COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Thursday, April 17, 2008

பூமியில் விழப் போகிறது சிறுகல்கோள் (அஸ்டெரொஇட்)!

அந்த சிறுகல்கோள் பெயர் அபோஃபிஸ். 2029இல பூமிக்கு மிக அருகில், எவ்வளவு அருகில்?


இப்போ நம்ம பூமியை சுத்திகிட்டுருக்கிற செயற்கைக்கோள்கள் பல உண்டு. அதாங்க, ஆப்கனிஸ்தான்ல பின் லேடன் பாண்டி விளையாடுறாரான்னு பாக்க ஒரு செயற்கைக் கோள், நம்மூரு டிவி நிகழ்ச்சிகளுக்கு செயற்கைக் கோள் (கண்ணீரைப் பிழியறதுக்கே சீலை கட்டணும்) நம்மூருல இருந்து தட்ப வெப்ப நிலை எப்படி இருக்கிறதுனு பாக்கிற செயற்கைக் கோள் (இதை பிஸினஸாகவே செய்யும் அளவு தொழில் நுட்ப அறிவும் உள்கட்டமைப்பும் குறிப்பிட்டு சொல்கிற அளவுக்கு நம்மூர்ல இருக்குங்க!) என்று பல நூறு (விக்கில 238 என்று சொன்னாலும், இதுவரை 4000க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் நாம் இட்டிருக்கிறோம்) இப்பொழுது பூமியைச் சுற்றி் கொண்டு இருக்கின்றன) செயற்கைக் கோள்கள் இருக்கின்றன.

இந்த செயற்கைக் கோள்களில், சில (சுமார் 800) பூ‍வொத்த சுழற்சி கொண்டவை. அதாங்க, ஃப்ரான்ஸ்ல ரோட்டோரமா நடந்தா நம்ம பின்னாலயே நடந்து நம்மின் நடை பாவனைகளைக் கேலி செய்யும் மைம் போல, பூமியின் சுழற்சியை ஒத்துப் போகும் செயற்கைக்கோள்கள். ஸோ, ஒரே இடத்தில் நிற்கிற மாதிரி சுழலும்! இவை பொதுவாக 22,000மைல் (36,000கி.மீ.) உயரத்தில் சுழலுமாம்.

இத்தினி சுழல்கோள்கள் இருக்கும்போது, ஏதேனும் சிறுகோள், எவ்வளவு இருக்கும் பிரபஞ்சத்தில்? அவை மோதினால் என்ன ஆகும்? சுமார் 300 கல்கோள்கள் ஆபத்து விளைவிக்கக் கூடியவை தாம்! ஏன், இந்த ஜனவரி 30, 2008 கூட ஒரு சிறுகல்கோள் நம்ம வூட்டாண்ட பக்கமா போச்சு, அதிகம் இல்ல ஜென்டில்மென், ஒரு 540000கி.மீ. இப்பதான், ஒரு 20,000 ‍..50,0000 வருடங்களுக்கு முன் அரிஜோனா மாநிலத்தில், ஒரு கல்கோள் இடிச்ச படம்;) சுமார் 1.5கி.மீ. விட்டம்! பக்கத்தில் இருக்கும் படம் அந்த க்ரேட்டர் தான்.

அபோஃபிஸ் 2029இல் பூமிக்கு மிக அருகில் வரப் போவுது. இந்த கல்கோள் 1971இல் நம்ம பூமிக்கு பக்கத்தில் வந்திருக்கிறது. சூரியனைத்தான் சுத்துது. இப்போதைக்கு பூமியிலிருந்து நிலா எவ்வளவு தள்ளியிருக்கோ, அதைவிட 15முறை (அதாவது 5.8மில்லியன் கி.மீ.) தள்ளிதான் இந்த கல்கோள் 2029இல் போகும்னு சொல்றாங்க. இதன் சுழற்சி வேகத்தைப் பற்றி தெளிவாகத் தெரியாதுன்னும் ஒத்துக்கறாங்க. அதனால், இந்த கல்கோள் சுமார் 30‍-70மீ விட்டம் இருக்கும்ங்கறதால், இது மோதினால் எங்க மோதுமோ? அதன் சுழல்பாதை பற்றியும் தெளிவாகத் தெரியலை. (கடலில் விழுந்தால், சுனாமி போன்ற பெரும் கடல்கோள் ஏற்படலாம்னும் பயமுறுத்தறாங்க; பூமி அழுக்குமயமாகிடும்னு சில இணைய தளங்கள் வேற பில்டப்பு!) அதனால் தான் விஞ்ஞானிகள் 'பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏன்னா, வாழ்க்கை எப்படியுமே நிச்சயமில்லை. நமக்குத் தெரியாத ஒரு கல்கோளினால் பூமி இடிபட்டு நாம் அழிவதற்கான வாய்ப்பு எல்லாவற்றையும் அதிகம்'னு ஆறுதல் சொல்றாங்க;-)

