COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Friday, November 21, 2008

அமெரிக்க உளவுத்துறை அறிக்கை: நாளைய வல்லரசுகளில் இந்தியா, சீனா உண்டு, அமெரிக்கா இல்லை?

புதிசா எங்க ஊருக்கு ஜனாதிபதி வரும்போது, உளவுத்துறை அவரிட்ட, "இந்தாப்பா, இதான் இந்த ஊரு நிலைமை. செக்புக்குல கிழிக்கிறதுக்கு முன்னால, இதான் பாஸ்புக்கு"னு ஒரு அறிக்கை கொடுத்துடுவாங்க. இதே மாதிரி புஷ் ஐயா கிட்டயும் 4 வருடத்துக்கு முன்னால கொடுத்துருக்காங்க, அப்ப, 2004இன் பழைய அறிக்கையில், சப்ஜாடா "அமெரிக்கா 2020 வருடத்திலும் வல்லரசாகத் திகழும்"னு 'விட்டுருக்காங்க'.

4 வருடங்களில் எத்தனை மாறுதல்? அடுத்த வருடம் பதவி ஏற்கப் போகும் ஓபாமா கிட்ட கொடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், "2025க்குள் அமெரிக்கா வல்லரசாக இருக்காது. அரசியல், பொருளாதாரப் பேரரசுகளாய் இந்தியாவும் சீனாவும் இருக்கும்"னு சொல்கிறாங்க. போன அறிக்கையை நம்பிட்டோம், அதனால் இந்த அறிக்கையையும் நம்பிடுவோம்!

முக்கியமான கணிப்புகள்:

1. நாடுகள், சிறு நாடுகள், சின்னஞ்சிறு அரசாங்கங்கள் என்று மாறிவரும் அரசியல் பின்புலத்தில், ஐ.நா. போன்ற நிறுவனங்களின் மேலாண்மை இனி மிகக் கடினம். இப்ப மட்டும் என்ன கிழிச்சதாம்!

2. 2025க்குள் இந்தியா, சீனா வல்லரசுகளில் அமையும்; துருக்கி, இந்தனேஷியா, இரான் இவை வளர்ந்து வரும் நாடுகளில் வல்லமை பொருந்தியவையாய் இருக்கலாம். லாம்க்கு அர்த்தம் இவற்றின் தீவிரவாதப் போக்கு தணிந்தால்.

3. அரசியல் மாற்றங்களில், பொதுவுடைமை கொள்கையை விட இன்றைக்கும் சீனா, ரஷ்யா பின்பற்றும் அரசுசார் பொருள்முதல்வாதமே பொதுவாய் விரும்பப்படும் கொள்கையாய் இருக்கும். ஜனநாயக‌ பொருள்முதல்வாதம் மெதுவாய் மடியலாம். இங்கியும், எந்த தூரத்துக்கு, ஜனநாயக‌ பொருள்முதலான அமெரிக்க அரசாங்கம் தன் ஏழைக் குடிகளைக் காக்க வேண்டும்னு வாதம் நடந்திட்டு இருக்கு. அரசாங்கம் - எனவே அதன் கடமைகள், இருத்தலியல்னு வரும்போது, தனியார் கம்பெனி லெவல்ல போயிட்டு தான், மானுடம் வழிமாறும்னு தோணுது. இதைப் பத்தி இந்த புத்தக விமர்சனங்களிலும் பார்க்கலாம்.

4. வருகின்ற புதிய சமுதாயம் இளைய சமுதாயமாக இருக்கும். ஒளி படைத்த கண்ணினாய் வா வா!

பிற்சேர்க்கை: For whatever it is worth.

அ) இடதுசாரி என்று சிலரால் கருதப்படுகிற NPR வானொலி அலைவரிசையில் நான் கேட்ட செய்தியை, NPR இன் இணையதளத்தில் கண்டது; வரலாறும் மாறும் காலமிது:-)ஆ) நவம்பர் 20, 9மணியளவில் கூகிள் கேஷ் (நினைவுப்பெட்டகம்?)இல் சேமிக்கப்பட்ட இணைய தளப் பக்கத்திலிருந்து, தரப்பட்ட சுட்டி. சுட்டி மாறியிருக்கலாம். ஆனால், இந்த அமெரிக்க புலனாய்வுத் துறையின் அறிக்கையில், அமெரிக்கா வல்லரசுகளில் ஒன்றாயிருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

13 comments:

Arnold Edwin said...

