COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Wednesday, April 27, 2011

இருட்டு நிழல்கள்

போகிற பாதை தெரியாத இருட்டு
தொடர்ந்து வரும் கருப்பு நிழல்கள்
இருளில் கருப்பு இருட்டு உண்டோ?

பாதைகளில் பரமபதம்.
சோழி உருட்டுவதும் நானில்லை.
பாம்புகளின் வழுக்குதலில்
ஏணிகளின் கனவுகள்.

கோர உருவங்கள் கற்பனையில் வருமளவு
விகாரக் குரல்கள்.

எக்களிப்பில்,  ஆங்காரத்தில்,
உமிழ்ந்து வரும் வசைகளில்,
கண்ணீர் இருட்டைச் சுட வைக்கும்.

நான் என்னிடமிருந்து காணாமல் போவதற்குள்
எங்கேனும் வீடு திரும்ப வேண்டும்.
 

10 comments:

Yaathoramani.blogspot.com said...

பாதைகளில் பரமபதம்
சோழி உருட்டுவதும் நானில்லை...
அருமையான படிமம்
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

ரமணி, உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி!

middleclassmadhavi said...

Omkaraamaai oLi vanthu
Iruttunizhalaith tholaippathaRkum

kaNNIrththulikal
Ananthathaththil mattumE malaravaum

vaazhththukkaL

Prabu Krishna said...

//Labels: கவுஜ, கவுஜ மாதிரி‌, தோல்வியின் பிடியிலோ//

எப்புடிக்கா இப்பிடில்லாம்?

கவிதை ரொம்ப அருமை!!!

அப்பாதுரை said...

ஏப்ரல் மாதம் நல்ல சாகுபடி போலிருக்கே? அத்தனையும் தவற விட்டேன் போலிருக்கு!
பாதை போடும் கவிதை.

Unknown said...

மாதவி, ஊக்கத்துக்கு மிக்க நன்றி!

பலே பிரபு, பாராட்டு நன்றி! எப்படின்னா, ரூம் போட்டு யோசிக்கிறது தான், ஹிஹி...

அப்பாதுரை, பாதை தெரியாத இருட்டுன்னு சொல்லியிருக்கேன், நீங்க, 'பாதை போடும் கவிதை'ன்னு சொன்னதுக்கு நன்றி! (உள்குத்து இல்லைன்னு தான் தோணுது:-)

மோகன்ஜி said...

/பாம்புகளின் வழுக்குதலில்
ஏணிகளின் கனவுகள்./

ஆழமான சிந்தனை. கவிதை அழகு.

priya.r said...

நல்ல பதிவு
ஹி ஹீ அதனாலே எனக்கு புரியலை
ஏதோ மொக்கை பதிவு போட போறேன்னு சொன்னீங்களே :)

priya.r said...

அடுத்த(அப்பாவி பற்றிய) பதிவு எப்போ வரும்னு என்ற எதிர்பார்ப்பை எப்போ நிறைவேற்ற போறீங்க ?!

அப்பாதுரை said...

பாதை தெரிஞ்சுதுனா பாதை போட முடியாதுங்களே?