அது என்ன வியாதியா? தெரியுமே, புதிசா ஒரு வியாதி பேரு சொல்லிட்டா, நீங்களூம் காபி/இளநி ரைட்டு வாங்க வந்துடுவீங்களே. நான் இப்ப ரீஜன்டா படிச்சது அதாவது, இம்பார்டன்ட்டாக பேரு எடுத்தவங்க (தோடா!) "வாழ்வின் முக்கிய படைப்பு" என்ற வகையிலே படைக்கும் வரையிலே ஒரு மனத்தடை, படைப்புத்தடை வந்துடுதுன்னு. நான் எப்படி எழுதினாலும் படிக்கறவங்க படிக்கத்தான் போறிங்க. வீக்கென்டு ஜொள்ளப் போறவங்க... எப்படியோ உங்க தலை எழுத்து எதுவோ!
*************************************************************************************
சரி, இன்னிக்கு என் பதிவுக்குப் புதிசா ஒரு ட்விட்டர் கொண்டு வந்திருக்கேன். ட்விட்டர் வந்து ரொம்ப நாளாக இருக்கிறது. தமிழ் மக்கள் பயன் படுத்துவாங்களாயிருக்கும். நான் கொஞ்ச நாள் மட்டம் போட்டதில யாரும் எழுதியிருந்தால், என் அறியாமையை பொறுத்தருள்க.
ட்விட்டரை வச்சுகிட்டு, துளசி டீச்சர் போகிற ஊர்ல என்ன "பரேட் வந்துகிட்டுருக்கு"; "நடந்து போறேன்"; "ஹை, யானை பொம்மை இங்க நல்லா இருக்கு"னு அப்டேட்டு செய்யலாம். இல்லையா, வேற யாராச்சும் "போண்டா சாப்பிட்டேன்", "இங்கன நல்லா இல்ல", "எல்லாரும் படோசன் ;) பார்க்குக்கு வராதீங்க, தாத்தா இருக்காரு" ன்னு டக்னு அப்டேட்டும் செய்யலாம்.
எனை ஈன்ற தந்தைக்கு என்னால் தினையளவு நன்றி: என் குருவாய், என் குடும்பத்தில் சில "முதல்" பட்டங்களை நான் பெற துரோணரான "சுஜாதா"வுக்காக இப்ப இந்த குறுங்கதை
11 comments:
நெத்தியில போட்டுவச்சா மண்ட எம்ட்டி -ன்னு அர்த்தம் -ன்னு எல்லாம் பேசிக்கிறாங்களே அது உண்மையா, மார்ட்டினி பிக்கினி...சாரி கெக்கே பிக்குணி.
பழைய பதிவு ரொம்ப பழசா இருக்கிறதால அதற்கான பின்னூட்டத்த இங்க போட்டுர்ரேன்....
...வ்வ்வர்ட்டா?
வாங்க சுமன். முதல் வருகை நல்வரவாகுக! உங்க ப்ளாகர் ப்ரொஃபைல் வர மாட்டேங்குதே? நிஜ ஆளு தானா ;)))
நெத்தியில "போ"ட்டு வைச்சா, ஆளு போயிட சான்ஸ் இருக்குல்லே!
ஏனுங்கம்மணி, மகளிர் தினத்திக்கி எதுனாச்சி 'ரம்பம்' வச்சிரிக்கிங்கலாக்கும்?
துளசி கோபால் அவர்களே,
பதிவு சூப்பர்!
சுமன், ஏதோ ஐடியாவோடு தான் வந்துருக்கீங்கன்னு தெரியுது... நடத்துங்க;)
ag_y, அ ராங் நம்பர்.... துளசி கோபால் இருப்பது கோளத்துல அந்தாண்ட.
இன்னிக்கு யார் முகத்தில முழிச்சேன்.. ஹ்ம்...!
சாரி....எல்லாம் மறந்துடுங்க,
"உளறுதலே எம் பணி" -ன்னு பாத்ததும் சீரியஸா பின்னூட்டமிட தோணல.
மார்ச் 8 -க்கு என்ன எழுதப்போறிங்க? சீரியசா கேட்கிறேன்.
சுமன், ம்... இன்னும் ஒண்ணும் யோசிக்கலை.... ஏன், மகளிர் தினத்துக்காக எல்லா மகளிரும் பதிவு போடணும்னா?
நீங்க நிசமா யாருன்னு சொன்னீங்கன்னா, காக்கா சத்தியமா ஒரு மொக்கைப் பதிவு போடறேங்க அன்னிக்கு!
சொல்ரதாருந்தா புரபைல்லையே என்னப்பத்தி போட்ருப்பன் இல்ல. நான் ஒரு ஹாம்லஸ் அனானி. என்ன விடுங்க!
எட்டாந்தேதி சீரியஸ் பின்னூட்டம் போடறேன்.
மக்களே, ட்விட்டர் பயன் பற்றி யாராவது உங்கள் கருத்தைச் சொல்லுங்கப்பா!
என் பிரண்டு யாராவது ட்விட்டேர் ஓபன் பண்ற வரைக்கும் நான் வெயிட் பன்னனுன் ங்க ங்க ங்க ங்க ங்க ங்க ங்க ங்க ளா? யார இன்வைட் பண்ணாலும் ரிப்ளை இல்ல! எல்லாரும் ஸ்பேம் -க்கு போய்டுச்சு -ன்னு சொல்றாங்க. ட்விட்டேர் அவ்ளோ நொட்டோரியசா?
இல்லை, உங்க தோழர்கள் வர வரைக்கும் காத்திருக்கத் தேவை இல்லை. உங்க ட்விட்டர் பதிவுக்கு நேராப் போய் பாருங்க. ஏதாவது எழுதுங்க!
வலைப் பதிவுல நான் என் ட்விட்டரின் செய்தியோடையை இணைத்துள்ளேன், அப்படியும் செய்யலாம். வலைப்பதிவில் இட்டால், தோழர்கள் நேரிடையாகப் பார்க்கவும் இயலும்.
ஸ்பாம் (எரிதம்?) என்றாலும், 'நாட் ஸ்பாம்' க்ளிக் செய்யலாமே?
Post a Comment