COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Saturday, September 22, 2007

போதாயனர் பற்றிய தேடல்...

அடுத்த பதிவு போட தயாராகலாம் என்று கொஞ்சம் வலைகளை மேய்ந்து கொண்டிருந்தேன்.

போதாயன முனிவர் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று தொடங்கினேன். கி.மு 8ம் நூற்றாண்டுஇல் வாழ்ந்த கணித மேதை. அவருடைய வாழ்க்கை கி.மு 4ம் நூற்றாண்டு என்றும் கூறுகிறார்கள். அதாவது மகாபாரதம் கி.மு 5வது நூற்றாண்டு அதுக்கப்புறம் நம்மாளு வாழ்ந்தார்; மகாபாரதம் / கீதை பிரம்ம சூத்திரம் பற்றிய போதாயனரின் உரைகளை வைத்து ராமானுஜர் அவருடைய உரைகளை (பாஷ்யம்) எழுதினார் என்றும் சொல்கிறார்கள். அத்துடன் மகாபாரதப் போரில், கண்ணன் சுதர்சன சக்க‌ரத்தை வீசியதை கால விஞ்ஞானிகள் கணக்கு எடுத்துக் கொள்வதாகவும், நம் ஆள் சின்சியர் சிகாமணியாக அதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தந்தை சொல்லியிருக்கிறார் (என்று நினைக்கிறேன்).

என் தேடல், போதாயனருடைய (முக்கோண/சதுர பரப்பளவு காணும் சூத்திரம் பற்றி இன்னும் விரிவாக அறிய. பிதாகோரஸ் கோட்பாடு (Pythagorean theorem) என்று நாம் கற்றுக் கொண்டதை இவர் அதற்கும் முன் கண்டுபிடித்தவர் என்பார்கள். (இதற்கும் நான் அடுத்து போட இருந்த பதிவுக்கும் தொடர்பு விரைவில் எனக்கு குடுகுடுப்பாண்டி வந்து சொல்லுவார்; கு.கு.பா சொன்னாருன்னா, நானும் உங்களுக்கு சொல்கிறேன்).

முதல்ல கிடச்சது இது. தமிழர் (டி.எல். சுபாஷ் சந்திர போஸ், பெயரை எழுதிய வகையிலே தமிழர் என்றே தோன்றுகிறது) இன்னொரு (ஜாக் ஆன்ட்ரூஸ்) வருடன் செய்த ஆராய்ச்சி (போல் இருக்கிறது). தமிழ் / ஹரப்பா / பொலிவியா வில் கிடைக்கப் பெற்ற கோல வடிவங்களின் ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

பை (வட்டத்தின் பை!) ‍ pi - பற்றிய அவருடைய கண்டுபிடிப்பு பற்றியும் வலைந்திருக்கிறார்கள். இதற்கும் முக்கோண / சதுர பரப்பளவுக்கும் தொடர்பு உண்டு. விரும்புபவர்கள் முதல் உரலில் இடித்துப் பார்க்கவும்.

அதற்கும் மேல இன்னும் தேடினால், ‍கூகிளாண்டவர் நூலகத்தில் ‍ அவருடைய முக்கோண / சதுர பரப்பளவு / நீளம் பற்றிய கோட்பாடு கிடைக்கப் பெற்றது இன்னும்.

சரி சரினு பதிவு செய்தாகி விட்டது.

தேடல் இன்னும் தொடரும்.

பிற்சேர்க்கை:
தேடல் தொடரும் என்று சொல்லி ஒரு வருடம் கூட :-) ஆகவில்லை. (பார்க்க பின்னூட்டம்). குமரன் திருத்தியதை கூகிளாண்டவரிடம் முறையிட்டதில், இன்னும் செய்திகள் தந்திருக்கிறார். தம் எழுத்துக்களில், மகாபாரதம்/கீதை பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அந்த குறிப்பைப் பற்றிய "வரலாறு" கூட இன்னமும் பெரும் அறிஞர்களின் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
1. கோழி/முட்டை எது முந்தி: http://www.dvaita.org/madhva/brahma_suutra.html
2. எந்த ஊர் கோழி: http://en.wikipedia.org/wiki/Baudhayana_Shrauta_Sutra#BSS_18:44_controversy

10 comments:

Unknown said...

வழக்கம் போல்!

இ-கலப்பை காலை வாரியடிக்கிறதே! சொற் குற்றம், பொருட் குற்றம் காணிற், பின்னூட்டம் வீசுக!

மெளலி (மதுரையம்பதி) said...

போதாயனர் பற்றி எனக்குத் தெரியாத புதிய தகவல்கள்...நன்றி கெக்கேபி...

