்கே பிக்குணி said...

மாதவி, உங்க கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி. மாற்றம் ஏற்படும் என்கிற மிக நிச்சயமான நம்பிக்கை இருக்கு எனக்கு. ஒளிரும் இந்தியா! வருகைக்கு நன்றி.

நசரேயன், 'வாழ்க போட' திரும்பியும் மறந்துட்டீங்களே? வேணும்னேவா? :-))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மக்கல் சக்தி ஓங்கட்டும்

வாழ்க கெக்கேபிக்குணி!

middleclassmadhavi said...

ஸாரி, அது அண்ணா ஹசாரே, என் http://middleclassmadhavi.blogspot.com/2011/04/5.html - பார்க்கவும்.

ராஜ நடராஜன் said...

நீங்க இந்த தகவலை முன்பே சொல்லியிருக்கலாம்.ஓரளவுக்கு பரப்புரையாவது செய்திருக்கலாம்.

கெக்கே பிக்குணி said...

மக்கள் சக்தி இயக்கம் உங்க ஊர்ல போட்டி போட்டால், வேட்பாளரைப் பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டு வோட்டு போடுங்க! ம.ச.இ. உங்க ஊர்ல போட்டி போடலைன்னாலும், இந்த அரிய வாய்ப்பைத் தவற விடாமல் வோட்டு போடுங்க. நன்றி.

கெக்கே பிக்குணி said...

முத்து, வாங்க வாங்க. நீங்க இன்னிக்கு வோட்டு போட முடியாது (என்று நினைக்கிறேன்), ஆனாலும், அண்ணா ஹசாரேவின் போராட்டத் தாக்கம் உங்க ஊர்ல நல்லா தெரிந்திருக்கக் கூடும். எழுதுங்க! ஹிஹி, கோஷ ஆதரவுக்கும் நன்றி:-)

மாதவி, பதிவுக்கு வந்தேன், கருத்தும் தந்தேன். இன்னிக்கு வோட்டு போட்டுடுவீங்கன்னு நன்றி.

கெக்கே பிக்குணி said...

ராஜ நடராஜன், இந்த பதிவுக்கான விவரங்கள் சேகரித்து, பதிவைப் போட்டு, ட்விட்டரிலும் விளம்பரப் படுத்தி, பின்னூட்டங்களை "நேரம் பார்த்து" போட்டேங்க...

நல்லது நினைத்தால், நல்லதே நடக்கும்னு நம்புகிறவள் நான். பார்ப்போம். உங்களுக்கும் நன்றி.

அப்பாவி தங்கமணி said...

Great summary... start should reach end someday... this applies to corruption too... will happen... I got that hopes too...

Heard about Mr. Vijay Anand. I guess he is also involved in AIMS foundation... thanks for the nice message

கெக்கே பிக்குணி said...

அப்பாவி மேடம், என்னை மாதிரி "நிஜ அப்பாவி"ங்க பதிவுகளுக்கும் வந்ததுக்கு நன்றி:-)

படிச்சவங்க, இன்றைக்கு நாட்டுக்கு நல்லது பண்ணனும்னு முழு நேர அரசியலில் ஈடுபடுவது ஆரோக்கியமான விஷயம். உங்களை மாதிரியே நானும் புதிய இந்தியா மலரும்ன்னு நம்புகிறேன். நன்றி.

அப்பாதுரை said...

எத்தனை ஓட்டு விழுது பார்ப்போம்.