11/19/07-இன் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இலிருந்து 50 தலைவியர் - பொட்டு வைத்த வட்ட முகம்!

50 பெண்களில் முதலாவதாக - வெல்பாயிண்ட்-இன் பெண் மு.நி.இ. ஆகியிருக்கும் அஞ்சலா ப்ரேலி (Angela Braly) இன் எதிர்பார்ப்புகள், பின்புலம், எல்லாம் எழுதியிருக்கிறார்கள். இரண்டாவதாக - சென்னை தந்த தங்கப் புதல்வி இந்திரா நூயி பற்றி தமிழில் எல்லாரும் நல்லா எழுதியாச்சு! அவங்க "நான் ஒரு தாய் முதலில், தலைமை நிர்வாக அதிகாரி அடுத்ததாக, அடுத்தே மனைவி" யிலிருந்து, அவர் குடியுரிமை வரை எல்லாத்தையும் ஊடகங்களும், பதிவர்களும் கிழிச்சாச்சு. ஏன், ஆ.வி.ல, (என் அருமைப்) பாடகி அருணா சாய்ராமுடைய உறவு முறை பற்றியும் குறிப்பிட்டிருந்தார்கள். முக்கியமாக, இந்திரா நூயியின் பணி, பெப்ஸிகோவின் பானக / தின் பண்டங்களின் portfolio சிறப்பாக வைத்திருத்தல், பெப்ஸிகோவினால் சுற்றுப்புற மாசு கெடாதிருத்தல் (கரிச்சுவடு?) இவற்றோடு, இப்போதைக்கு வளர்ந்து வரும் அதன் நிகர வருமானத்தை வளர்ச்சி கெடாமல் கண்காணித்தல் இவை தாம் என்று சொல்கிறார்கள். ஈயம் விற்பவர்கள் கவனிக்க: இந்திரா நூயியின் தாயார் இந்திராவின் சிறு வயதில் இந்திராவுக்கும் அவர் சகோதரி (இவரும் நியுயார்க்கில் வசிக்கிறார்)க்கும் தினம் மாலை போட்டி வைப்பார் (தெரியாதவர்கள் கூகிளாண்டவரை வேண்டுக).
அவருக்கு நியுயார்க்கிலேயே இப்போது வசிக்கும் ஒரு சகோதரர் உண்டே? அவர் போட்டியில் கிடையாதா?

அடுத்து இன்னொரு பொட்டு வைத்த வட்ட முகம். (நான் அமெரிக்கா வந்த புதிதில் - ஆச்சு ஒரு மாமாங்கம் - எத்தினி தபா அது என்னா, மச்சமா, ஏன் எல்லாரும் வக்கிறதில்ல - சொல்லி அலுத்துப் போயி பொட்டு வைக்கிறதே விட்டாச்ச்! யோசிச்சுப் பாத்தேன், சாம்பல் திருநாள் - Ash Wednesday - அன்று கத்தோலிக்கர் அல்லாது எல்லா கிறிஸ்துவரும் சாம்பல் இட்டுக் கொள்வதில்லை; எல்லா யூதரும் தொப்பி அணிந்து கொள்வதில்ல; எல்லா இந்துக்களும் - ஆண்களும் சேர்த்து - பொட்டு வைத்துக் கொள்வதில்லை - நான் மட்டும் ஏன் என்று. என் வாழ்வின் பல நிலைகளில் அதுவும் ஒன்று. இப்போ, பளிச்சென்று பெரிய பொட்டு:-))). வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் இருப்பதிலேயே கண்ணைக் கவர்ந்தது மனிஷா கிரோத்ரா (Manisha Girotra) வின் புகைப்படம். இந்த பெண்களில் 43வது இடத்தைப் பிடித்தவர், 38 வயதான மனிஷா. UBS-இன் நிர்வாக இயக்குனர், டெல்லி / லண்டன் பொருளாதாரப் பள்ளிகளில் படித்தவர். இவரின் எதிர்பார்ப்பு ஸ்டாண்டர்ட் சார்டர்டிடமிருந்து UBS வாங்கியுள்ள / UBS-இன் சொந்த wealth managementஐ வளப்படுத்தல். இவரின் வருத்தம் - மும்பையில் பெண்கள் எவ்வளவு திறமை வாய்ந்தவராயினும் அப்பெண்ணின் கணவர் நல்ல சம்பளமுள்ள வேலை/உயர்வு கிடைத்ததும், பெண் தம் பணியைத் துறந்து வீட்டோடு இருந்து விடுகிறார் என்பது தான். "எவ்வளவோ சொல்லியும் பெண்களின் இந்த பழக்கத்தை மாற்ற முடியவில்லை.
இதில் என் வெற்றி விகிதம் 0! அதனால் முயற்சியை விட்டு விடுவதாயில்லை".
You go girl(s)!
1 comment:
பொட்டு வைத்த வட்ட முகம்-னுட்டு மனிஷாவோட இந்திய பாரம்பரிய மிக்க படம் போடலன்னா நல்லாவா இருக்கும்? அதான் மாத்திட்டேன். மனிஷா சண்டிகரில் "ரோஸ் இளவரசி 1971" அப்படின்னு சொல்றாங்க. நம்பத் தான் முடியல. அப்ப ரெண்டு வயசிருக்குமா அவங்களுக்கு?
ரெண்டோ மூணோ வயசில ஒரு சின்ன பெண் குழந்தையும் உண்டாம் இவருக்கு! இந்திரா நூயிக்கும் இரண்டு பெண் குழந்தைகள் தாம்!
வாழ்த்துவோம்!
Post a Comment