ஆமா, அதென்ன இப்படி ஒரு பெயர் (கெக்கேபிக்குணி)....அதுக்கு ஒரு விளக்கப் பதிவு ஏதும் உண்டா?.

Unknown said...

வாங்க வாங்க மௌலி சார், வரவு நல்வரவாகுக! எனக்கும் ராமானுஜரின் உரைக‌ளுக்கு போதாய‌ன‌ரின் உரை (பாஷ்யம்) ப‌ய‌ன்ப‌ட்ட‌து என்று இர‌ண்டு நாள் முன் தான் தெரியும்! கூகிளாண்ட‌வ‌ரே துணை;-))

என் இரண்டாவது பதிவு-‍ல் சொல்லியிருக்கேனே! "வாயத் தொறந்தா, ஒரே உளறல் தான்....என் கெக்கே-பிக்குத்தனத்தாலே..."

அது என்னா, தெக்கத்திக்காரவுங்க என் பேரைய‌ப் ப‌த்திக் கேக்க‌றீங்க‌!?! குமரன் கேட்டாஆஆஆரு; ஜீரா கேட்டாஆஆஆரு, நீங்க கேக்கறீஈஈங்க...(சினிமா ஸ்டைலில் படிக்கவும்:‍-) உங்க‌ ஊரு பக்கத்துல‌ கெக்கே பிக்கேனு பேச‌ மாட்டாங்க‌ளா? கோக்கு மாக்கா பேசுவாங்க‌ளோ?!!

மெளலி (மதுரையம்பதி) said...

//உங்க‌ ஊரு பக்கத்துல‌ கெக்கே பிக்கேனு பேச‌ மாட்டாங்க‌ளா? கோக்கு மாக்கா பேசுவாங்க‌ளோ?!!//

எங்கூருல எகணை-மொகணையா கூட பேசுவாங்க :-).

எங்கம்மா ஏணிமடை-நோணிமடைன்னு பேசுவதாக சொல்லுவாங்க.

ambi said...

போதாயனர் பற்றி எனக்குத் தெரியாத புதிய தகவல்கள்...நன்றி ஹை!

போதயன அமாவாசை இவர் கணக்கிட்டது தானா? :p

சத்யமா உங்கள வெச்சு காமடி கீமடி எதுவும் பண்ணலை.(முதல்ல இப்படி தான் ஆரம்பிக்கனும்). :))

Unknown said...

வா(ரு)ங்க, வா(ரு)ங்க அம்பி. நல்வரவாகுக.

ஆம், போதாயனரின் கணித வழிகளைப் பின்பற்றும் வகுப்பினர் அந்த அமாவாசை அன்று திதி வழிமுறைகள் செய்வர். மகாபாரதப் போரில் கிருஷ்ணன் சக்கரம் இட்டதை இவர் கணக்கில் எடுக்காமல் அமாவாசை கணக்கிட்டதால், சில சமயம் அப்படி இப்படி என்று மாற்றாரோடு ஒவ்வாமல் வரும்;-)) போதாயன திருமண, திதி வழிமுறைகள் எல்லாமே நேரம் எடுக்கும் (ஒக்காந்தவங்களைக் கேட்டாத் தெரியும்;-))))

ஆஹா, நீங்க காமெடி பண்றவரில்லன்னு சிவமேன்னு இருக்கறவருன்னு உலகமே கீதாம் பாடுதே! தெரியாதா?

குமரன் (Kumaran) said...

கெக்கேபிக்குணி. போதாயண சூத்திரத்தைக் கொண்டு இராமானுஜர் எழுதுனது பிரம்மசூத்திரத்துக்கான பாஷ்யம். கீதா பாஷ்யம் இல்லை. ஆனா அவர் ஒரு கணித மேதைன்னோ காலக்கணக்கு தந்தவர்ன்னோ இன்னைக்குத் தான் தெரியும். :-)

நன்றிகள்.

Unknown said...

குமரன், ஆனாலும் நீங்க ஸ்லோ;) பதிவிட்டு ஒரு வருடம் ஆவதற்குள் பின்னூட்டமளித்த உங்களை மெச்சினோம்;)

ஆமா, நான் எழுதினது தவறு, திருத்திக் கொண்டேன்.

இன்னும் சொல்லப் போனால், தம் உரைகளில் போதாயனர் கீதையையும் மகாபாரதத்தையும் குறிப்பிட்டிருப்பதாகச் சொல்வது... அதையும் பதிந்தாச்சு. நன்றி, குமரன். (நானும் நன்றி சொல்லியாச்சு!)

R. Gopi said...

உங்கள் பதிவு பற்றி இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்

http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_13.html

anandrajah said...

அடங்கப்பா.. அசத்தீடீங்காக்கா..! நல்ல ஆக்கபூர்வமான பதிவு..!