பயந்து போயிடலியே? NASA சொல்றாங்க, பூமிக்கு அபோஃபிஸ்னால‌ ஆபத்து வருவதற்கான நிகழ்தகவு சுமார் 1/450,000. அந்த கல்கோள், மனிதன் செய்த சுழல்கோள்கள் மேல் இடித்தால் அதன் வழித்தடம் பூமிக்கு இன்னும் அருகில் வரலாம்.... இல்லை, அடுத்த முறை சுழற்சியின் போது, பார்ப்போம்! சுழல்கோள்கள் போகும் உயரம் இணையத்திலிருந்து போட்டிருக்கேன். இவ்வளவு அருகில் அந்த கல்கோள் வரும் வாய்ப்பு இல்லைனு தோணுது. Err on the side of caution, Better safe than sorryங்கற ரீதியில் பேசுறாங்கன்னு நான் நினைக்கிறேன். பல விடயங்கள் இந்த கல்கோள் பற்றி தெளிவாயில்லை.

நான் இந்த பதிவைத் தொடங்கக் காரணம், ஒரு சிறுவன். ஜெர்மனியைச் சேர்ந்த இந்த பதின்ம வயதுச் சிறுவன் தன் பள்ளிப் பாடத்துக்காக இந்த அபோஃபிஸ் பற்றி ஆராய்ச்சி செய்தான். அப்ப அவன் சொன்னது NASA வின் கணக்கு தவறு, 1/400 வாய்ப்பு இருக்கிறது ந்னு. அவ்வளவு தாங்க, பத்திகிச்சு. யூரோப்பிய ESA வெளியிட்டதுங்கறாங்க, டிக்க் கூட செய்துட்டாங்க... இன்று நாஸா தன் கணக்கு சரின்னு சொல்லிடுச்சு.

நிம்மதியா தூங்கப் போகலாம், 2029க்கு அலாரம் செட் செய்யலாம்னு யோசனை!

பூமி மேல் எதாவது வந்து குறிப்பிட்ட வேகத்தில் மோதினால், என்ன ஆகும்னு கணக்கிட ஒரு கால்குலேட்டர் இருக்கிறது. பாருங்களேன்!

6 comments:

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

'அகராதி பிடிக்காத'வங்களுக்கு:
கல்கோள் = Asteroid
சுழல்கோள் = Satellite
பூவொத்தசுழல்கோள் = Geosynchronous Satellites

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

நாஸாவின் மறுப்பு விவரம் இதோ. பதிவில சேர்க்க விட்டுப் போச்சு. சும்மா திருப்பி பப்ளிஷ் செய்ய சோம்பல்.

துளசி கோபால் said...

பொடிக்கல்லாக் கிடைச்சா கம்மலோ நெக்லஸோ அப்ப எது ஃபேஷனோ அதுன்னு முடிவு செஞ்சுட்டேன்:-)

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

வாங்க துளசி டீச்சர்!

நல்ல ஐடியாவாக இருக்கே! ஒரு ரகசியம், இந்த ரங்கமணிகளுக்குத் தெரிந்தால் அது வரைக்கும் காத்திருங்க, 'அந்த வெயிட்டு'க்கு அஸ்ட்ரோ வெயிஸ்ட்லட் (ஹிஹி, ஒட்டியாணம்) செஞ்சு தருகிறோம்னு சொன்னாலும் சொல்லிடுவாங்க. நான் இந்த ஒட்டியாணத்துக்கு அப்ளிகேஷன் இப்பவே போட்டுக்கறேன்.

goma said...

இந்த பூமியை அழிக்க வெளியிலிருந்து எந்த கல்லும் வேண்டாம்.உலகத்தோரே ஒன்று கூடி அதைக் கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொண்டுதானே வருகிறார்கள்.சொன்னவர்..குண்டக்கா மண்டக்கா பேத்தானந்தா.

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

வாங்க கோம.....இல்ல, பேத்தானந்தா!! வரவு நல்வரவாகுக!

நிசம்மாவே கல்கோள் ஒண்ணு பக்கத்தில வரப்போவுதுன்னு சொல்றாங்க. நீங்க சொல்கிறாப்போல், அதுவரைக்கும் பூமி பத்திரமா இருந்தாத்தானே கவலைப் படணும்!