இந்தியா வல்லரசு ஆகுதல் மகிழ்ச்சியே...
அதற்கு இன்னும் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டும் .முதலில் அரசியல்வாதிகள் பிற அரசியல்வாதிகளை காரணமின்றி பழிப்பதை நிறுத்த வேண்டும்.பிரச்சினை என்றால் கூடி பேசி தீர்ப்பதை விட்டு விட்டு ஆதாரமின்றி இவரை அவரும் அவரை இவரும் சாடுதல் தான் இன்றும் தொடர்கின்றது...மக்கள் ஓரணியில் நிற்க வேண்டும்.இங்கே பிரிவுபட்டல்லவா நிற்கிறார்கள்.பொருளாதாரத்தில் மட்டும் முதலிடம் பிடித்து நாட்டில் அமைதி,சகோதர உணர்வு இல்லையென்றால் என்ன செய்வது? அண்டை மாநிலத்திற்கு நீரைக் கூட வழங்க எத்தனை ஆண்டு யோசிக்கிறார்கள்? அண்டை மாநிலத்தவனை அடித்தல்லவா விரட்டுகிறார்கள்.எங்கிருக்கிறது சகோரத்தவம்? விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள் அவர்களைக் கட்டுப்படுத்த அரசால் என்ன தான் செய்து விட முடிகிறது? இந்திய சட்டம் வெறும் சட்டமாகவே அல்லவா உள்ளது! அது என்று சாட்டையாக மாறி இவர்களை தண்டிக்க போகிறது?

இன்னும் என்னவெல்லாமோ இருக்கிறது மாற்றுவதற்கு....

இது போன்றே நிலைமை தொடருமானால் வல்லரசாக இருக்கலாம் ஆனால் அமைதியிருக்காது.சாதனைகள் இருக்கும் ஆனால் சமாதானமிருக்காது இந்திய திருநாட்டில்.

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

வாங்க அர்னால்ட் எட்வின், வந்ததற்கும் கருத்து தந்ததற்கும் நன்றி.

முக்கியமான பாயின்டை சொல்லியிருக்கீங்க, பொது சமுதாய முன்னேற்றம் முதல் / முக்கிய‌ தேவைன்னு.

சமுதாய முன்னேற்றம் என்கின்ற யானைக்கு, சமயங்களில், பொருளாதார முன்னேற்றம் மணியாக இருந்திருக்கிறது.

க்ளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கியிருக்கும் இந்த வருடத்திய ரிலீஸ் "சேஞ்ச்லிங்", லாஸ் ஏஞ்சலிஸில் 1928இல் இருந்த ஊழல்கள் பற்றி சொல்கின்றது... இன்றைக்கும் அமெரிக்க பட்டினி, பிரிவினைச்சக்திகள் எல்லாம் தெரிந்த விஷயம்; இன்றைக்கும் அண்டை மாநில நீர்ப் பிரச்னை அமெரிக்காவில் எக்கச்சக்கமாக, கட்டாயமாக உண்டு!!

சுருங்கக் கூறின், பொருளாதார முன்னேற்றம் வரவர தீவிரவாதம் / பிரிவினைகள் குறையும்; மக்களின் விழிப்புணர்ச்சி பெருகும் என்றே நான் நம்புகிறேன். நான் பதிவில் குறிப்பிட்டிருக்கும் அறிக்கையில் சொல்கிறார்கள்: "இன்றைய வளர்ந்து வரும் இளைய சமுதாயம், தீவிரவாதத்தில் ஈடுபாட்டை குறைக்கும்"னு. மக்களால் பொருளாதாரமும், பொருளாதாரத்தால் மக்களும், அதனால் அரசியலும் மாற முடியும். நம்புவோம்.

நான் நிறைய பதிவில் சொல்லணும்னு நினைச்சேன், மதிய இடைவேளையில் அவசரமாய் இட்டது, என் இந்த கருத்தையும் சொல்ல வாய்ப்பு அமைச்சிட்டீங்க. நன்றி.

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

தொடர்ச்சியா, இன்னொரு கருத்தும்: சீனா அரசுசார் பொருள்முதல்வாதத்தை கடைபிடிக்கின்றது; பொதுவுடைமை ரஷ்யாவும் "கலர் மாறிப் போச்சு". தினப்படி வாழ்க்கையில் ரஷ்ய வன்முறை உலகப் பிரசித்தம். சீனாவிலோ, குதிருக்குள் யாருமே இல்லை என்கிறார்கள். எனவே, அர்னால்ட் எர்வினின் கருத்து கட்டாயம் ஒத்துக் கொள்ளப் பட வேண்டியது.

