அடுத்த பதிவு போட தயாராகலாம் என்று கொஞ்சம் வலைகளை மேய்ந்து கொண்டிருந்தேன்.
போதாயன முனிவர் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று தொடங்கினேன். கி.மு 8ம் நூற்றாண்டுஇல் வாழ்ந்த கணித மேதை. அவருடைய வாழ்க்கை கி.மு 4ம் நூற்றாண்டு என்றும் கூறுகிறார்கள். அதாவது மகாபாரதம் கி.மு 5வது நூற்றாண்டு அதுக்கப்புறம் நம்மாளு வாழ்ந்தார்;
மகாபாரதம் / கீதை பிரம்ம சூத்திரம் பற்றிய போதாயனரின் உரைகளை வைத்து ராமானுஜர் அவருடைய உரைகளை (பாஷ்யம்) எழுதினார் என்றும் சொல்கிறார்கள். அத்துடன் மகாபாரதப் போரில், கண்ணன் சுதர்சன சக்கரத்தை வீசியதை கால விஞ்ஞானிகள் கணக்கு எடுத்துக் கொள்வதாகவும், நம் ஆள் சின்சியர் சிகாமணியாக அதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தந்தை சொல்லியிருக்கிறார் (என்று நினைக்கிறேன்).
என் தேடல், போதாயனருடைய (முக்கோண/சதுர பரப்பளவு காணும் சூத்திரம் பற்றி இன்னும் விரிவாக அறிய. பிதாகோரஸ் கோட்பாடு (Pythagorean theorem) என்று நாம் கற்றுக் கொண்டதை இவர் அதற்கும் முன் கண்டுபிடித்தவர் என்பார்கள். (இதற்கும் நான் அடுத்து போட இருந்த பதிவுக்கும் தொடர்பு விரைவில் எனக்கு குடுகுடுப்பாண்டி வந்து சொல்லுவார்; கு.கு.பா சொன்னாருன்னா, நானும் உங்களுக்கு சொல்கிறேன்).
முதல்ல கிடச்சது இது. தமிழர் (டி.எல். சுபாஷ் சந்
திர போஸ், பெயரை எழுதிய வகையிலே தமிழர் என்றே தோன்றுகிறது) இன்னொரு (ஜாக் ஆன்ட்ரூஸ்) வருடன் செய்த ஆராய்ச்சி (போல் இருக்கிறது). தமிழ் / ஹரப்பா / பொலிவியா வில் கிடைக்கப் பெற்ற கோல வடிவங்களின் ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள். முடிந்தால் படித்துப் பாருங்கள்.
பை (வட்டத்தின் பை!)
pi - பற்றிய அவருடைய கண்டுபிடிப்பு பற்றியும் வலைந்திருக்கிறார்கள். இதற்கும் முக்கோண / சதுர பரப்பளவுக்கும் தொடர்பு உண்டு. விரும்புபவர்கள் முதல் உரலில் இடித்துப் பார்க்கவும்.
அதற்கும் மேல இன்னும் தேடினால்,
கூகிளாண்டவர் நூலகத்தில் அவருடைய முக்கோண / சதுர பரப்பளவு / நீளம் பற்றிய கோட்பாடு கிடைக்கப் பெற்றது இன்னும்.
சரி சரினு பதிவு செய்தாகி விட்டது.
தேடல் இன்னும் தொடரும்.
பிற்சேர்க்கை:
தேடல் தொடரும் என்று சொல்லி ஒரு வருடம் கூட :-) ஆகவில்லை. (பார்க்க பின்னூட்டம்). குமரன் திருத்தியதை கூகிளாண்டவரிடம் முறையிட்டதில், இன்னும் செய்திகள் தந்திருக்கிறார். தம் எழுத்துக்களில், மகாபாரதம்/கீதை பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அந்த குறிப்பைப் பற்றிய "வரலாறு" கூட இன்னமும் பெரும் அறிஞர்களின் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
1. கோழி/முட்டை எது முந்தி: http://www.dvaita.org/madhva/brahma_suutra.html
2. எந்த ஊர் கோழி: http://en.wikipedia.org/wiki/Baudhayana_Shrauta_Sutra#BSS_18:44_controversy