தன் பிரிவினை, நீர்ப் பாகுபாடு பிரச்னைகளுக்கு, சீனா இரும்பு கரத்தைக் கையாண்டிருக்கிறது. அது போல், இந்தியாவும் செய்ய வேண்டும்னு யாரோ தன் கருத்தை முன்வைத்திருந்தாங்க....

நசரேயன் said...

2025க்குள் காவிரி பிரச்சனை தீருமா? :)

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

நசரேயன் அண்ணே, எங்கூர்ல பங்காளி சண்டை போட்டுனு இருக்காங்க 15 வருஷமா, கோர்ட்டுல. அது கூட தீருமான்னு ரோசனை தான்.

On a serious note, காவிரி பிரச்சனை தீர்ந்தா நல்லா இருக்கும். எல்லாருக்கும் ஒப்புதல் உள்ள ஒரு தீர்வை தேவை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குடுகுடுப்பை said...

2. 2025க்குள் இந்தியா, சீனா வல்லரசுகளில் அமையும்; துருக்கி, இந்தனேஷியா, இரான் இவை வளர்ந்து வரும் நாடுகளில் வல்லமை பொருந்தியவையாய் இருக்கலாம். லாம்க்கு அர்த்தம் இவற்றின் தீவிரவாதப் போக்கு தணிந்தால்.//

ஆசியா ரூல்ஸ் அப்படிங்கறீங்க.


காவிரி பிரச்சினைய தீக்க பேசாம தமிழ்க்காரங்க எல்லாம் கன்னட பொண்ணுங்கல கல்யாணம் கட்டிக்கலாம்.

குடுகுடுப்பை said...

//உளறுதலே எம் பணி//

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

ஆட்காட்டி said...

இப்பிடிச் சொல்லிச் சொல்லியே கவுத்திடுவாங்கள். அது தான் இது. கனவு காண வசதியா இருக்கும்.

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

குடுகுடுப்பை, 'நல்ல காலம் பிறக்குது'ன்னு சொல்லலாம்! //ஆசியா ரூல்ஸ் அப்படிங்கறீங்க.//

//காவிரி பிரச்சினைய தீக்க பேசாம தமிழ்க்காரங்க எல்லாம் கன்னட பொண்ணுங்கல கல்யாணம் கட்டிக்கலாம்.// தமிழ்ப் பொண்ணுங்களுக்கும் அதே ஐடியாவா? தப்பான ப்ளாகுக்கு வந்துட்டீங்க.

//உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்// ஆஹா, இந்த இடுகைக்கான தீர்ப்பு மரண தண்டனை போலிருக்கு:-P

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

ஆட்காட்டி, (உங்க அண்ணன் தம்பிங்க, கட்டை, நடு, மோதிர, சுட்டு விரல்கள் நலமா?)

//கவுத்திடுவாங்கள். // அதுவும் கரக்டு தான்:-) ஆனால், இப்படி தைரியமா ஒரு அறிக்கையை அவுங்க ஜனாதிபதிக்கு கொடுத்து ஒரு பயங்காமிச்சிருக்காங்களே! அமெரிக்க வரலாற்றில், இந்த மாதிரி பெரிய பொருளாதார பிரச்னை வரும்போது, போனமுறை, உலகப் போரைத் தொடங்க்கியது அமெரிக்கா. இந்த முறை எஞ்சியிருப்பது அதிகம் இல்லை. எதுனாலும், இவிங்க நல்லா முயற்சி செய்யணும். கிரிக்கெட் எடுத்துக்காட்டுன்னா, அஞ்சு நாள் ஆட்டம், பாட்ஸ்மேன் நின்னு ஆடுவாரு, ஒரே ஒரு வித்தியாசம்: கோவம் வந்தா சுட்டுடுவாரு:-) பாப்போமே, ஆட்டம் எப்படி போகுதுன்னு!

ஆட்காட்டி said...

ஆட்காட்டி விரல் அல்ல நான். பறவை. சும்மா தன் பாட்டுக்கு இருக்கும். யாராவது இடைஞ்சல் செய்தால் சத்தம் போட்டிட்டு பறக்கும். வேற ஒண்ணுமே பண்ணாது.

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

//யாராவது இடைஞ்சல் செய்தால் //

ஆட்காட்டி, மன்னிக்க, நான் உங்க பேரைப் பார்த்து தீர்மானிச்சதுக்கு!
சத்தம் போட்டுடாதீங்க:-))))

குமரன் (Kumaran) said...

நம்புவோம் அக்கா. :-)